பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றம் சாட்டப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 காவலர்கள் சஸ்பெண்ட்

Tamilnadu News Update : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Pollachi Sexual Assault Case Update : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்களின் உறவினர்களை சந்திக்க உதவிய ஒரு சிறப்ர் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  வழக்கில், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரீராஜன் 5 பேர் குற்றம் சாட்ப்பட்டுள்ள நிலையில், இவர்கள் 5 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுளளனர். இது தொடர்பாக வழக்கு விசாரனை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் விசாரணைக்காக நேற்று (புதன்கிழமை) மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிய போலீசார் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில் கோவை விமான நிலையம் அருகே போலீஸ் வாகனம் நின்றது. அங்கு காத்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையில் விதிகளை மீறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடிய சம்பவம் குறித்து வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாக பரவிய நிலையில்,குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என்றும், இந்த சிறப்பு அனுமதி அளித்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் மாநில காவல்துறையை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,சேலம் கமிஷனர் நஜ்முல் ஹோடா, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், கிரேடு I கான்ஸ்டபிள்கள் பிரபு, வேல்குமார், கார்த்தி மற்றும் கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார் என எஸ்கார்ட் குழுவில் இருந்த 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu pollachi sexual assault case 7 police officers suspended

Next Story
பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: தீபாவளி பட்டிமன்றத்தில் பேசுவாரா?Bharathi Baskar current health conditions, Solomon Pappaiah, Raja, Bharathi Baskar, Pattimandaram, பாரதி பாஸ்கர், பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம், தீபாவளி பட்டிமன்றத்தில் பேசுவாரா பாரதி பாஸ்கர், tamil news, tamil pattimandram, diwali pattimandram
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express