Advertisment

பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கலையா? இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க: கோவை ஆட்சியர்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Govt when will announce Pongal gifts, pongal gifts, when will announce Pongal gifts, pongal gifts to ration card holder, பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது, பொங்கல் பரிசுத் தொகுப்பு, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது, Pongal festival, pongal gifts

தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியரே முழு பொறுப்பு என தெரிவித்துள்ள தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

"2023-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/-ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்கள் 03.01.2023 முதல் 08.01.2023 வரை குடும்ப அட்டையிள் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் தாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும்.

பொங்கல் பரிசு நியாயவிலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்: 0422-2300569

மாவட்ட வழங்கல் அலுவலர் : 9445000245

தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் வடக்கு : 9445000246

தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் மேற்கு : 9445000250

தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் தெற்கு : 9445000247

தனி வட்டாட்சியர் பொள்ளாச்சி : 9445000252

தனி வட்டாட்சியர் அன்னூர்: 9445796442

வட்ட வழங்கல் அலுவலர் மதுக்கரை: 9445000248

வட்ட வழங்கல் அலுவலர் ஆனைமலை: 9361646312

வட்ட வழங்கல் அலுவலர் பேரூர்: 9445000249

வட்ட வழங்கல் அலுவலர் கிணத்துக்கடவு: 9445796443

வட்ட வழங்கல் அலுவலர் மேட்டுப்பாளையம்: 9445796443

வட்ட வழங்கல் அலுவலர் சூலூர்: 9445000406

வட்ட வழங்கல் அலுவலர் வால்பாறை: 9445000253

என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Festival Pongal Gift
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment