Advertisment

Tamil News Highlights: “இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” - ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
arr son

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் தினமும் சற்று மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.73க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.32க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் : சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 45.33% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 55.03% ; புழல் - 72.48% ; பூண்டி - 15.75% ; சோழவரம் - 10.64% ; கண்ணன்கோட்டை - 61.4%

  • Nov 19, 2024 21:56 IST
    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில், பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை - சென்னை எழும்பூர் ரயில், பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Nov 19, 2024 21:47 IST
    நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம்... தீவிரவாதி போல கைது செய்யப்பட்டார் - பிரேமலதா விஜயகாந்த்

    தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: “நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம், தீவிரவாதியைப் போல கைது செய்யப்பட்டுள்ளார். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஏற்ப கஸ்தூரி பேசத் தெரியாமல் பேசி சிக்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 19, 2024 21:42 IST
    திருச்சி கல்லணையில் சீனாவைச் சேர்ந்த 2 பேர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

    திருச்சி கல்லணையில் வைத்து சீனாவைச் சேர்ந்த இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து செயல்படும் டிஜிட்டல் லோன் செயலிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருச்சியில் தங்கியிருந்த ஷியோ யா மாவோ (Xio Ya Mao) மற்றும் யுவான்லுன் (Yuanlun) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Nov 19, 2024 21:39 IST
    சீமான் வாய்ச்சொல் வீரர் - அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு

    கருணாநிதி சிலையை உடைப்பதாகத் தெரிவித்த சீமானுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு: “சீமான் வாய்க்கு வந்ததைப் பேசுவதில் பலனில்லை; ட்தேர்தல் களத்தில் நிரூபிக்க வேண்டும்; சீமான் வாய்ச்சொல் வீரர்; சீண்டல் என்பது வார்த்தையில் அல்ல பிரயோகத்தில் இருக்க வேண்டும்; லட்சங்களைக் கொண்ட கரம் சிலையை உடைத்தால் கோடிக்கு மேலான கரங்கள் எப்படி வேடிக்கை பார்க்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.



  • Nov 19, 2024 20:54 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிகை  - ஐகோர்ட் நாளை தீர்ப்பு

     

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 20) தீர்ப்பளிக்கிறது. 



  • Nov 19, 2024 20:10 IST
    நாகூர் தர்கா கந்தூரி விழா: 45 கிலோ சந்தனக் கட்டை வழங்க ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு வக்ஃப் வாரிய கோரிக்கையை ஏற்று நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். வனத்துறை இருப்பில் உள்ள சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி தருவதற்கான ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.



  • Nov 19, 2024 19:46 IST
    மணிப்பூர் வன்முறை: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்

    மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூரில் வரலாறு காணாத வன்முறையால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.



  • Nov 19, 2024 19:30 IST
    கடலூரில் பேனர் விழுந்து வாகன ஓட்டி காயம்

    கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் விளம்பரப் பலகை பேனர் அறுந்து விழுந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டி காயம் அடைந்தார். பேனர் விழுந்து வாகன ஓட்டி காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



  • Nov 19, 2024 19:28 IST
    தமிழக வீராங்கனை மரணம் - போலீசார் புதிய தகவல் 

    கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணைகுப் பிறகு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    விளையாட்டின் போது வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது. வயிற்றில் வலி ஏற்பட்டதால் உடல் உபாதைப் பிரச்னை எனக்கருதி அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மத்தியப் பிரதேசத்திற்கு போட்டிக்காக சென்றவர் சென்னைக்கு ரயிலில் திரும்பும் போது சிக்கன் ரைஸ், பர்கர் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார். சென்னையை நெருங்கும் போது வயிற்றில் வலி ஏற்பட, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை எடுத்துவிட்டு பெரவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



  • Nov 19, 2024 19:26 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் நாளை தீர்ப்பு

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரிய பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் மனுவின் மீது உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளது. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. 



  • Nov 19, 2024 19:22 IST
    சீமான் வாய்ச்சொல் வீரர்: அமைச்சர் சேகர்பாபு

    "சீமான் வாய் சொல்லில் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக்கூடாது. பலப்பிரயோகம் இருக்க வேண்டும். அதேபோல் தேர்தல் களங்களில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இதை தவிர்த்து விட்டு, வாய்க்கு வந்ததை பேசிவிட்டு போனால், எந்த பலனும் கிடையாது. என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 



  • Nov 19, 2024 18:57 IST
    "அரசியல் களத்தில் எடுபடாது" - கே.பாலகிருஷ்ணன் 

    "சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது மோகம் பெரிதாக இருக்கும். த.வெ.க-வுடன் எந்தக் கட்சிகளும் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அது அரசியல் களத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது." என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 



  • Nov 19, 2024 18:53 IST
    சென்னையில் பாலின சமத்துவ நடைக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

    “சென்னை மாநகரில் “ஹேப்பி சண்டே” என்ற பெயரில் பல மணி நேரம் பிரதான சாலைகளில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் காவல் துறை, போக்குவரத்து குறைவான இரவு 10 மணிக்கு நடைபெறவிருந்த பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுத்ததோடு, காவல் துறை சொன்ன இடத்தில் நடத்திய உறுதி ஏற்பு நிகழ்வுக்கும் வழக்குப் பதிவு செய்வது அராஜகமான நடவடிக்கையாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

     



  • Nov 19, 2024 18:40 IST
    பட்டப்பகலில் இளைஞருக்கு கத்திக்குத்து!

    சென்னையில் பட்டப்பகலில் இளைஞருக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிருக்கு பயந்து இளம் பெண்ணை விட்டு விட்டு  தப்பி  இளைஞர் ஓடியுள்ளார். காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்துள்ளனர். 



  • Nov 19, 2024 18:38 IST
    'கட்சிக்கு உழைத்தால் மட்டுமே பதவி' - புஸ்ஸி ஆனந்த் 

    'கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். த.வெ.க தலைவர் விஜய்யை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பது தான் ஒரே இலக்கு" என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். 



  • Nov 19, 2024 18:36 IST
    நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ல் தொடங்கவுள்ள நிலையில், நவம்பர் 24ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நவம்பர் 24ல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 



  • Nov 19, 2024 18:31 IST
    தவறான சிகிச்சையால் பெண் பலியா?

    சேலம் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 



  • Nov 19, 2024 18:26 IST
    சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் - வாபஸ் வாங்கிய பழங்குடி மக்கள் 

    எஸ்.டி. சாதிச் சான்று கேட்டு நடைபெற்று வந்த காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மதுரை பரவை, சமயநல்லூரில் 13 நாட்களாக நடைபெற்று வந்த காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டக் குழுவுடன் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.



  • Nov 19, 2024 18:16 IST
    சொர்க்கவாசல் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

    சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளது.



  • Nov 19, 2024 17:43 IST
    பாகன் மனைவிக்கு பணி - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு 

    “திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்தனர். பாகன் மனைவிக்கு திருக்கோயிலில் பணிக்கு ஏற்பாடு செய்வோம். இரண்டு குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 



  • Nov 19, 2024 17:41 IST
    சென்னை: ஆண்களுக்கான கருத்தடை சிறப்பு முகாம்கள்

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் 28 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நகர்ப்புற சமுதாய நல மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Nov 19, 2024 17:36 IST
    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 



  • Nov 19, 2024 16:51 IST
    "தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டது": எல்.ஐ.சி விளக்கம்

    எல்.ஐ.சி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்ததாகவும், தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் இடம்பெற்றுள்ள வகையில் சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 19, 2024 16:31 IST
    "யார் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படலாம்": திருமாவளவன்

    யார் வேண்டுமானாலும்  ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியை கைப்பற்ற நினைப்பது தவறில்லை எனவும், எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்கள் மக்கள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.



  • Nov 19, 2024 16:19 IST
    சடலங்களை பெற்றுச் சென்ற உறவினர்கள்

    திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூராய்வு நிறைவுபெற்ற பின்னர், சடலங்களை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.



  • Nov 19, 2024 16:16 IST
    பெண் உயிரிழப்பு -உறவினர்கள் சாலை மறியல்

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



  • Nov 19, 2024 16:09 IST
    ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம்

    சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Nov 19, 2024 15:50 IST
    "எல்.ஐ.சி இணையம் வாயிலாக இந்தியை திணிப்பதா?": ராமதாஸ் கண்டனம்

    எல்.ஐ.சி இணையம் வாயிலாக இந்தியை திணிப்பதா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி இணையதள முகப்பை இந்தியில் மாற்றியது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், அதனை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 19, 2024 15:46 IST
    விஏஓ சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    சிவகங்கை மாவட்டம், கீழநெட்டூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய ராக்கு என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.



  • Nov 19, 2024 15:22 IST
    சென்னையில் பன்னாட்டு புத்தக திருவிழா 

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், 2025 ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 



  • Nov 19, 2024 15:17 IST
    திரைத்துறையினர் அரசியல் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல்

    திரைத்துறையினர் அரசியல் பேசுவதை தவிர்க்கலாம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எந்த தொழில்துறையினரும் அரசியல் பேசுவதில்லை எனவும், அது போலவே திரைத் துறையினரும் அரசியல் பேசாமல் இருந்தால் துறை சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 19, 2024 13:59 IST
    நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் மரணம்

    திருப்பத்தூர் அருகே சின்னவெங்காயப்பள்ளி பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் நிலத்தில் நெல் அறுவடை பணியின் போது ஏற்பட்ட விபத்தில், அறுவடையில் ஈடுப்பட்டிருந்த சசி என்பவர் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சசியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



  • Nov 19, 2024 13:20 IST
    10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Nov 19, 2024 13:17 IST
    தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனத்தில் வருமான வரி சோதனை

    ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாலிஹோஸ் தொடர்புடைய 50 இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம் ரூ200 கோடி முதலீடு செய்ய கடந்த வாரம் தமிழக அரசுடன் புரிந்துணைர்வு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தில் வருமாவரி சோதனை நடந்து வருகிறது. 



  • Nov 19, 2024 13:14 IST
    எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு இ.பி.எஸ் கடும் கண்டனம்!

    பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.



  • Nov 19, 2024 12:51 IST
    இந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்

    இந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது.

     இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

    இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 



  • Nov 19, 2024 12:49 IST
    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கான அப்டேட்

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து 25-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர்,தஞ்சை, நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது



  • Nov 19, 2024 12:17 IST
    சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஃபாக்ஸ்கான் விண்ணப்பம்

    ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை  ரூ.1,792 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஃபாக்ஸ்கான் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 



  • Nov 19, 2024 11:47 IST
    தச்சு தொழிலாளி மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள் போராட்டம்

    தச்சு தொழிலாளி மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழைகளின் வீடுகளை அகற்றக்கூடாது என முழக்கம் எழுப்பினர். ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக வருவாய் துறை நோட்டீஸ் ஒட்டியதால் மன உளைச்சலில் இருந்த தச்சு தொழிலாளி தற்கொலையால் உயிரிழந்தார். 



  • Nov 19, 2024 11:29 IST
    இ.பி.எஸ் டிச.11-ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Nov 19, 2024 11:11 IST
    சென்னை ஐகோர்டில் இ.பி.எஸ் ஆஜர்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராகினார். 

    கடந்த அதிமுக ஆட்சியில் நெஞ்சாலைத்துறையில் ₹692 கோடி ஊழல் நடந்ததாக கூறிய அறப்போர் இயக்கத்திடம் ₹1.1 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் சாட்சியம் அளிக்க வருகை தந்துள்ளார்.



  • Nov 19, 2024 10:26 IST
    இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

    இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.



  • Nov 19, 2024 10:10 IST
    பிரான்ஸ் அதிபர் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

    விண்வெளி, ஆற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் கலந்தாலோசித்ததாக  பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Nov 19, 2024 09:39 IST
    தங்கம் விலை உயர்வு

    தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 7065 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • Nov 19, 2024 09:34 IST
    வீடு திரும்பிய பாலாஜி மருத்துவர்

    சென்னையில் கடந்த வாரம் கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய  நிலையில் சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 



  • Nov 19, 2024 09:32 IST
    முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்ட LIC இணையதளம்

    இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.



  • Nov 19, 2024 09:10 IST
    பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்

    பிடிவாதத்தை கைவிட்டு மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும், மணிப்பூர் 
    மக்களிடம் உரையாடி, அவர்களின் குறை, விருப்பங்களை கேட்டறிய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Nov 19, 2024 09:07 IST
    கோயில் யானை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு

    திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்து இருவர் உயிரிழந்தது தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Nov 19, 2024 08:40 IST
    சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.



  • Nov 19, 2024 08:37 IST
    ரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

    என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் வீடு மற்றும் வில்லிவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் தொடர்புடைய உறவினர்களின் வீடுகளில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை  செய்து வருகின்றனர்.



Rain In Tamilnadu Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment