Advertisment

புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை

ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Pudukottai Collector

புதுக்கோட்டை ஆட்சிர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pudukkottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment