/indian-express-tamil/media/media_files/2025/05/13/OjEyiOPmjPvAkJ4lKPmM.jpg)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயது. இத தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி டவுன் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ டிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு சி.பி.ஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்க்கில், பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன்பால், பாபு என்கின்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை, கோவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இதில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி நந்தினி தேவி, A1 சபரிராஜன்- 4 ஆயுள் தண்டனை, A2 திருநாவுக்கரசர்- 5 ஆயுள் தண்டனை, A3- சதீஷ் 3 ஆயுள் தண்டனை, A4- வசந்தகுமார் 2 ஆயுள் தண்டனை, A5 மணிவண்ணன் 5 ஆயுள் தண்டனை, A6 பாபு 1 ஆயுள் தண்டனை, A7 ஹெரன்பால் 3 ஆயுள் தண்டனை, A8 அருளானந்தம் 1 ஆயுள் தண்டனை, A9 அருண்குமார் 1 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்பு தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) May 13, 2025
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி
அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 13, 2025
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார்… https://t.co/xlCfNEeGY2
மு.க.ஸ்டாலின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
— Udhay (@Udhaystalin) May 13, 2025
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு…
இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்! என்று பதிவிட்டுள்ளார்.
த.வெ.க விஜய்
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
— TVK Vijay (@TVKVijayHQ) May 13, 2025
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை…
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
— K.Annamalai (@annamalai_k) May 13, 2025
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள்…
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
நயினார் நாகேந்திரன்
பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.
— Nainar Nagenthiran (@NainarBJP) May 13, 2025
பெண்கள்…
பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.
அன்புமணி ராமதாஸ்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 13, 2025
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்! பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பிரேமலதா விஜயகாந்த்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றத்தைப் பாராட்டி அறிக்கை - 13.05.2025#PollachiCase #PremalathaVijayajanth #Dmdk pic.twitter.com/X5ylqPAouI
— Captain News (@captainnewstv) May 13, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றத்தைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழிசை சௌந்திரராஜன்
மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்...…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 13, 2025
மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்... தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்... பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும்.. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.