பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தில் வெளியூர் சென்று வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து பண்டிகையை கொண்டாடுவார்கள். இவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பண்டிகை நெருங்கும் சமயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், பண்டிகை தொடங்க சில மாதங்களுக்கு முன்பே ரயில் மற்றும் பெருந்து டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிவிடும். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், வெளியூருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமாக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 13-ந் தேதியும், ஜனவரி 12-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 14-ந் தேதியும், ஜனவரி 13-ந் தேதி பயணிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 15-ந் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ந் தேதி பயணிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 16-ந் தேதியும், பொங்கல் (ஜனவரி 15)அன்று பயணிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 17-ந் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் முன்பதிவு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil