Chennai News Updates: இந்திய பொருளாதாரத்தின் புதியஅத்தியாயம் தொடங்குகிறது - மோடி

Tamilnadu News Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamilnadu News Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi

ஜி.எஸ்.டி சீர்திருத்தம்: வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல் - மோடி உரை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 21, 2025 18:43 IST

    நாளை திரிபுரா, அருணாச்சல பிரதேசம் செல்கிறார் மோடி

    பிரதமர் மோடி சமீபத்தில் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் சென்று வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் செல்கிறார். அவர் அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். ரூ.5,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.



  • Sep 21, 2025 18:11 IST

    தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து நயினார் ஆலோசித்தார்-இ.பி.எஸ்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார். 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கும்-த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது என்று சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 21, 2025 18:10 IST

    கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை குவித்த ’லோகா’

    துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘லோகா’ திரைப்படம், கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.



  • Sep 21, 2025 17:47 IST

    டியூசன் சென்டர் மேற்கூரை இடிந்து விபத்து; 7 பேர் பலி

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஹபீஸ்பாத் நகரில் டியூசன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த டியூசன் சென்டரில் நேற்று மாலை 9 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் வகுப்பறையில் இருந்தனர். அப்போது, டியூசன் சென்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த 2 ஆசிரியர்கள் 5 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



  • Sep 21, 2025 17:46 IST

    “நாளை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்”

    99% பொருட்கள் 5% ஜி.எஸ்.டி விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும். 12% ஜி.எஸ்.டி.யில் இருந்த 99% பொருட்கள், 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

     



  • Sep 21, 2025 17:21 IST

    இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது - மோடி

    உங்களுக்கு பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    ஜி.எஸ்.டி சீர் திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. 2-ம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும். பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன. உங்களுக்கு பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும் என்றார்.

     



  • Sep 21, 2025 17:20 IST

    ஜி.எஸ்.டி வரி குறைப்பால் சேமிப்பு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

    நவராத்திரியின் முதல் நாளில் (செப்.22) ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், வணிகர்கள் என அனைவரும் பயன்பெறுவர். மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம், சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.



  • Sep 21, 2025 17:12 IST

    ”ஜி.எஸ்.டி சீர்திருத்தம்: வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல்”

    ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தால் நடுத்த மக்களும், இளைஞர்களும் அதிகளவில் பயனடைவர். நாளையில் இருந்து 2 ஜி.எஸ்.டி வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். ஒரே நாடு ஒரே வரி என்ற குறிக்கோளை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் நிறைவேற்றும் என்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.



  • Sep 21, 2025 16:43 IST

    மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மோடி

    பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாளை முதல் அமலாக உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். எனவே, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மற்றும் அதனால் நாட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Sep 21, 2025 16:36 IST

    கூட்டம் சேர்த்துவிட்டால் அது ஓட்டாக மாறாது -கமல்

    கூட்டம் ஓட்டுகளாக மாறாது. கூட்டம் சேர்ந்துவிட்டால் அது ஓட்டுகளாக மாறாது. இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

     



  • Sep 21, 2025 16:01 IST

    விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பவர்கள் கவனமாக எழுத வேண்டும் - தமிழிசை

    அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். நடிகரான விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுப்பவர்கள் கவனமாக எழுத வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • Sep 21, 2025 15:35 IST

    யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வடிவேலு

    யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு திரைக் கலைஞர்களை தவறாக பேசி வருகிறார்கள். இவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்



  • Sep 21, 2025 15:30 IST

    மோகன் லாலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

    தாதாசாகேப்பால்கேவிருதுஅறிவிக்கப்பட்டமலையாள நடிகர் மோகன்லாலுக்குநடிகர்சங்கதலைவர்நாசர்வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Sep 21, 2025 14:42 IST

    தி.மு.க எம்.பி.,க்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் - துரைமுருகன் அறிவிப்பு

    முதலமைச்சர்மு..ஸ்டாலின்தலைமையில்தி.மு.கமக்களவைமற்றும்மாநிலங்களவைஉறுப்பினர்கள்கூட்டம், நாளைமறுநாள் (செப்டம்பர் 23) காலை 10 மணிக்குநடைபெறும்எனஅக்கட்சியின்பொதுச்செயலாளர்துரைமுருகன்அறிவித்துள்ளார்



  • Sep 21, 2025 14:40 IST

    பா.ம.க தலைமை செய்தி தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு

    பா.ம.க எம்.எல்.ஏ. அருள், கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அருள் ஏற்கனவே, மாநில இணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்



  • Sep 21, 2025 14:37 IST

    ம.நீ.ம நிர்வாகிகள் கூட்டம் போதாது - கமல்ஹாசன்

    சினிமாவில் நடனம் ஆடினால் இதை விட கூட்டம் வரும். மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டம் போதாது என ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். 



  • Sep 21, 2025 14:10 IST

    மும்மொழிக் கொள்கையால் என்ன பிரச்சினை?

    தமிழ்நாடு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது மூன்றாவது மொழி என வரும்போது மட்டும் என்ன பிரச்சினை? என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 21, 2025 13:29 IST

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

    திமுகவை எதிர்ப்பது உண்மை என்றால் அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அழைப்பு விடுத்துள்ளார்.



  • Sep 21, 2025 13:09 IST

    பொய் பேசுகிறார் விஜய் - ஆளூர் ஷானவாஸ்

    நாகை மாவட்டம் குறித்த அடிப்படையே தெரியாமல் பொய் பேசுகிறார் விஜய். பாஜகவினர் பேசுவது போல் பேச விஜய் எதற்கு? திமுக ஆட்சியில் நாகை தொகுதிக்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷானவாஸ் பதில் அளித்துள்ளார்.



  • Sep 21, 2025 13:04 IST

    ரூ.40 கோடி செலவு

    நடிகர் சங்க கட்ட‌டத்திற்கு ரூ.40 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது, ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளோம். கட்டடத்தை எப்படி முடிக்க போகிறோம் என பயம் இருந்தது, எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.



  • Sep 21, 2025 13:02 IST

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு - விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு

    “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.

    இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.

    நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.

    ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

    இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

    தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!

     புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 21, 2025 12:33 IST

    பாஜக எந்த உட்கட்சி பிரச்னையிலும் தலையிடாது - நயினார் நாகேந்திரன்

    பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்னையிலும் தலையிடாது என பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் சேலத்தில் பேட்டி அளித்துள்ளார்.



  • Sep 21, 2025 12:20 IST

    விஜய் பரப்புரை குறித்து நயினார் நாகேந்திரன் பதில்

    விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். கூட்டம் வருவதை வைத்து தி.மு.க-த.வெ.க இடையேதான் போட்டி என்று சொல்லக் கூடாது. தேர்தல் வர வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், மக்கள் ஓட்டு போட வேண்டும் அதன் பிறகு தான் சொல்ல முடியுமே தவிர ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்.



  • Sep 21, 2025 11:46 IST

    பிரதமர் மோடி இன்று உரை... எச்1பி விசா கட்டுப்பாடு குறித்து பேச வாய்ப்பு!

    சீர்திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி நாளை அமலுக்கு வரும் நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். எச்1பி விசா முறைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் பேச வாய்ப்பு



  • Sep 21, 2025 11:38 IST

    அக்டோபரில் குடியரசுத் தலைவர் சபரிமலையில் தரிசனம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அக்டோபர் மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜைக்காலத்தின் நிறைவு நாளில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் மேற்கொள்வார்.



  • Sep 21, 2025 10:13 IST

    உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - ஆனந்த்குமார் பதக்கவேட்டை

    உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ஆனந்த்குமார். ஏற்கனவே தங்கம், வெண்கலம் வென்ற நிலையில் 42 கி.மீ ஸ்கேட் மாரத்தானில் மீண்டும் தங்கம் வென்றார் ஆனந்த்குமார்.



  • Sep 21, 2025 10:05 IST

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: சுமார் 3,000 பேர் பங்கேற்பு

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. நடிகர் சங்க கட்டட நிலவரம் உள்ளிட்ட
    விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ள நிலையில், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் வருகை, சுமார் 3,000 பேர்
    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்



  • Sep 21, 2025 09:24 IST

    காஷ்மீர் பகுதிகளில் 75% வன்முறை குறைந்துள்ளது: அமித்ஷா தகவல்

    மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை 75% குறைந்துள்ளது. காஷ்மீர்,வடகிழக்கில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை 75% குறைந்துள்ளது  என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.



  • Sep 21, 2025 09:21 IST

    சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    நாகை, புத்தூரில் விஜய் பிரசாரத்தின்போது தவெக தொண்டர்கள் ஏறி  நின்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தாக நாகை தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட  தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Sep 21, 2025 08:20 IST

    திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.59 கோடி காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று 
    ஒரே நாளில் 82,042 பக்தர்கள் சாமி தரிசனம்  செய்தனர். ரூ.4.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர், இலவச தரிசன பக்தர்கள்  6 முதல் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் 



  • Sep 21, 2025 08:16 IST

    புரட்டாசி மாதம் என்பதால் மீன் வாங்க ஆர்வம் காட்டாத அசைவ பிரியர்கள்

    புரட்டாசி மாதம் என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களை வாங்க ஆர்வம் காட்டாத அசைவ பிரியர்கள். காசிமேட்டில் கடந்த வாரம் ரூ.1,200 விற்ற
    வஞ்சிரம் மீன் இன்று கிலோ 800 ரூபாயாக குறைந்த‌து.



  • Sep 21, 2025 07:41 IST

    50 பந்துகளில் சதம்: விராட்கோலி சாதனையை உடைத்த ஸ்மிருதி மந்தனா

    டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலிய இடையிலான 3வது
    ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் சதம் அடித்தார்.  இதன் மூலம் இந்தியாவுக்கான ஆடவர், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்,
    50 பந்துகளில் அதிகவேக சதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியின்
    52 பந்துகளில் சதம் என்ற சாதனையை உடைத்தார் ஸ்மிருதி மந்தனா



  • Sep 21, 2025 07:40 IST

    எச்1பி கட்டண உயர்வு ஒரு முறை மட்டுமே: அமெரிக்கா விளக்கம்

    எச்1பி கட்டணம் 88 லட்சம் ரூபாயாக  உயர்த்தப்பட்டிருப்பது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு  மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது



  • Sep 21, 2025 07:39 IST

    எச்1பி விசா புதிய கட்டுப்பாடு: இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

    எச்1பி விசா புதிய கட்டுப்பாடு விவகாரத்தில், அமெரிக்காவில் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்திய தூத‌ரகம் அறிவித்துள்ளது. அவசர தேவைக்கு அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை அழைக்கலாம் என்று கூறியுள்ளது அவசர உதவி எண் +1-202-550-9931



  • Sep 21, 2025 07:38 IST

    மகாளய அமாவாசை - குவியும் பக்தர்கள்

    மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் 
    அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



  • Sep 21, 2025 07:37 IST

    இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி

    ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் 
    வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது. 169 ரன்கள் என்ற இலக்கை, 19.5ஆவது ஓவரில் எட்டி இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது



  • Sep 21, 2025 07:36 IST

    பேருந்து, மெட்ரோ, ரயிலுக்கு ஒரே செயலி 

    இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து,  புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோ  போன்ற அனைத்து பொது போக்குவரத்தையும்  இணைக்கும் சென்னை ஒன்' மொபைல் செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்



  • Sep 21, 2025 07:30 IST

    இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் பலபரீட்சை

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில்,இன்று இரவு 8 மணிக்கு இந்தியா பாகிஸ்தான்அணிகள் மீண்டும் மோத உள்ளனபாகிஸ்தானின் எதிர்ப்புக்கு இடையே, ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக செயல்படவுள்ளார்



Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: