தொண்டர்கள் மீது தாக்குதல் : என்மீது விழுந்த அடியாக நினைக்கிறேன் – சசிகலா அறிக்கை

Tamilnadu News : தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது வழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நினைக்கிறேன்

Tamilnadu News Update : அதிமுக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்ய வந்த தொண்டர்கள் மீது தாக்கல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடநத 2016-ம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் ஆனது,  ஒபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகியது, எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டது என பல நிகழ்வுகள் நடந்தது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவி கொண்டு வரப்பட்டது.

இதில் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் பதவியில் உள்ளனர். தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுகவின் நிர்வாகிககள் பலரும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்இ. ஆனாலும் கட்சியில் தான் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலருடன் பேசி வருகிறார். ஆனால் சசிகலாவுடன் தொடர்பில் இருந்து வரும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஒபிஎஸ் இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உட்கட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓம்பொடி பிரசாத் சிங் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். ஆனால் அவருக்கு வேட்புமனு வழங்காமல், தகாத வார்த்தைகளால் திட்டிய சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரசாத் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து தனது அதிப்தியை வெளிப்படுத்தியுள்ள வி.கே.சசிகலா அதிமுக அலுவலக மோதலை சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும்பொறுத்துக்கொள்ள தமாட்டேன் ஒரு இயக்கத்திற்கு தொண்டர்கள் தான் முக்கியமே தவிர குண்டர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது வழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நினைக்கிறேன். ஒரு தலைமையால் தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால் தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில் நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியம் உணாந்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu politics v k sasikala condemn statement about admk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express