சீமான் திருந்த வேண்டும்; இல்லை எனில் திருத்தப்படுவார்: டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

கள் இறக்கி அவர் குடித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கள்ளு குடிக்க வைத்தார். இது சட்ட விரோதமானது. காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

கள் இறக்கி அவர் குடித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கள்ளு குடிக்க வைத்தார். இது சட்ட விரோதமானது. காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Krishnasamy

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கடுமையாக விமர்சன்ங்களை முன்வைத்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கள் உணவல்ல அது விஷம். தமிழ் இலக்கியங்களில் கூட கள் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கி குடித்ததையும், அதை ஒரு போராட்டமாகவும் செய்தார். இது குறித்த தகவல் வெளியானபோதே நாங்கள் கள் ஒரு உணவல்ல விஷம் என்று தெரிவித்திருந்தோம். அதையும் மீறி சீமான் கள் இறக்கினார்.

கள் இறக்கி அவர் குடித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கள்ளு குடிக்க வைத்தார். இது சட்ட விரோதமானது. காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். “கள் என்பது உணவல்ல, அது ஒரு விஷம். தமிழ் இலக்கியங்களில் கூட கள் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள் என்பது ஏழை மக்களை மேலும் அடிமையாக்கும் ஒரு கருவி..

புதிய தமிழகம் கட்சி தொடங்கிய நாள் முதல் பூரண மதுவிலக்கையே முக்கியக் கொள்கையாக வைத்திருக்கிறோம்.இது தொடர்பாக 2023-ல் ஆளுநர் மாளிகை நோக்கி மதுவிலக்கு பேரணி நடத்தப்பட்டது.சீமான் போன்றவர்கள் “தமிழ் தேசியம்” பேசிக்கொண்டே கள் குடிப்பதை ஊக்குவிப்பது ஆபத்தானது, இது ஈழத் தமிழர்களிடமிருந்து வருகிற நன்கொடை பணத்தை தவறாக பயன்படுத்துவதைப் பறைச்சாற்றுகிறாா. தமிழ் தேசியம் பேசிக் கொண்டே சாராய அரசியல் செய்ய முயல்கிறார் சீமான்.

Advertisment
Advertisements

இது ஓர் அபாயகரமான முன்னுதாரணம். சீமான் திருந்த வேண்டும், இல்லையெனில் திருத்தப்படுவார். ஜூன் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற “கல் இறக்கும்” நிகழ்வில் பங்கேற்றவர்களையும் சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் வலியுறுத்துகிறேன். “இந்த நாட்டு மக்கள் 70 ஆண்டுகளாக குடியிலிருந்து முன்னேற முயல்கின்றனர். இதுபோன்ற பித்தலாட்டக்காரர்கள் அவர்களை மீண்டும் கீழ்த்தட்ட மக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இதை தமிழக மக்கள் புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும். மாநில அளவில் போராட்டங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.  எதிர்காலத்திலும் இதுபோன்று கள் மீது விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: