Admk and Ammk Executives Join In DMK : சமீப நாட்களாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகள் நீக்கப்படும் படலம் தொடர்ந்து வரும் நிலையில், நீக்கப்பட்ட சில முன்னாள் எம்எல்ஏகள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததில் இருந்து அதிமுகவில் நாளுக்கு நாள் பலவகையாக திருப்பங்கள் அரங்கேறி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆட்சிகாலத்தில் நடைபெற்றுவந்த இபிஎஸ் ஒபிஎஸ் சண்டை தற்காலிகமாக சமாதானத்திற்கு வந்துள்ள நிலையில், தேர்தல் முடிவு வெளியானதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதில் நாள்தொறும் வெளியாகி வருகிறது. இதனால் சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த வகையில், தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் கோபி நகர அதிமுக செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட 20 பேர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, மற்றும் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவர்களும், அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், மானாமதுரை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.மாரியப்பன் கென்னடி ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து விலகி தனியான அமமுக கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் செய்தித்தொடாபாளராக இருந்த, அவர், மானாமதுரை தொகுதியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியில் தோல்வியடைந்தார்.
தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கிய அவர் மீண்டும் தோல்வியை தழுவிய அவர், தறபோது அக்கட்சியில் இருந்து விலகி, சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைத்துக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என மக்கள் நம்புகின்றார்கள் இதனால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil