/tamil-ie/media/media_files/uploads/2022/12/Tamilnadu.jpg)
Tamilnadu Pongal gift 2023
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து, அனைத்து மக்களுக்கும் பொங்கல் தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையை பொறுத்தவரை துணை ஆணையாளர் இப்பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
ஜனவரி 9 ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் பணி தொடங்க வேண்டும். பச்சரிசி, சர்க்கரை உரிய தரத்துடன் இருப்பதை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்
நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு ஜனவரி 3 முதல் 8 வரை டோக்கன்களை வழங்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்காமல் அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொங்கல் பரிசு வழங்கும் நாட்களில் நியாய விலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். மேலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் தொடர்பாக புகார் அளிக்க 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.