தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளியில் அதிகமாக இருந்தது. இந்த முறை ஜூன் மாதத்திலும் அதிக வெப்ப நிலையில் நிலவுகிறது. இன்னும் தென்மேற்கு பருவ மழை தொடங்கவில்லை. இந்நிலையில் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது. இந்நிலையில் வரும் 2 நாட்களில் சென்னையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil