பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சில நாட்களாகவே மாற்றம் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.13% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 56.24% ; புழல் - 71.73% ; பூண்டி - 15.82% ; சோழவரம் - 10.64% ; கண்ணன்கோட்டை - 61.20%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 21, 2024 13:09 ISTகடன் நிலுவை தொகையை செலுத்தாதவர் வீட்டில் பெயிண்டால் எழுதி வைத்த நிதி நிறுவனம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகையை செலுத்தாதவர் வீட்டில், இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெரிதாக பெயிண்டால் நிதி நிறுவனம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Nov 21, 2024 12:40 ISTஎடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது டெண்டர் முறைகேடு வழக்கில் திமுக அரசு சிபிஐ விசாரணை கோரவில்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சி.பி.ஐ விசாரணையை வரவேற்று இ.பிஎஸ் தன் மீதான புகாரில் விசாரணையை எதிர்ப்பது ஏன் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
-
Nov 21, 2024 12:29 ISTதனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகினர்.
திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்,
-
Nov 21, 2024 12:19 ISTதனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர்
விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.
கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் - ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகினர்.
-
Nov 21, 2024 12:14 ISTபுயலாக மாற வாய்ப்பு
வங்கக்கடலில் இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறுகிறது
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும். சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
-
Nov 21, 2024 11:46 ISTஎலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலி
சென்னையில் எலி மருந்து நெடியால் உயிரிழந்த 2 குழந்தைகள் உடல் சொந்த ஊரான பட்டீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. குழந்தைகளின் உடல்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். உயிரிழந்த சிறுவன் சுதர்சனுக்கு இன்று பிறந்தநாள் என்பது அங்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Nov 21, 2024 11:29 ISTஆதாரமற்ற அவதூறுகளை பரப்புகின்றனர் - திருமாவளவன்
வி.சி.க மீது காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம். நம்மை பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புகின்றனர். விமர்சனங்கள் என்ற பெயரால் அப்பட்டமான அவதூறுகளை பரப்புகின்றனர் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
Nov 21, 2024 10:42 ISTபிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பிற்பகல் 1மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 21, 2024 10:12 ISTஅதானி பங்குகள் பெரும் வீழ்ச்சி!
லஞ்சம் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
-
Nov 21, 2024 09:28 ISTதூதரகங்கள் தற்காலிகமாக மூடல்
உக்ரைனில் ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் கீவ் நகரில் உள்ள தூதரக அலுவலகங்களை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின்,கிரீஸ் நாடுகள் தற்காலிகமாக மூடின.
-
Nov 21, 2024 08:49 ISTடெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசினால் 50 சதவீத அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Nov 21, 2024 08:47 ISTவீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
பாம்பனில் நேற்று பெய்த மழையால் மீனவ குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
-
Nov 21, 2024 08:46 ISTதயார் நிலையில் மீட்புப் படையினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 7010363173 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
-
Nov 21, 2024 08:35 ISTகோயிலுக்குள் புகுந்த மழைநீர்
திருச்செந்தூர் பகுதியில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையால் பந்தல் மண்டபம் சிவன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.
-
Nov 21, 2024 08:10 ISTபள்ளிக்கு விடுமுறை - ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்
தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
-
Nov 21, 2024 08:07 ISTமருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை
மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணி காலத்தை ஓராண்டாக குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Nov 21, 2024 07:57 ISTமீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதை அடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 21, 2024 07:23 ISTசபரிமலையில் அலர்ட்டாக இருக்கும் அதிரடிப் படை!
சபரிமலையில் கோவில் சன்னிதானத்தைச் சுற்றி RAF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Nov 21, 2024 07:22 ISTஹாக்கி: கோப்பையை வென்றது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.