/indian-express-tamil/media/media_files/2025/05/08/bc8ifxZXaFTVcf6NDuzp.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவிற்கு கடத்த முயன்ற அடிமாடுகள் மீட்பு
சென்னையில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட அடிமாடுகளை பூவிருந்தவல்லி அருகே சமூக ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரே லாரியில் 60-க்கு மேற்பட்ட மாடுகளை கொடுமைப்படுத்தி அழைத்துச்சென்ற உரிமையாளர் மீது பசு வதை தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாடுகள் படுக்கவோ, தூங்கவோ கூடாது என்பதால், கண்களில் பச்சை மிளகாய் வைத்து கொடுமைப்படுத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
- Sep 16, 2025 21:45 IST
உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு அவசியம் - மோடி வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனுடன் தொலைபேசிய் வழியாக உரையாடினார். டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனுடனான உரையாடலின்போது, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு அவசியம், வர்த்தகம், முதலீடு, ஆற்றல், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்த உறுதி அளித்தார்.
- Sep 16, 2025 20:49 IST
டெல்லியில் அமித்ஷாவுடன் இ.பி.எஸ் சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்டோருடன் அமித்ஷாவை இ.பி.எஸ் சந்தித்தார். - Sep 16, 2025 20:43 IST
தேர்தல் பணிகளுக்காக 5 புதிய குழுக்களை அமைத்தது பா.ஜ.க தலைமை
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளைக் கவனிக்க 5 புதிய குழுக்களை அமைத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாக, இந்தக் குழுக்கள் செயல்படும் என பி.எல்.சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Sep 16, 2025 20:11 IST
இந்தி மொழியைத் திணிக்கும் முயறிசியை நிறுத்துக; மத்திய அரசுக்கு த.வெ.க நிர்வாகி வலியுறுத்தல்
த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அறிக்கை: “கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
- Sep 16, 2025 20:04 IST
போதுமான பயணிகள் இல்லாததால் சென்னைக்கு நேரடி சர்வதேச விமான சேவை இல்லை - அதிகாரிகள் தகவல்
சென்னையிலிருந்து சவுதி அரேபியா, நியூயார்க், பிரான்ஸ் போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதுமான பயணிகள் இல்லாததே இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, 180 பேர் பயணிக்கக்கூடிய விமானங்களில் 60 முதல் 70 பயணிகள் மட்டுமே பயணம் செய்வதால் விமான நிறுவனங்களுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, நேரடி விமான சேவைகளை இயக்குவது பொருளாதார ரீதியாக லாபமற்றதாக மாறியுள்ளதாக விமான நிலைய இயக்குனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Sep 16, 2025 19:57 IST
தேர்தலில் தி.மு.க-வுக்கு தோல்வி காத்திருக்கிறது - குஷ்பு
சென்னையில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு பேட்டி: “மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்ட் அவர்கள் செய்வது போல் காட்டுகின்றனர்.” என்று கூறினார்.
- Sep 16, 2025 19:35 IST
அன்புமணி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜி.கே. மணி கபட நாடகம் - வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பாலு, “தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை அங்கீகரித்த கடிதத்தை நீர்த்துப்போகச் செய்யவே ஜி.கே. மணி இந்த கபட நாடகத்தை நடத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
- Sep 16, 2025 18:46 IST
ஈரோடு - பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில்
ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே வாராந்திர அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து 25-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த 3-வது நாள் மாலை 7-க்கு பீகார் மாநிலம் ஜோக்பானியை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜோக்பானியில் இருந்து 28-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (16602), அடுத்த 4-வது நாள் காலை 7.20 மணிக்கு ஈரோட்டினை வந்தடையும். இந்த அம்ரித் பாரத் வாராந்திர ரயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
- Sep 16, 2025 18:32 IST
சபரிமலை கோயில் நடை திறப்பு: சிறப்பு வழிபாடு
மலையாள கன்னி, தமிழின் புரட்டாசி பிறப்பை ஒட்டி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் நடை திறக்கப்பட்டது.
- Sep 16, 2025 18:11 IST
மீண்டு வரும் ஓசோன் படலம் : உலக வானிலை அமைப்பு
பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோய், கண்புரை உள்ளிட்ட அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Sep 16, 2025 17:39 IST
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உரப் பற்றாக்குறையைத் தவிர்த்திட தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 12,422 மெட்ரிக் டன் எம்.ஓ.பி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரங்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் கடித்தத்தில் வலியுறுத்தி உள்ளார்.
- Sep 16, 2025 17:35 IST
”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”
செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக் கொண்டு அவர்களை பணி நிலைப்பு அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூகநீதி என்பதற்கான பொருள் தி.மு.க. அரசுக்கு தெரியாது என்பதால்தான் அதனை செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது. இப்போதாவது உழைப்பு சுரண்டலையும், சமூக அநீதியையும் ஒப்புக்கொண்டு, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
- Sep 16, 2025 17:09 IST
அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது - ஜி.கே.மணி பேட்டி
அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "தலைவர் பதவியில் இல்லாதவர் கட்சியின் பொதுக்குழுவை எவ்வாறு கூட்ட முடியும்? விதிகளை மீறி மாமல்லபுரத்தில் அன்புமணி தரப்பில் கூட்டிய பொதுக்குழு செல்லாது. அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் திட்டமிட்ட மோசடி,"என குறிப்பிட்டுள்ளார்.
- Sep 16, 2025 17:06 IST
தமிழ்நாடு வாக்குச்சாவடி எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது
தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பெரிய வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- Sep 16, 2025 16:30 IST
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை
மத்திய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை நியமிக்கலாம்
- தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை - Sep 16, 2025 16:09 IST
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜைகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும். பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குவதற்கு http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
- Sep 16, 2025 15:57 IST
நில ஆக்கிரமிப்பு: ஏர்போர்ட் மூர்த்தி கைது
நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. டிஜிபி அலுவலக வாயில் முன் அடிதடி வழக்கு தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே கைதாகியுள்ளார்.
- Sep 16, 2025 15:56 IST
குடியரசுத் தலைவருடன் மொரீஷியஸ் பிரதமர் சந்திப்பு
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திரா ராம்கலம் சந்திப்பு நடத்தினர்
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் உள்ளிட்டவை பற்றி விவாதித்தனர்; வரும் காலங்களில் இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுவடையம்
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
- Sep 16, 2025 15:32 IST
நாளை முன்பதிவு தொடக்கம்!
பண்டிகைகால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8:00 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- Sep 16, 2025 15:23 IST
ஆயுத பூஜை, தீபாவளியை ஒட்டி சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாகர்கோயில்-தாம்பரம் சிறப்பு ரயில்செப். 29-அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்
செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை-கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்
மறுமார்க்கத்தில் செப். 26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில்
செப். 23 முதல் அக். 23 வரை தூத்துக்குடி-எழும்பூர் வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு ரயில்
செப். 30 முதல் அக். 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்
மறுமார்க்கமாக அக். 1 முதல் அக். 29 வரை புதன்கிழமைகளில் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
தெற்கு ரயில்வே
- Sep 16, 2025 14:56 IST
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 16, 2025 14:34 IST
டெட் தேர்வு விவகாரம் - சீராய்வு மனு தாக்கல் செய்ய உ.பி. முடிவு!
டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என கடந்த செப்டம்பர் 1 ஆம்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
- Sep 16, 2025 14:26 IST
சி.பி.ராதாகிருஷ்ணனுடன் இபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். குடியரசு துணைத்தலைவரகாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இ.பி.எஸ் வாழ்த்து கூறினார்.
- Sep 16, 2025 13:48 IST
''இபிஎஸ்-க்கு பிரமாண்ட கூட்டம் கூடுது'' - அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. எழுச்சியாக பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் அதிமுக ஆட்சியை பாஜக காப்பாற்றியது என இபிஎஸ் பேசியுள்ளது முக்கியத்துவர் வாய்ந்தது என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Sep 16, 2025 13:25 IST
அமித்ஷாவை இன்றிரவு சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்தத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி சந்திக்கிறார்.
- Sep 16, 2025 12:57 IST
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்தில் மாற்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளில் 3 மாவட்டங்களுக்கு பதிலாக 2 மாவட்டங்களுக்கு செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் பரப்புரையின் போது திட்டமிட்டபடி உரிய இடத்திற்கு செல்ல முடியாததால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Sep 16, 2025 12:27 IST
ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த கிளமென்ஸி என்பவருக்கு ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு ரூ.12 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
- Sep 16, 2025 11:48 IST
"துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி நன்றியைப் பற்றி பேசி வருகிறார்.." -டிடிவி தினகரன்
“துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி நன்றியைப் பற்றி பேசி வருகிறார். ஆட்சியை காப்பாற்றிய 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- Sep 16, 2025 11:45 IST
'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' வாசகத்துடன் புகைப்படத்தை மாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' வாசகத்துடன் புகைப்படத்தை மாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எக்ஸ் தளப் பக்க முகப்பை மாற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- Sep 16, 2025 11:43 IST
புருடா விடுகிறார் பழனிசாமி - டி.டி.வி தினகரன் தாக்கு
"நான் யாருக்கும் பயப்படமாட்டேன், எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம் என பேசும் இபிஎஸ், இப்போது டெல்லிபோய் ஆதரவு கேட்க வேண்டிய அவசியம் என்ன? டெல்லியில் தலைமைக் கழக கட்டட அலுவலகத்தை பார்க்கப்போகிறேன் எனக்கூறிவிட்டு, 6 கார்கள் மாறி திருட்டுத்தனமாக உள்துறை அமைச்சரை சந்தித்தார் பழனிசாமி. ஆனால் இன்று புருடாவிட்டு பேசுகிறார்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- Sep 16, 2025 11:27 IST
இளையராஜா பாராட்டு விழாவில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? - குஷ்பு கேள்வி
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. சமீபத்தில் இளையராஜாவின் பாராட்டு விழாவில்கூட முன்வரிசையில், முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் இளையராஜா பாராட்டு விழாவில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? அவர் இசையில் பெண்கள் பாடவே இல்லையா? என்று பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேசியுள்ளார்.
- Sep 16, 2025 11:12 IST
வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கிராண்ட் சுவிஸ் தொடரை வென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Sep 16, 2025 11:08 IST
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான்: டிடிவி தினகரன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்தான் எடப்பாடி. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராக காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
- Sep 16, 2025 11:01 IST
டெங்கு காய்ச்சலால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை - அண்ணாமலை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சென்னை அருகே நடைபெறும் பாஜக மாநில சிந்தனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
- Sep 16, 2025 10:57 IST
பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்
அக்கரையில் உள்ள விடுதியில் பாஜகவின் மாநில சிந்தனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா. வானதி, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- Sep 16, 2025 10:45 IST
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாதனை
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Sep 16, 2025 10:23 IST
7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Sep 16, 2025 10:21 IST
ராமசாமி படையாச்சியார் சிலைக்கு முதல்வர் மரியாதை
சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினம் இன்று. சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
- Sep 16, 2025 10:16 IST
தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,280-க்கும் விற்பனையாகிறது.
- Sep 16, 2025 10:14 IST
செய்யாறு கால்வாயில் சடலம் கண்டெடுப்பு
செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டு சாலையில் சாலையோர கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் (47) என்பவர் கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 16, 2025 10:14 IST
அதிமுகவிற்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி : ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டார். அதில், "இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக எடப்பாடி உள்ளார். பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடி திகழ்ந்து துரோகிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்; இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை செல்லாக்காசுகள் எடுத்து வைக்கின்றன. அதிமுகவிற்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி,"இவ்வாறு தெரிவித்தார்.
- Sep 16, 2025 08:59 IST
சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.ஏ.புரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் மூப்பனார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராயர் நகரில் உள்ள போத்தீஸ் கார்ப்பரேட் அலுவலகம், கிடங்கு, ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- Sep 16, 2025 08:58 IST
24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட ௨௪ மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 16, 2025 08:52 IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பத்திக்கப்பட்டுள்ளது. 317 பயணிகளுடன் தோகாவில் இருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. சென்னையில் இருந்து மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- Sep 16, 2025 08:45 IST
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் காஜல் விகாஸ் என்ற 27 வயது பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருந்தாலும் குறைந்த எடை காரணமாக குழந்தைகள் நான்கு பேரும் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Sep 16, 2025 08:42 IST
திருப்பதியில் விடிய விடிய கனமழை: பக்தர்கள் பாதிப்பை தடுக்க நடவடிக்கை
திருப்பதி மலை பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- Sep 16, 2025 08:41 IST
பாதுகாப்பு கேடயமாக பணய கைதிகள் கொடூரமான செயல்: ட்ரம்ப்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக பணயக் கைதிகளை மனித கேடயமாக ஹமாஸ் பயன்படுத்துகிறது ஹமாஸ் செய்வது மனித தன்மையற்ற செயல், அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
- Sep 16, 2025 08:10 IST
30 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த ஜூவாலா கட்டா
பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜூவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளார். இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி வீதம் 30 லிட்டர் தாய்ப்பாலை ஜூவாலா கட்டா தானமாக வழங்கியுள்ளார்.
- Sep 16, 2025 08:09 IST
சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை - அமெரிக்கா
சீனா, இந்தியா மீது ஐரோப்பிய நாடுகள் கூடுதல் வரிகளை விதிக்கும் வரை அமெரிக்கா அதிக வரி விதிக்கும் திட்டம் இல்லை. உக்ரைன் போரை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் பங்களிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைப்பதிலும், ஐரோப்பிய நாடுகள் வலுவான பங்கை வகிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- Sep 16, 2025 08:06 IST
டெல்லி புறப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிகாலை 5 மணிக்கு டெல்லி புறப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.