Advertisment

சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு : இஸ்ரோ, ஐஐடி விஞ்ஞானிகளின் உதவியை நாடும் அமலாக்கத்துறை

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்காக இஸ்ரோ மற்றும் ஐஐடி-கே விஞ்ஞானிகளின் உதவியை நாடியுள்ளது அமலாக்கத்துறை

author-image
WebDesk
New Update
sand quarrying, cauvery river,high court madurai bench

மணல்கொள்ளை தொடர்பான வழக்குகள்

தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாப மணல் எடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட புகாரின் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி-கே) ஆகியவற்றின் நிபுணர்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது குறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் ஆற்றுபடுககைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிபப்டியான மணல்கள் எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் மீது கடந்த செப்டம்பர் 12, 2023 அன்று வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகரிகள் கடந்த சில வாரங்களாக மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு விபரங்களை சமர்பிக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த வழக்கு விசாரணையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், இஸ்ரோ மற்றும் ஐஐடி-கே விஞ்ஞானிகளின் ஆதரவைக் கேட்டுள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழகத்தில் உள்ள மணல் எடுக்கும் ஆற்றுப்படுகைகளில் வெட்டியெடுக்கப்பட்ட மணலின் பரப்பளவு மற்றும் அளவை ஆய்வு செய்து மதிப்பிடுவார்கள். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், சுமார் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில், மணல் விற்பனையில் முறைகேடுகளை சுட்டிக்காட்டிய போலி ரசீதுகள் மற்றும் போலி க்யூஆர் குறியீடுகள் உள்ளிட்ட குற்றசாட்டு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.

தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகரிகள், மணல் ஸ்டாக்யார்டுகளில் பரிவர்த்தனைகளின் தரவை உள்ளிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளின் மெமரிகார்ட்ஸ் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இந்த ஆதாங்களின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெட்டியெடுக்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட மணலின் அளவு குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டிருந்தனர்.

செயற்கைக்கோள் படங்கள்

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின், அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆற்றுப்படுகை தளங்களின் செயற்கைக்கோள் படங்களை வழங்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை வைத்து அமலாக்கத்துறை மணல் அகழ்வின் அளவைக் கணக்கிடவும், சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட அளவு மற்றும் கருவூலத்திற்கு ஏற்படும் இழப்பை மதிப்பிடவும் உதவும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதற்கிடையில், நீர்வளத் துறையின் உயர் அதிகாரி - தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஜெனரல் ஏ. முத்தையா - மாநிலத்தில் மணல் அகழ்வு மற்றும் விற்பனைக்கு பொறுப்பான மூத்த பொறியாளர்களிடம் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். இதில் அவரது பதவிக்கு மற்றொரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Sand Mafia Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment