Chennai News Updates: “பெரியார், திராவிடத்தை விமர்சித்து ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்திற்கு சிலர் துணை போகிறார்கள் - திருமாவளவன்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumavalavan speech 2

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 19, 2025 21:28 IST

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மக்கள் கையில் ரூ. 2 லட்சம் கோடி இருக்கும் - நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பதன் மூலம் மக்களின் கையில் ரூ. 2 லட்சம் கோடி சேரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் மக்கள் அதிகப் பொருட்களை வாங்குவார்கள் என்றும், இதன் விளைவாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி உயரும் என்றும் அவர் கூறினார்.



  • Sep 19, 2025 21:26 IST

    “பெரியார், திராவிடத்தை விமர்சித்து ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்திற்கு சிலர் துணை போகிறார்கள் - திருமாவளவன்

    இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சு: “பெரியார், திராவிடத்தை விமர்சித்து ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்ட கால திட்டத்திற்கு சிலர் துணை போகின்றனர். இந்திய அரசு நீதியின் பக்கம் நிற்க வேண்டும். பாலஸ்தீனம் பக்கம் நிற்க வேண்டும். பாலஸ்தீனத்தில் நடப்பதைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. டெல்லியில் போராட்டம் நடத்தி, அங்குள்ளவர்களை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வைப்போம். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் குரல் கொடுப்போம்” என்று பேசினார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 19, 2025 21:23 IST

    தமிழகத்திற்கு மோடி நல்லது செய்கிறார் - நிர்மலா சீதாராமன்

    “தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு நுணுக்கத்தையும் புரிந்துகொண்டு அவர் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்கிறார்,” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மேலும், “நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என பிரதமர் மோடி தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.



  • Sep 19, 2025 20:11 IST

    மனிதநேயத்தை தூக்கிப்பிடிப்பது தமிழ்நாடு மட்டும்தான் - இயக்குநர் அமீர்

    காசா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இயக்குநர் அமீர், “எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு கூட்டம் நடந்திருக்காது. இங்குதான் நடக்கிறது. இதுதான் தமிழ்நாடு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காகத்தான் வட மாநிலங்களிலிருந்து இங்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். மனிதநேயத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்துவது தமிழ்நாட்டு மக்கள் மட்டும்தான்” என்று வலியுறுத்தினார்.



  • Sep 19, 2025 20:03 IST

    “தமிழகம் தலைகுனிந்தது நிற்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தமிழகம் தலைகுனிந்தது நிற்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் என அனைத்திற்கும் தி.மு.க வரியை பல மடங்கு உயர்த்தியது” என்று கூறினார்.



  • Sep 19, 2025 20:01 IST

    பாலஸ்தீனத்தில் திட்டமிட்ட படுகொலை - இயக்குனர் வெற்றிமாறன்

    பாலஸ்தீனத்தில் நடைபெற்று வருவது திட்டமிட்ட படுகொலை என்று பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசவும், இந்தப் படுகொலையைக் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.

    மேலும், பாலஸ்தீனத்தின் அடையாளமாக இருக்கும் ஆலிவ் மரங்கள் அழிக்கப்படுவதாகவும், காசா பகுதி இன்று பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது நம் அனைவரின் கடமை என்றும் அவர் கூறினார்.



  • Sep 19, 2025 19:19 IST

    அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் தரத்தில் தொடர் சரிவு: ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு

    தமிழகத்தில் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் கல்வித் தரம் தொடர்ந்து சரிந்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, “அரசு கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இந்தத் தரக்குறைவு, குறிப்பாக ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், “பெரும்பாலான மக்கள் அரசு கல்வி நிறுவனங்களையே நம்பி இருக்கின்றனர். அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

    அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.



  • Sep 19, 2025 19:16 IST

    விஜய் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் - த.வெ.க அறிவிப்பு

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 27-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்போது அந்தப் பயணம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    வரும் டிசம்பர் 13-ம் தேதி நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். இந்தத் தேதி மாற்றப்பட்டு, இப்போது வரும் 27-ம் தேதி பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விஜய் 4 இடங்களில் மக்களைச் சந்திக்க உள்ளார். அதில், 2 இடங்களில் அவர் பொது மக்களிடையே உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். இந்த மாற்றங்கள் கட்சியின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.



  • Sep 19, 2025 18:52 IST

    சென்னையில் மழை

    சென்னை வளசரவாக்கம், சாலிகிராமம், விருகம்பாக்கம், மதுரவாயல், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 



  • Sep 19, 2025 18:15 IST

    பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி

    காசாவில் பாலஸ்தீன இனப் படுகொலையை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது 



  • Sep 19, 2025 17:36 IST

    வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புவனேஸ்வரி (12ஆம் வகுப்பு மாணவி) மயங்கி விழுந்து உயிரிழந்தார். விடுதியில் மதிய உணவு அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவியின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைப்பு. திடீர் உயிரிழப்பு குறித்து உடுமலை காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.



  • Sep 19, 2025 17:33 IST

    எனது இல்லந்தேடி வந்து பலமுறை என்னை ஊக்கப்படுத்தியவர்: தொல்.திருமாவளவன்

    ரோபோ சங்கர் நல்ல நண்பர்.. எனது இல்லந்தேடி வந்து பலமுறை என்னை ஊக்கப்படுத்தியவர். ரோபோ சங்கரின் இழப்பு கலையுலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

    - நேரில் அஞ்சலி செலுத்திய தொல்.திருமாவளவன் பேட்டி



  • Sep 19, 2025 17:26 IST

    ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய பிரியங்கா

    ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Credit: Sun News



  • Sep 19, 2025 17:20 IST

    ஸ்டாலின் வலியுறுத்தல்

    மு.க.ஸ்டாலின், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்க. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி குறித்து பெறப்படும் மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



  • Sep 19, 2025 16:28 IST

    தொடங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்

    நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது; வளசரவாக்கம் மின்மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது



  • Sep 19, 2025 16:24 IST

    2 மாதத்தில் 808 கட்சிகள் நீக்கம்

    நாடு முழுவதும் தொடர்ந்து 6 ஆண்டு தேர்தலில் போட்டியிடாத 474 கட்சிகளை நீக்கியது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் 42 கட்சிகள் நீக்கம் கடந்த ஆகஸ்டில் முதற்கட்டமாக 334 கட்சிகள் நீக்கப்பட்டன. தற்போது மொத்தம் சேர்த்து 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.



  • Sep 19, 2025 16:23 IST

    காஸா மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி சென்னையில் பேரணி

    விசிக தலைவர் திருமாவளவன், திக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 31 அமைப்புகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • Sep 19, 2025 15:50 IST

    தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து

    தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக  6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 15:45 IST

    தங்கம் விலை இருமடங்காகும் - அமெரிக்கா நிறுவனம் கணிப்பு

    சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது. தற்போது 3,700 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 மடங்காக அதிகரிக்கும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது.



  • Sep 19, 2025 15:27 IST

    பரப்புரையின் போது அமைதியாக கலந்துகொள்ள வேண்டும் - தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தல்

    விஜயின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடரக்கூடாது. பரப்புரையின்போது அமைதியாக கலந்துகொள்ள வேண்டும். மரம், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கொடிக்கம்பங்கள், சிலைகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 



  • Sep 19, 2025 15:23 IST

    பெரிய பின்புலம் இல்லாமல், கடுமையான உழைப்பால் புகழ்பெற்றவர் ரோபோ - சீமான்

    பெரிய பின்புலம் இல்லாமல், கடுமையான உழைப்பால் புகழ்பெற்றவர் ரோபோ சங்கர்.  ரோபோ மறைவுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்திப்பில் இதனை தெரிவித்தார்.



  • Sep 19, 2025 14:53 IST

    நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அக்டோபர் 8ஆம் தேதி வரை புகார் அளிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

    நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு உள்ளது. அதற்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும். நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களிடன் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 14:48 IST

    போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி

    போர்ச்சுகலில் நடைபெறவுள்ள வேர்ல்ட் பீச் அல்டிமேட் சேலஞ்ச் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஃப்ளையிங் டிஸ்க் இந்தியா மாஸ்டர்ஸ் மகளிர் அணியில் உள்ள தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.6 லட்சம் நிதியை உதயநிதி வழங்கினார். 



  • Sep 19, 2025 14:45 IST

    ஐபோன் 17 விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் மோதல்

    இந்தியாவில் ஐபோன் 17 விற்பனை இன்று தொடங்கிய நிலையில், மும்பையில் அதற்காக பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில் கூட்டம் அதிகமானதில் பாதுகாவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் மோதல் ஏற்பட்டது.



  • Sep 19, 2025 14:21 IST

    மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி

    அப்பா உன்ன தேடி யார் வந்திருக்கா பாருப்பா.. அவரே உங்க பேரனை தூக்கிட்டாருப்பா.. அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கமல்ஹாசனிடம் இந்திரஜா கதறி அழுதார். 



  • Sep 19, 2025 14:13 IST

    ஓடும் ரயிலில் சுகப்பிரசவம்

    உத்தரபிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி, ரயில்வே பெண் காவலரின் உதவியோடு பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது.



  • Sep 19, 2025 14:12 IST

    மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர் சூரி அஞ்சலி

    மறைந்த ரோபோ சங்கர் உடலைப் பார்த்து நடிகர் சூரி கண்ணீர் விட்டு அழுதார். அழுதுக்கொண்டிருந்த இந்திரஜாவை அரவனைத்து ஆறுதல் கூறினார்.



  • Sep 19, 2025 13:19 IST

    ரோபோ சங்கர் மறைவு... நகைச்சுவை நடிகர்கள் ராமர், புகழ் கண்ணீர் பேட்டி

    25 வருட நட்பு எங்களுக்கு. கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றோம். தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

     

     



  • Sep 19, 2025 12:38 IST

    டிசம்பரில் ககன்யான் விண்கலம் சோதனை

    மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் விண்கலம் சோதனை டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.



  • Sep 19, 2025 12:35 IST

    எல்லோரும் மதுவை கைவிட வேண்டும் - அந்தோணி தாசன்

    மது வாழ்க்கை என இருப்பவர்கள், அண்ணனுடைஇய மறைவை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நானும் ஒரு காலத்தில் அப்பழக்கத்தில் இருந்துள்ளேன். பின் குடும்பத்தின் நலனை எண்ணி அதிலிருந்து விடுபட்டுவிட்டேன். நம் குடும்பத்திற்கு நாம் தான் என்பதை எண்ணி செயல்படுங்கள்.

     



  • Sep 19, 2025 12:09 IST

    அண்ணனை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்- கே.பி.ஒய் ராஜவேலு வேதனை

    நடிகர் ரோபோ சங்கர் எங்களுக்கு பெரிய முன்மாதிரியாக இருந்தார். அவரை பார்த்து நாங்கள் வளர்ந்தோம். இப்போது அவர் இல்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது.



  • Sep 19, 2025 11:54 IST

    விஜய் வீட்டில் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

    சென்னை நீலாங்கரையில் உள்ள லைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. இரவு நேரத்தில் விஜய் வீட்டிற்குள் புகுந்த நபரால் பரபரப்பு; ஒய் பிரிவு அதிகாரிகள் தகவலின்பேரில் சோதனை நடத்தி வருகின்றனர். 



  • Sep 19, 2025 11:49 IST

    வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

    தமிழ்நாட்டில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் உரையாற்றியுள்ளார். வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 55.12 லட்சம் பேர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 17500 சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன; ரூ.25.81 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது



  • Sep 19, 2025 11:32 IST

    அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.574 கோடியில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 11:20 IST

    "இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம்" - நடிகர் இளவரசு

    ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ரோபோ சங்கர்; உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதனை துடைத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோல் வலுவிழந்துள்ளது; இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம் என்று நடிகர் இளவரசு தெரிவித்துள்ளார். 



  • Sep 19, 2025 11:15 IST

    தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

    தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்த மாணவர்கள் லோகேஷ் (12), சஞ்சய் (12) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மிதந்து கொண்டிருந்த 2 வட மாநில சிறுவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 19, 2025 11:13 IST

    “எல்லோரும் மதுவை கைவிட வேண்டும்” - அந்தோனி தாசன்

    மதுவே வாழ்க்கை என இருப்பவர்கள், அண்ணனுடைய மறைவை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்; நானும் ஒரு காலத்தில் அப்பழக்கத்தில் இருந்துள்ளேன். பின் குடும்பத்தின் நலனை எண்ணி அதிலிருந்து விடுபட்டுவிட்டேன். நம் குடும்பத்துக்கு நாம்தான் என்பதை எண்ணி செயல்படுங்கள் என்று ரோபோ சங்கர் மறைவில் மனமுடைந்து பேசிய பாடகர் அந்தோனி தாசன் கூறியுள்ளார். 



  • Sep 19, 2025 10:51 IST

    அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் - விஜய்

    நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தவெக தலைவரும் நடிகருமான விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Sep 19, 2025 10:41 IST

    கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    நெடுஞ்சாலைத் துறை சார்பில் 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து அதற்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • Sep 19, 2025 10:31 IST

    இறந்த பிறகு ‘அதுதான் காரணம், இதுதான் காரணம்’என்று குற்றம் குறை சொல்வதில் ஒன்றும் இல்லை - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

    ரோபோ போல அவர் நடனமாடும் காலத்திலிருந்தே அவரை பார்த்திருக்கிறேன். தங்கமான குணம் கொண்டவர் அவர் மகள்தான் சமீப நாட்களில் அவருடன் இருந்து பார்த்து கொண்டார்; இறந்த பிறகு ‘அதுதான் காரணம், இதுதான் காரணம்' என்று குற்றம் குறை சொல்வதில் ஒன்றும் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார். 



  • Sep 19, 2025 10:26 IST

    வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 10:08 IST

    “நாம் செத்தால் நம்மோடு பணம் வராது...” - சண்டை பயிற்சியாளர் ராமு

    சினிமாவில் நான் நிறைய கஷ்டப்பட்ட நேரத்தில், அண்ணன்தான் எனக்கு நடிகர் சங்க கார்டு கொடுத்தார். நிறைய பேர்க்கு பணம் கொடுப்பார். அதுபற்றி கேட்டால், 'நாம் செத்தால் நம்மோடு பணம் வராது, ஆனால் 1,000 பேர் வருவார்கள்' என்பார் என்று ரோபோ சங்கர் உடலுக்கு 500 ரூபாய் பணமாலை செலுத்தியது குறித்து சண்டை பயிற்சியாளர் ராமு கூறியுள்ளார். 



  • Sep 19, 2025 09:19 IST

    பேரனுக்கு காது குத்து ஏற்பாடு செய்த ரோபோ சங்கர்: கவிஞர் சினேகன் பேச்சு

    ரோபோ சங்கர் குறித்து பேசிய கவிஞர் சினேகன், அவரின் முதல் மேடையில் இருந்து நான் இருந்திருக்கிறேன். எந்த மேடை என்றாலும் அவர் தனக்கான மாற்றிக்கொள்வார். நாளை பேரனுக்கு காது குத்து ஏற்பாடு செய்திருந்தார். அவர் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை இந்த இழப்பில் இருந்து அவரது குடும்பத்தினர் எப்படி மீட்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.



  • Sep 19, 2025 08:48 IST

    இந்தியாவில் ஐபோன் 17 இன்று விற்பனை 

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 17 செல்போன், மும்பை பி.கே.சி பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நிறுவனத்தில் இன்று விற்பனையை தொடங்குகிறது. ஐபோன் 17-ஐ வாங்க மும்பை ஆப்பிள் விற்பனை மையம் முன் நூற்றுக்கணக்கானோர் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.



  • Sep 19, 2025 08:47 IST

    டிரம்ப் விதித்த கூடுதல் வரி; நவம்பருக்கு பிறகு வாபஸ் பெறப்படலாம் என தகவல்

    இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25% வரியானது, நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம். இந்தியா - அமெரிக்கா இடையேயான  வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.



  • Sep 19, 2025 08:44 IST

    அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர்

    தெலுங்கானாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தனது அறை நண்பருடனான சண்டையில், அமெரிக்க போலீசாரால் சுட்டு கொலை செயய்ப்பட்டார். அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை இந்தியா கொண்டு வர, குடும்பத்தினர் வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  • Sep 19, 2025 07:49 IST

    இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த கங்கனா ரணாவத்

    இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நடிகையும், பா.ஜ.க எம்.பியமான கங்கனா ரணாவத், நேற்ற என் உணவகத்தில் ரூ50-க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. ஆனால் நான் 15 லட்சம் சம்பளம் கொடுக்கிறேன். தயவு செய்து என் வலியையும் புரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.



  • Sep 19, 2025 07:47 IST

    மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு, தனுஷ், உதயநிதி நேரில் அஞ்சலி

    மரணமடைந்த நடிகர் ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது உடலுக்கு நடிகர் தனுஷ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், தனது இயல்பான நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்த அன்புச்சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு பேரிழப்பாகும்.மறைந்த அவரது ஆன்மா இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 



  • Sep 19, 2025 07:43 IST

    ஆசியகோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஓமன் மோதல் 

    ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின்  கடைசி லீக் போட்டியில்  இன்று ஓமனுடன் மோதுகிறது இந்தியா. இநதிய அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், ஓமன் அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: