சென்னையில் இன்று (ஜன.8) மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மழை மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் முதல் மகாபலிபுரம் வரை மையம் கொண்டிருந்தன. தற்போது அவை டெல்டாவிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து கடலூர், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்சென்னை பகுதியில் 50 முதல் 70 மி.மீ வரை மழை பெய்துள்ளது.
மழை மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் முதல் புதுச்சேரி வரை உள்ளதால் இன்றும் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் கனமழை பெய்யும். இப்போது மழை மேகங்கள் ழுப்புரம் மாவட்டங்கள் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் அடுத்த சில மணிநேரங்களில் செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்யும்.
எனவே, சென்னையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால் சமாளிக்கக்கூடிய வகையில் சாதாரண கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூரில் இன்று கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார்.
https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02txAxgSUZzWdEtgJRkC9jtCDZHq8FUqoZyPuMhYaxjiybEHgtLq5rk3hyu1pZy4Bql&id=100044481604368&sfnsn=wiwspmo&mibextid=RUbZ1f&paipv=0&eav=Afbxysf5resN6_c2avicqaztBJH9fm7MD0cwv1l2N3HEl4ObaeG1Wy37k6MNSEmVZcs&_rdr
டெல்டா பகுதிகளான திருவாரூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது எனவும்" அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக இன்று (ஜன.8) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“