/indian-express-tamil/media/media_files/2025/05/26/eW2RjfG0cnZwonDiCiHI.jpg)
Today Latest News Live Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 23, 2025 10:03 IST
தாம்பரத்தில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
தாம்பரத்தில் 10,000 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. ஆக.6 - 22 வரை நடந்த தடுப்பூசி முகாமில் 10,167 தெருநாய்களுக்கு தடுப்பூசி - மாநகராட்சி தகவல்
- Aug 23, 2025 10:02 IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்ற தங்க மகள்
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- Aug 23, 2025 10:00 IST
சிறையில் இருந்து ஊழலை எப்படி எதிர்க்க முடியும்? பிரதமர் மோடி கேள்வி
சிறையில் இருந்தும் பதவியில் இருக்கும் அணுகுமுறை தொடர்ந்தால், ஊழலை எப்படி எதிர்த்து போராட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் மோடி, ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், தானாகவே அவர் வேலையை இழப்பார் எனவும் கூறியுள்ளர்.
- Aug 23, 2025 09:18 IST
ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக, 2 வாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், வரி விதிப்பு, பொருளாதாரத் தடை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Aug 23, 2025 09:16 IST
சென்னை துரைப்பாக்கத்தில் 19.5 செமீ மழை பதிவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 13 இடங்களில் மிக கனமழை பதிவாகி இருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 செமீ மழை பதிவு பள்ளிக்கரணை - 17.7 செமீ, மேடவாக்கம் -17 செமீ, பாரிமுனை -15.9 செமீ, மடிப்பாக்கம் - 15.7, ஈஞ்சம்பாக்கம் 14 செமீ மழை பதிவு ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Aug 23, 2025 09:15 IST
அமெரிக்காவில் விசாக்கள் மறுபரிசீலனை
அமெரிக்காவில் வசிக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
- Aug 23, 2025 09:11 IST
உத்தரகாண்டில் சாமோலியில் மேக வெடிப்பு - வீடுகள் சேதம்
உத்தரகாண்ட், சாமோலியின் தாராலி தாலுகாவில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி முற்றிலுமாக சேதம் மேக வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு குழு விரைந்துள்ளது - 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 23, 2025 09:10 IST
ஆக.25ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Aug 23, 2025 09:09 IST
கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புழல் ஏரிக்கு நீர்வரத்து 278 கன அடியிலிருந்து, 880 கன அடியாக அதிகரிப்பு - சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் திறப்பு
- Aug 23, 2025 07:47 IST
பாஜக பூத் கமிட்டி மாநாடு - அமித்ஷா பேச்சு
ஒரு நாளும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப்போவதில்லை, ராகுல் காந்தி பிரதமராக வரவே முடியாது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
- Aug 23, 2025 07:46 IST
`டிக்டாக்' செயலி மீதான தடை நீக்கமா?
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனாவின் `டிக்டாக்' செயலிக்கு அனுமதி அளிக்கவில்லை. தடை நீக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானவை என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
- Aug 23, 2025 07:45 IST
சென்னையில் காலை 10 மணி வரை மழை தொடரும்
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கும் தி.மலை, விழுப்புரம்,வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகையில் மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Aug 23, 2025 07:43 IST
தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி மரணம்
சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார், மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Aug 23, 2025 07:41 IST
சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
திருவள்ளூர் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் புழல் ஏரிக்கு நேற்று 278 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 880 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு 122 கன அடி நீர்வரத்து வர தொடங்கியது.
- Aug 23, 2025 07:23 IST
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், கிண்டி, அடையாறு உள்பட பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- Aug 23, 2025 07:22 IST
இந்தியா வரும் அர்ஜென்டினா கால்பந்து அணி
கால்பந்து உலகின் முன்னணி வீரரான அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி இந்தியா வரும் பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளது.
- Aug 23, 2025 07:19 IST
லயோலா கல்லூரி எதிரே வேரோடு சாய்ந்த மரம்
சென்னை லயோலா கல்லூரி எதிரே உள்ள டேன்க் பண்ட் (tank bund) காலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்த நிலையில், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.