மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார்: சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக புது வியூகம்

Innova Car For TN BJP District Leaders: அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும்

innova car for TN BJP District leader
Innova car for TN BJP District leader

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,பாஜக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வி.பி துரைசாமி,”சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், தமிழக அரசியல் களம் திமுக vs பாஜக என உருவெடுத்துள்ளது. நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார் .

 

இந்நிலையில், தமிழக பாஜாகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய  எல்.முருகன், ” அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சியே, தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும்  நிலை உருவாகும்” என மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த சட்டபேரவைக் கூட்டத்தில், கணிசமான பாஜக- வினர்  சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்று கூறிய முருகன், “பாஜக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும்” என்று ஊக்கப்படுத்தினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், ”  ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று தெளிவுபடுத்தினர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கூட்டணியில் இருந்து தமிழகத்தில் 5 இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில், ஒன்று அக்கட்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu politics bjp state president l murugan offered innova car for district leaders

Next Story
2-வது தலைநகராக மதுரை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புது மூவ்minister RB Udhayakumar demands Madurai 2nd capital of tamil nadu, madurai should be made the second capital of Tamil Nadu, madurai, ஆர்பி உதயகுமார், சென்னை, மதுரை 2வது தலைநகரம், அமைச்சர் ஆர்பி உதயகுமார் கோரிக்கை, 2nd capital madurai, chenani, tamil nadu capital, minister rb udhayakumar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express