ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம்: பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramzan

ramzan

தமிழகம் முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க:

Advertisment

உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

திருநாவுக்கரசர், தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சி:

இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

Advertisment
Advertisements

நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்:

இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.

உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ம.க:

ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Ramzan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: