வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இன்று (நவம்பர் 10) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி நிர்வாக விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது உணவின்றி தவிப்பவர்களுக்கும் உணவுப் பொட்டலங்களையும் அளித்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழுப் பகுதி வலுவடைந்து இன்று (நவம்பர் 10) ஆஆளாஈ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மட்னலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையில் இருந்து 850 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது. இது வடமேற்கில் நகர்ந்து நாளை (நவம்பர் 11) சென்னை கடலூர் அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், சென்னைக்கு அருகில் மேகங்கள் நகர்கின்றன. கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் நாளை மதியம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேகங்கள் இப்போது காரைக்கால் – நாகை பகுதிகளை தெளிவாக உள்ளது. மேகங்கள் கடலூர் – சென்னை பகுதிகளுக்கு மாறுவதைக் காணலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“