ஏற்காடு சென்ற சீரியல் படக்குழு வேன் விபத்து: 2 பேர் பலி

Tamilnadu News Update : படப்பிடிப்புக்காக ஏற்காடு சென்றிருந்த சீரியல் குழு ஒன்று விபத்தில் சிக்கியதில் இருவர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

Serial Team Accident In Yercaud : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் படப்பிடிப்புக்கு சென்ற சீரியல் குழுவினர் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டில் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது சினிமா மற்றும் சினத்திரை படப்பிடிப்புகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த பிரபல சீரியல் குழு ஒன்று கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தங்கி படப்பிடிப்பை நடந்தி வந்துள்ளனர். இதில் நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட் என்ற பகுதியில் படப்பிடிப்பை முடித்த குழுவினர், அங்கிருந்து பெலாத்தூர் பகுதிக்கு வேனில் சென்றுள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் இந்த வேனை ஓட்டிச்சென்ற நிலையில், சாலையின்  வளைவான பகுதியில் சென்றபோது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. இதை கவனித்த டிரைவர், உடனடியாக வேனை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பார்ராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 30 அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்த வர்கள் இருவரும் மதுரையை சேர்ந்த பாண்டியன்(41), சஞ்சய் (33) என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான இருவரின் உடலையும், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த ஏற்காடு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu popular serial team accident in yercaud salem

Next Story
Tamil News Highlights: தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X