/indian-express-tamil/media/media_files/2025/09/17/annamalai-modi-speech-2025-09-17-21-24-05.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 17, 2025 22:08 IST
நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
- Sep 17, 2025 22:06 IST
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் போலீஸ் என்கவுண்டரில் பலி
த்தரப்பிரதேசம், காஜியாபாத்தில் நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் மீது டெல்லி, உ.பி போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் இருவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தனர்.
- Sep 17, 2025 21:22 IST
மோடியை சர்வாதிகாரி என்கிறார்கள்; அவரது சாதனை 50 ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரியும் - அண்ணாமலை
சென்னையில் பேசிய பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை: “பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்கிறார்கள்; அவரது சாதனை 50 ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரியும். சிங்கப்பூர் பிரதமரை 70, 80-களில் சர்வாதிகாரி என்றனர். ஆனால், இன்று அவரைப் பாராட்டுகின்றனர்.” என்று கூறினார்.
- Sep 17, 2025 21:17 IST
குட் பேட் அக்லி வழக்கு: இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அஜித்குமார்ன் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது செப்டம்பர் 24-ம் தேதி பதிலளிக்க இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Sep 17, 2025 21:15 IST
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறையினர் 150 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’ - தமிழக அரசு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 150 காவல்துறையினருக்கு "அண்ணா பதக்கம்" அறிவித்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது.
- Sep 17, 2025 20:52 IST
ஆம்பூர் கலவர வழக்கு: 7 ஆண்டுகள் சிறை - 7 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு
ஆம்பூர் கலவர வழக்கில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் தண்டனை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Sep 17, 2025 20:48 IST
கரூரில் எஸ்சி மக்களை கோவில் வழிபாட்டில் அனுமதிக்க கோரி வழக்கு: காவல்துறை பாகுபாட்டை பாதுகாத்துள்ளது - ஐகோர்ட்
கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் வழிபாட்டில் பட்டியலின மக்களை அனுமதிக்க கோரிய வழக்கில், காவல்துறையினர் அமைதியை பாதுகாக்காமல் பாகுபாட்டை பாதுகாத்துள்ளனர் என்றும் உரிமைகளை பாதுகாக்காமல், உரிமை மீறலை பாதுகாத்துள்ளனர் என்றும் உயர்நீதிமன்ற் மதுரை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு சட்ட உரிமைகளை தடுப்பவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சாதியின் பெயரில் கோயிலுக்குள் நுழைவதை தடுக்க துணிபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் நுழைவது தொடர்பாக உள்ள குற்ற வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க காவல்துரைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- Sep 17, 2025 20:38 IST
சென்னையில் ரூ.20 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்
எத்தியோப்பாவிலிருந்து சென்னைக்கு சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கென்யாவைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 17, 2025 20:34 IST
நான் சராசரி நடிகர் என்பதால் புதிய இயக்குநர்களுக்கு என்னால் வாய்ப்பு கொடுக்க முடிந்தது - விஜய் ஆண்டனி
“உலகத்தை காப்பாற்றுவது, பஞ்ச் டயலாக் பேசுவது, சண்டை போடுவதையெல்லாம் தாண்டி, தன் அம்மாவுக்காக ஒருவன் பிச்சையெடுத்தானே.. அவன்தான் எனக்கு ஹீரோவாக தெரிகிறான். நான் சராசரி நடிகர் என்பதால் புதிய இயக்குநர்களுக்கு என்னால் வாய்ப்பு கொடுக்க முடிந்தது” - என்று சக்தித் திருமகன் பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.
- Sep 17, 2025 20:00 IST
மோடிக்கு கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் இணையவழி ஏலம்; அக்டோபர் 2 வரை விற்பனை
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்கப்பட்ட 1300-க்கும் மேற்பட்ட நினைவுப் பரிசுகள், இணையவழி ஏலம் மூலம் அக்டோபர் 2 வரை விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் ஓவியங்கள், கலைப் பொருட்கள், சிற்பங்கள், மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
- Sep 17, 2025 18:55 IST
அணு ஆயுத மிரட்டலுக்கு புதிய இந்தியா அஞ்சாது: மோடி
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர். புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம் என்றார்.
- Sep 17, 2025 18:21 IST
கார் மீது லாரி மோதி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெரமனா கிராமம் அருகே வந்து தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே தவறாக எதிர் திசையில் மணல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இந்த விபத்தில் வந்து சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- Sep 17, 2025 17:47 IST
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்ந்து 82,694 புள்ளிகளானது. உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர முடிவில் 0.38% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எஸ்.பி.ஐ. 3%, பி.இ.எல். 2%, கோட்டக் வங்கி, மாருதி சுசூகி, டிரெண்ட் உள்ளிட்ட பங்குகள் 1% விலை உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகள் அதிகரித்து 25,330 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- Sep 17, 2025 17:41 IST
இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
- Sep 17, 2025 17:35 IST
சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் நீரஜ்
சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. குரூப் ஏ தகுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 84.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தகுதி பெற்றுள்ளார்.
- Sep 17, 2025 17:20 IST
ஆஸி. எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அக்.1ம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகளும் மவுண்ட் மவுங்கானுயில் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- Sep 17, 2025 17:14 IST
தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என மொத்தம் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- Sep 17, 2025 17:11 IST
கொடிக்கம்பங்கள் அகற்றும் நடவடிக்கைக்கு பாராட்டு
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டு, வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- Sep 17, 2025 17:09 IST
பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் அக்கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- Sep 17, 2025 17:03 IST
ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டுவந்த 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாக்லேட் போன்று வடிவமைத்து உடலில் மறைத்து கொண்டுவந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளை கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 17, 2025 16:49 IST
இங்கிலாந்து சென்று டிரம்ப்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் டிரம்ப் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள மன்னர் சார்லஸின் அரண்மனைக்கு அருகே திரண்ட போராட்டக்காரர்கள், பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
- Sep 17, 2025 16:48 IST
பா.ம.க. அன்புமணி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 5 லட்சம் பேர் பங்கேற்கும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- Sep 17, 2025 16:32 IST
திமுகவின் முப்பெரும் விழா பாடல் வெளியீடு!
தமிழர்களின் நலன் காக்க, உரிமைகளை மீட்க 75 ஆண்டின் முன்பே எழுந்தது ஓர் பேரியக்கம்!
— DMK (@arivalayam) September 17, 2025
எந்த சூழ்நிலையிலும் தில்லி பட்டணத்திற்கு தலைவணங்காத தலைவர்களை கொண்ட இயக்கம்.. அதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.
நாங்கள் எப்பவும் டெல்லிக்கு out of controlதான் 🖤❤️🔥#முப்பெரும்விழா2025pic.twitter.com/b7HlEd2Rej - Sep 17, 2025 16:27 IST
இந்திய மண்ணின் வாசனை இருக்க வேண்டும்
இது பண்டிகைக் காலம்; சுதேசி பொருட்களின் மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும். 140 கோடி இந்தியர்களும் எதை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் எதை வாங்கினாலும் அதன் உற்பத்திக்குப் பின்னால் ஒரு இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும். நீங்கள் எதை வாங்கினாலும் அது இந்திய மண்ணின் வாசனையுடன் இருக்க வேண்டும்.
நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது, நமது பணம் நாட்டிற்குள் இருக்கும். அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கும் ஏழைகள் மற்றும் விதவை தாய்மார்களுக்கும் உதவுவதற்கும் பயன்படுத்தலாம்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
- Sep 17, 2025 16:23 IST
என்னோட நல்ல நண்பர் நரேந்திரா: இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
"நாம் இருவரும் இணைந்து இந்தியா-இஸ்ரேலுக்கான நட்பு உறவு நீடிக்க பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்துள்ளோம். இவையாவும் இன்னமும் மேன்மேலும் வளர விரைவில் சந்திப்போம். பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே."
வீடியோ மூலம் இந்தியப் பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Sep 17, 2025 16:22 IST
"எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது:
1996-ல் நாட்டாமை, சூரியவம்சம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டுத்தான் நானும் அரசியலுக்கு வந்தேன்; ஓய்வுக்குப் பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை. மதுரையில் எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது; அந்தக் காட்சிகளை வேண்டுமென்றால் காட்டுகிறேன்.
தவாக தலைவர் விஜய் பரப்புரை குறித்து சரத்குமார் விமர்சனம்
- Sep 17, 2025 16:20 IST
இந்தியர்களின் வியர்வை: நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை
இந்தியர்களின் வியர்வை மனம், இந்திய மண்ணின் மனம் எதில் உள்ளதோ, அதை மட்டும் வாங்குங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு, உள்நாட்டுப் பொருட்களை வாங்கும்படி நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்
- Sep 17, 2025 16:14 IST
விஜய்க்கு செல்லும் கூட்டம் வேட்டாக மாறும்; பெங்களூரு புகழேந்தி
முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுக தலைமையகத்தை நாங்கள் அடித்து உதைத்தோமா? காவல்துறை விசாரணை போல நேற்று எடப்பாடியை கூப்பிட்டு அமித்ஷா விசாரித்துள்ளார். இந்த அரசுதான் எடப்பாடி பழனிசாமிக்கு வசதிகள் செய்து கொடுக்கிறது. விஜய்க்கு செல்லும் கூட்டம், ஓட்டாக மாறுமோ இல்லையோ... வேட்டாக மாறும்
-சென்னையில் பெங்களூரு புகழேந்தி
- Sep 17, 2025 16:07 IST
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாரணை, வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளை அமல்படுத்த தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகளில் அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- Sep 17, 2025 15:34 IST
அதானிக்கு எதிரான பதிவுகளை நீக்க உத்தரவு!
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்ட 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்குமாறு இரண்டு செய்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதானி குழுமம் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
- Sep 17, 2025 15:32 IST
உலகின் நம்பர் 1 பவுலர்
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். பும்ரா, ரவி பிஸ்னோய் இருவருக்கும் பிறகு, நம்பர் 1 டி20 பவுலர் என்ற சாதனையை படைக்கும் மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார் வருண் சக்கரவர்த்தி ஆவார்.
- Sep 17, 2025 15:29 IST
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம்
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, தனது மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, சுற்றுப்பயணத்தின் திட்டம், காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் கூட்டத்தைக் கையாள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Sep 17, 2025 15:28 IST
பிரதமருக்கு ரஜினியின் வாழ்த்து
நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம்,
மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் வலிமை உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்’பிரதமருக்கு ரஜினியின் வாழ்த்து
- Sep 17, 2025 14:40 IST
சபரிமலை: 4 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க வைத்திருந்த 4 கிலோ தங்கம் காணாமல் போனது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரித்து 3 வாரங்களில் அறிக்கை அளிக்க தேவசம் விஜிலென்ஸ் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. துவாரபாலகர் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க 42 கிலோ தங்கம் வழங்கப்பட்ட நிலையில் 38 கிலோ மட்டுமே இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- Sep 17, 2025 14:38 IST
தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓரணியில் தமிழ்நாடு என தலை நிமிர்ந்து நின்று பகையை வெல்வோம். திமுகவை வகுத்தால் தமிழ்நாடு; தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக என வளர்ந்துள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Sep 17, 2025 14:11 IST
'வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது கணவரின் தார்மீக பொறுப்பு!' - கொல்கத்தா உயர் நீதிமன்றம்
கணவருக்கு வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது சமூக, சட்ட மற்றும் தார்மீக பொறுப்பு என ஒரு விவகாரத்து வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மனைவி மாதம் ரூ.12,000 சம்பாதிப்பதாகவும் தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும் கூறிய கணவரின் வாதத்தை ஏற்க மறுத்து மாதம் ரூ.4000 பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Sep 17, 2025 14:07 IST
பெரியார் சிலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை!
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, கரூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- Sep 17, 2025 13:45 IST
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலம் குறைவு காரணமாக சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Sep 17, 2025 13:44 IST
ஓசூரில் நாய் கடித்து சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
ஒசூர் அருகே தெரு நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோட்ட கூலித் தொழிலாளி முனி மல்லப்பா உயிரிழந்தார். தனியார் தோட்டத்தில் வேலை பார்த்த முனி மல்லப்பாவை அங்கு வந்தநாய் கடித்துள்ளது. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு நேற்று பாதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முனி மல்லப்பா உயிரிழந்தார்.
- Sep 17, 2025 13:13 IST
பாகிஸ்தானின் மிரட்டலுக்கு இந்தியா பணியாது - பிரதமர் மோடி
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது. ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை சரணடைய வைத்தது. பதிலடியால் பயங்கரவாதிகள் சிதைந்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- Sep 17, 2025 12:45 IST
முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
உள்துறை அமைச்சரை சந்தித்து வெளியே வரும்போது முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன? என்ன காரணத்திற்காக அப்படி முகத்தை மூடி வந்தார் என்பதை பழனிசாமிதான் சொல்ல வேண்டும். முகமூடியார் பழனிசாமி என்று தான் அவரை இனி அழைக்க வேண்டும்
- Sep 17, 2025 12:23 IST
கூடும் கூட்டம் வாக்காக மாறுமா? ரஜினி பதில்
’ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் ரஜினியிடம் கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்று அவர் பதிலளித்தார் - Sep 17, 2025 11:54 IST
160 பயணிகளுடன் பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானம்.. நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் அதிர்ச்சி!
சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவசர அவசரமாக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, 160 பயணிகளும் மாற்று விமானத்தில் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- Sep 17, 2025 11:35 IST
5,000 கிலோ பொருட்களுடன் விண்வெளியில் சிக்கிய சரக்கு விண்கலம்!
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சிக்னஸ் சரக்கு விண்கலத்தின் இஞ்ஜின் செயலிழந்ததால் 5,000 கிலோ உணவு மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் சுற்றுப்பாதையில் சிக்க்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
- Sep 17, 2025 11:30 IST
முகத்தை மறைத்துக் கொண்டு இன்று பலர் திரிகின்றனர் - அமைச்சர் ரகுபதி
முகத்தை மறைத்துக் கொண்டு இன்று பலர் திரிகின்றனர். அதில் அரசியல்வாதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாமல், தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே அசிங்கப்பட்டு வருவதாக அர்த்தம்; அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- Sep 17, 2025 11:28 IST
எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது - ஜெயக்குமார் பேட்டி
“இன்றைக்கும் உலகம் முழுவதும் போற்றப்படுகின்ற ஒரு தந்தை, பெரியார்; பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போகும் நிலை வரும்; தந்தை பெரியாரின் புகழை எந்தக் காலத்திலும் எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது” என்று சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பெரியாரின் படத்திற்கு மரியாதை செலுத்தியபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
- Sep 17, 2025 11:22 IST
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவருக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 17, 2025 11:21 IST
ஆவடி-பூவிருந்தவல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆவடி-பூவிருந்தவல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல், பள்ளி வாகனங்கள் சிக்கி தவித்துள்ளனர். பருத்திப்பட்டு பகுதியை கடக்க 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய போதுமான அளவில் காவலர்களை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- Sep 17, 2025 11:05 IST
விஜய் பரப்புரை - அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட அறிவுறுத்தும்படி கோரிக்கை; உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தவெக தரப்பில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் வழக்கு; அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கக்கோரி நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு முறையிட்ட நிலையில், நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
- Sep 17, 2025 11:02 IST
சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, வரவு நல்ல உறவு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வடபழனி மருத்துவமனையில் சங்கர் கணேஷ் அனுமதி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இசையமைத்தவர் சங்கர் கணேஷ் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இசையமைத்தவர் சங்கர் கணேஷ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.