கோவை சின்னியம்பாளையத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,
கோவை மாவட்டம் நிர்வாகிகளுடன் பபூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் அமலாக்கதுறை தீர்ப்பு எதிர்பார்த்தபடி வந்து உள்ளது. 2021 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வட தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக 10.5% உள் ஒதுக்கீடு வழங்கினார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது 10.5% செய்யாமல் ஆட்சி முடிகின்ற நேரத்தில் அறிவித்து வன்னியர் மக்களை ஏமாற்றி உள்ளார்.
இதனால் மற்ற சமூக மக்களும் ஏமாந்துவிட்டார். தென் தமிழகத்தில் வாழும் 109 சமுதாய மக்களை ஏமாற்றி விட்டார். எடப்பாடி தொகுதியில் வெற்றி பெறுவதற்காக இதுபோல் செய்து விட்டார். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்ததினால் அவர் ஆட்சியை இழந்தார். இரண்டு ஆண்டுகளாக பயந்து கொண்டே இருந்த எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தல் வருவதனால் பசும்பொன் செல்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சங்கரன்கோவில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை கூட்டி வந்துள்ளார்கள். அங்கே எங்கு பார்த்தாலும் காலி நாற்காலியாக இருந்தது. காலி நாற்காலி பார்த்து எடப்பாடி பழனிச்சாமி சவால் விட்டு பேசியுள்ளார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் தோல்வியை சந்திக்க போகிறார்.
மகாபாரதத்தில் துரியோதரன் இறுதியில் எப்படி வீழ்ச்சியை சந்தித்தாரோ அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி வீழ்ச்சியை மட்டும் தான் சந்திப்பார். துரியோதரன் போல துரோக சிந்தனை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி வீழ்ச்சியை சந்திக்க போகிறார். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக பங்கேற்கும். தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அமமுக சிறப்பாக செயல்படும். பாஜக,காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுடன் பிரதமரை தீர்மானித்தார்கள் அந்த கூட்டணியில் இருக்கலாம் அல்லது தன்னிச்சியாகவும் நிற்கலாம்.
யாரையும் நம்பி ஆரம்பித்த கட்சியில் இல்லை தொண்டர்கள் நம்பி ஆரம்பித்த இயக்கம். அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காக கட்சி தொடங்கப்பட்டது. லட்சியத்தை தொடும் வரை ஓயமாட்டோம். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகள் ஆலோசித்துக் பிறகு தான் கூற முடியும் என தெரிவித்தார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.