/tamil-ie/media/media_files/uploads/2019/05/z693.jpg)
Tamilnadu political news
Latest Tamil News: தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்துவிதமான முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சார வேலையில் ஈடுபட்டு வருகின்றார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
Live Blog
political news : தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு..
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி. என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து கூறியதாக கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார். ய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பற்றி சில அவதூறு கருத்துக்களை கூறியதாக அவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு.
— Kamal Haasan (@ikamalhaasan) 17 May 2019
சூலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மனுவை அனுப்பியுள்ளார்.
அரவக்குறிச்சியில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.காவல்துறையைக் கண்டித்து அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல் ஹமீது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க.வினர் செருப்பை தூக்கி காட்டியதால் பதற்றம் உருவானது.
நடிகர் கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் தமிழக அரசியல் அநாகரிகத்தின் களமாக மாறிவருவது கவலையளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் மீது செருப்பு, முட்டை வீச்சு என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தமிழக அரசியல் அநாகரீகத்தின் களமாக மாறிவருவது கவலையளிக்கிறது. சங்பரிவார் கும்பலின் கொட்டத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பாகும். இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.@ikamalhaasan pic.twitter.com/NXxdtVWgrZ
— Thol.Thirumavalavan (@thirumaofficial) 17 May 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights