Chennai News Highlights: ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் – இ.பி.எஸ்

Tamil Nadu Latest News Update in Tamil 15 September 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update in Tamil 15 September 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பேரறிஞர் அண்ணா பிறந்த தினம்: மு.க..ஸ்டாலின் பதிவு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை (செப்டம்பர் 15) முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்! என்று பதிவிட்டுள்ளார்,

  • Sep 15, 2025 22:18 IST

    ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் – இ.பி.எஸ்

    ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம், அ.தி.மு.க தலைமையகத்தை அடித்து நொறுக்கியவர்களை எப்படி சேர்க்க முடியும்? என சென்னை வடபழனி பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் 



  • Sep 15, 2025 21:44 IST

    விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தெரிந்திருக்கும் - நயினார் நாகேந்திரன்

    த.வெ.க தலைவர் விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தெரிந்திருக்கும். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கருணாநிதி எழுதியுள்ளார், அதை விஜய் படிக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Sep 15, 2025 21:19 IST

    அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள் – இ.பி.எஸ்

    அ.தி.மு.க.,விற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Sep 15, 2025 20:49 IST

    அமித்ஷா அறிவிக்கும் முதல்வர் வேட்பாளருக்கு பிரசாரம் செய்வேன் என்று கூறியவர் டி.டி.வி தினகரன் – நயினார் நாகேந்திரன்

    அ.தி.மு.க-வில் ஜனநாயகம் உள்ளதால் அனைவரும் டெல்லி சென்று தலைவர்களை சந்திக்கின்றனர். அமித்ஷா யார் முதல்வர் என்று சொல்கிறாரோ, அவருக்கு பிரசாரம் செய்வேன் என்று சொன்னவர் டி.டி.வி தினகரன் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்



  • Sep 15, 2025 19:46 IST

    அடுத்த பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை

    அடுத்த பிரசார பயணம் குறித்து தலைமை நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார். பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. திட்டத்தை மாற்றி அமைக்கலாமா அல்லது எப்படி திட்டமிட்ட இடங்களில் உரையை நிறைவு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.



  • Sep 15, 2025 19:45 IST

    கிராண்ட் சுவிஸ் செஸ் - தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் தொடரை வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் கேன்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட வைஷாலி தகுதியடைந்துள்ளார்.



  • Sep 15, 2025 19:26 IST

    10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 15, 2025 19:13 IST

    முப்படை தளபதி மாநாடு: தொடங்கிவைத்த மோடி

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு இன்று முதல் செப்.17 வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.



  • Sep 15, 2025 19:11 IST

    ஐடிஆர் இணையதளம் முடக்கம்: பயனர்கள் அவதி

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. இதையடுத்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்தக் கோரிக்கை ட்ரெண்டிங்கில் உள்ளது.



  • Sep 15, 2025 19:10 IST

    கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார் மல்லை சத்யா

    மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தனது புதிய கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். 7 நட்சத்திரங்களுடன் கருப்பு, சிவப்பு வண்ணங்களில் கொடியை அறிமுகம் செய்த மல்லை சத்யா கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.



  • Sep 15, 2025 19:09 IST

    சென்னை, 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 8 மணி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     



  • Sep 15, 2025 19:08 IST

    ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக மனுவில் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளதாகக் கூறி, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Sep 15, 2025 19:07 IST

    நாய்க்கடியால் கடந்த 8 மாதங்களில் 22 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் ரேபிஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் உயிரிழப்பை குறைக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 15, 2025 18:39 IST

    தங்கம் வென்ற தமிழக வீரர்

    உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்த்குமார்  தங்கம் வென்றார். நேற்று நடைபெற்ற 500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தார். ஆனந்த்குமார் உலக ஸ்கேட்டிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆனந்த்குமாருக்கு பாராட்டு குவிந்தனர். 



  • Sep 15, 2025 18:38 IST

    சுவிஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற வைஷாலி!

    கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி வென்றார். இதன்மூலம் 2026 உலக சாம்பியன்ஷின் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். 



  • Sep 15, 2025 17:53 IST

    வக்ஃபு சட்டம்: உச்ச நீதிமன்ற உத்தரவு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – ஸ்டாலின்

    வக்ஃபு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

    தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை 
    2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
    3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
    4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

    இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.



  • Sep 15, 2025 17:47 IST

    டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கும் இ.பி.எஸ்

    பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். மேலும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்



  • Sep 15, 2025 17:28 IST

    நீதிக்கு கிடைத்த வெற்றி; வக்ஃபு சட்டதிருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விஜய் வரவேற்பு

    நீதி, சமத்துவம், மத சுதந்திரத்தை குறைக்க முற்படும் விதிகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு நீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என வக்ஃபு சட்டதிருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்



  • Sep 15, 2025 17:01 IST

    திமுகவில் இணையும் தவெகவினர்: எம்எல்ஏ நந்தகுமார்

    திமுகவில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இணைந்து வருகின்றனர்;
    தவெகவின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுவில் இணைகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு - நிர்ணயித்த இலக்கை விட 58 ஆயிரம்
    உறுப்பினர்களை அதிகமாக இணைத்துள்ளோம்- திமுக எம்எல்ஏ நந்தகுமார்



  • Sep 15, 2025 16:58 IST

    தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி!

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்; உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பு. இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது; ஆனால் பணி செய்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? தேர்தலுக்கு பணம் செலவழிக்கும் உங்களுக்கு செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா?

    தமிழ்நாட்டில் ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்வி.



  • Sep 15, 2025 15:51 IST

    ராமதாஸ் இருக்கும் இடம்தான் பாமக - அருள் எம்.எல்.ஏ

    தேர்தல் ஆணையம் அனுப்பியதாக பாகு காட்டிய கடிதத்தில் அன்புமணி(யின்) பெயர் எங்கேயும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலைக் கூறியுள்ளார். கட்சிக் கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என பாகு மட்டுமல்ல, வேறு யாராலும் கூற முடியாது"

    ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் பேட்டி



  • Sep 15, 2025 15:46 IST

    விஜய் சென்னையில் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு மனு.

    விஜய் செப்டம்பர் 27-ஆம் தேதி வடசென்னையிலும், நவம்பர் 25-ஆம் தேதி தென்சென்னையிலும் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



  • Sep 15, 2025 15:40 IST

    கூட்டணி குறித்து அன்புமணிதான் முடிவெடுப்பார்: திலகபாமா

    கூட்டணி குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் பேச முடியாது. அவர் தலைவர் அல்ல; கூட்டணி குறித்து அன்புமணிதான் முடிவெடுப்பார் 

    - திலகபாமா பேட்டி



  • Sep 15, 2025 15:21 IST

    தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன்

    நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு அக்டோபர் 30-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.  நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சொந்த பணமாக ரூ. 100 கோடியை நிதி டெபாசிட் செய்ய உத்தரவிட்டது



  • Sep 15, 2025 14:59 IST

    வக்ஃப் சட்டத் திருத்தத்தின் சில அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை - ஸ்டாலின் வரவேற்பு

    தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை 
    2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
    3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
    4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

    இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது." என்று பதிவிட்டுள்ளார். 



  • Sep 15, 2025 14:57 IST

    ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவில் விதி மீறல் இல்லை - உச்சநீதிமன்றம்

    ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பூங்காவில் விதி மீறல்கள் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வன உயிரியல் பூங்காவை ஆய்வு செய்த குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. குஜராத் ஜாம்நகரில் பல ஆயிரம் ஏக்கரில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வனதாரா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வனதாரா பூங்காவுக்கு விலங்குகள் வாங்கியதில் முறைகேடு என புகார் எழுந்தது.



  • Sep 15, 2025 14:55 IST

    நிதி மோசடி வழக்கு - தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் 

    நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைகால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொந்த பணமாக 100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நிதிமனறத்தில் டெபாசிட் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 15, 2025 14:55 IST

    விஜய் அ.தி.மு.க-வுக்கு மாற்றா? - சசிகலா பதில்

    "புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். விஜய் திமுக மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அவ்வளவு தான்." என அண்ணா, எம்.ஜி.ஆர் போட்டோக்களை விஜய் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கும் அவர் அதிமுகவுக்கு மாற்றாக மாற முயற்சிக்கிறாரா என்ற கேள்விக்கும் சசிகலா பதில் அளித்துள்ளார். 



  • Sep 15, 2025 14:30 IST

    2026 தேர்தலுக்கு முன் அ.தி.மு.க இணைய வேண்டும் - ச‌சிகலா அழைப்பு 

    "2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க இணைந்தால் தான் கட்சிக்கு நல்லது. அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் நினைகிறார்கள், நானும் அதை தான் விரும்புகிறேன். நிராகரிப்பது மிகவும் சுலபம், சேர்ப்பது என்பது மிகவும் கடினமான பணி, அதற்கு காலம் எடுக்கும். தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் எங்கள் வேலை, அதை நோக்கி தான் என் செயல்பாடு இருக்கும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்று ச‌சிகலா தெரிவித்துள்ளார். 



  • Sep 15, 2025 13:53 IST

    வருமான வரி சோதனை

    தமிழ்நாடு முழுவதும் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் போத்தீஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.18.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 15, 2025 13:21 IST

    அண்ணா படத்திற்கு இபிஎஸ் மரியாதை

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை ஒட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 



  • Sep 15, 2025 13:20 IST

    சாலையில் திடீரென விழுந்த ராட்சத மரம்

    சென்னை கே.கே.நகரில் 80 அடி சாலையில் திடீரென ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன் மழைநீர் வடிகால் பணி நடந்தபோது பள்ளம் தோண்டி மூடப்பட்டடு. பள்ளம் தோண்டியபோது மரத்தின் வேர்களை வெட்டியதால்தான் மரம் விழுந்ததாக மக்கள் குற்றம்சாட்டினர். 



  • Sep 15, 2025 12:48 IST

    ரேபிஸ் தடுப்பு: சுகாதாரத் துறை விளக்கம்

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாய் கடித்த இடத்தை உடனே சோப்பு, சுத்தமான நீர், கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். நாய் கடித்த காயத்தில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்ற எதையும் தேய்க்க கூடாது. நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • Sep 15, 2025 12:32 IST

    பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி - பறிமுதல்

    தடையை மீறி பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பேரீச்சம் பழம், அழகு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 28 கண்டெய்னர்களில் கொண்டுவரப்பட்ட பாக். பொருட்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Sep 15, 2025 12:30 IST

    பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது

    பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பொதுக்குழுவில் ஓராண்டுக்கு தலைவர் பதவியை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார்.



  • Sep 15, 2025 12:05 IST

    அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பில்லை

    செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என கூறியுள்ளார், இதுகுறித்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார். எம்.ஜி.ஆரின் படத்தை விஜய் பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விஜய் பேசி இருக்கிறார், இருவரும் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத சக்திகள். அதிமுக வாக்கு விஜய்க்கு போகும் என்கிற எண்ணம், ஒரு காலத்திலும் நிறைவேறாது, அது விஜய்க்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



  • Sep 15, 2025 11:45 IST

    செங்கோட்டையன் கோரிக்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்: ஜெயக்குமார் பேட்டி

    செங்கோட்டையன் கோரிக்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது; எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தினால் மட்டும் அதிமுக வாக்கு விஜய்க்கு சென்றுவிடாது. அதிமுக வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் என அவர் தெரிவித்தார்.



  • Sep 15, 2025 11:30 IST

    தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

    தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். அதிமுக சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டனர். அதிமுக சட்டவிதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.



  • Sep 15, 2025 11:23 IST

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன்; இனி கவலை வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகை தரும் அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவின் பிறந்தநாள் இன்று. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன், இனி கவலை வேண்டாம். திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம். அரசியல் என்பது மக்கள் பணி, எங்களுக்கு சொகுசுக்கு இடமில்லை. திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலுக்காக செய்யவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



  • Sep 15, 2025 11:20 IST

    புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

    தனிப்பட்ட நபரின் உரிமை குறித்து மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க முடியாது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கை 3-க்கு மேல் இருக்கக் கூடாது! என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்பு வாரிய சட்டத்தில் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 15, 2025 11:10 IST

    “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.



  • Sep 15, 2025 11:01 IST

    ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

    ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறாரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கம் வரை முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழு முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்ஃபு வாரியம் தொடங்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



  • Sep 15, 2025 10:52 IST

    டெட் தேர்வு: கடந்த முறையை விட இம்முறை 17% கூடுதல் விண்ணப்பம்

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் வந்துள்ளன. டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், டெட் தேர்வு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது. நவ.15,16 தேதிகளில் நடைபெறும் டெட் தேர்வு எழுத 4.77 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.



  • Sep 15, 2025 10:45 IST

    சசிகலா, செங்கோட்டையன், நான் சந்திக்கும் நல்ல நிகழ்வு விரைவில் நடக்கும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

    சசிகலா, செங்கோட்டையன், நான் சந்திக்கும் நல்ல நிகழ்வு விரைவில் நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் தெரிவித்த பிறகு, எனது கருத்தை கூறுவேன் என அவர் சென்னையில் பேட்டியளித்தார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.



  • Sep 15, 2025 10:45 IST

    சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கி இறைச்சிக்கடை ஊழியர் பலி

    சென்னை ஆலந்தூரில் மின்சாரம் தாக்கியதில் இறைச்சிக்கடை ஊழியர் விமல்குமார் உயிரிழந்தார். இறைச்சிக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் விமல்குமார் உயிரிழந்தார்.



  • Sep 15, 2025 10:38 IST

    விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டனர்.



  • Sep 15, 2025 10:37 IST

    அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி வள்ளுவர் கோட்டம் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • Sep 15, 2025 10:21 IST

    நாளை டெல்லி செல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு ஏதுவாக அவரது தருமபுரி சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அண்மையில் டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியிருந்தார்.



  • Sep 15, 2025 10:19 IST

    மறப்போம் மன்னிப்போம்; இதுவே எனது நோக்கம் - செங்கோட்டையன் பேச்சு

    இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். மாற்றான் தோட்டத்திற்கும் மனம் உண்டு; மறப்போம் மன்னிப்போம் அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்றுதான் அன்று மனம் திறந்து பேசினேன்; எனது பேச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது: புரிகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கூறியுள்ளார். 



  • Sep 15, 2025 09:58 IST

    அண்ணாவின் அரசியல்  மந்திரத்தை பின்பற்றி மாற்றத்தை நிகழ்த்துவோம்: விஜய்

    மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர் முன்னாள் முதல்வர் அண்ணா; இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர். மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த அண்ணாவை, அவரது பிறந்த‌நாளில் போற்றி வணங்குவோம். மக்களிடம் செல் என்ற அண்ணாவின் அரசியல்  மந்திரத்தை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக்காட்டுவோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: