தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்காக தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக சார்பில் முதல்வர் பழனிச்சாமி. திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என மொத்தம் 9 கட்சிகள் கூட்டணியில் களமிறங்குகின்றன. இதனால் இந்த கட்சிகள் தற்போது தொகுதி பங்கீட்டில் திவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மேலும் தமிழக சட்டசபை தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அதிமுக கட்சியுடன் கூட்டணியில் களமிறங்குகிறது. இதே கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் விரைவில் தொகுதிப்பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு பெரும் கட்சிகளுக்கு இடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வரும் தனித்து போட்டியா அல்லது வேறுகட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனாலும் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு இணையாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் மூன்று பேருமே தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ஊழல் புகார் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில், மற்ற கட்சிகள் கூட்டணி கட்களுடன் களமிறங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட உள்ள இந்த கட்சி, இன்னும் பிரச்சாரத்தை சரிவர தொடங்காத நிலையில், நேரடியாக 35 தொகுதிகளுக்கான தனது வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.08 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்நிலையில், 2021 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.