Advertisment

சாவர்க்கர் வரலாற்றை தமிழக அரசியல் கட்சியினர் படிக்கவேண்டும் - மத்திய அமைச்சர் முரளிதரன்

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் இல்லை என யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்கள் முதலில் வரலாற்றை படிக்கவேண்டும் எனக் கூறினார்.

author-image
WebDesk
New Update
சாவர்க்கர் வரலாற்றை தமிழக அரசியல் கட்சியினர் படிக்கவேண்டும் - மத்திய அமைச்சர் முரளிதரன்

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நேற்று விமானம் மூலம் வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வரவேற்றார். பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையிலான பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருச்சி ஹிந்தி பிரச்சார சபா விழாவில் கலந்து கொண்ட பின் மத்திய அமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Advertisment

அப்போது, இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார சிக்கலை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்கும் முயற்சி நடைபெறுகிறதா? என்று கேட்டபோது, கச்சத்தீவு விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சனை. இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் எதுவும் கூற இயலாது என்றார்.

2024 நாடாளுமன்ற தேர்தலின்போது ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

சீமான், சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் இல்லை எனக்கூறி பாஜகவுக்கு எதிரான குரல்களை உயர்த்தியது குறித்து கேட்டபோது, சாவர்க்கர் குறித்து யார் அப்படி கூறியது என்று எனக்கு தெரியவில்லை. அப்படி யார் யாரெல்லாம் சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரர் இல்லை எனக் கூறுகிறார்களோ அவர்கள் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடு எப்படி உள்ளது? எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு பாஜக திமுக அரசின் ஊழல், குடும்ப ஆட்சியை கடுமையாக விமர்சிப்பதோடு அதனை பொதுமக்களிடம் கொண்டுச்செல்லும் பணியை செய்து வருகிறது. தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.

சீன உளவு கப்பல் இலங்கை வந்துள்ளதை மத்திய அரசு எப்படி கையாள்கிறது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ர்வதேச எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீன கப்பலை கவனித்து வருகிறோம். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பாடாத வண்ணம் அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

முன்னதாக, சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும், அவரது பெயரை தவறாக தியாகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் விமர்சித்து வரும் நிலையில் பாஜகவினர் சாவர்க்கரை போற்றி பேசுவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment