Chennai News LIVE Updates: ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய சுதர்சன் ரெட்டி

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin vs sudharsan

Today Latest News Live Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 24, 2025 18:22 IST

    பா.ரஞ்சித்தின் “தண்டகாரண்யம்” டீசர் நாளை வெளியீடு

    பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகிறது.



  • Aug 24, 2025 17:43 IST

    "மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும்"

    “அரசியலமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள். நமது அரசமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும். ‘தமிழர்’ என்ற முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

     



  • Advertisment
  • Aug 24, 2025 17:29 IST

    ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய இந்தியா கூட்டணி வேட்பாளர்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி. துணை ஜனாதிபதி பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் சுதர்சன் ரெட்டி; அவர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் நேசிப்பவர் என்று சந்திப்புக்கு பின் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



  • Aug 24, 2025 17:16 IST

    மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

    மராட்டிய மாநிலம் மும்பையின் கொரிஹான் பகுதியில் 22 மாடிகளை கொண்ட குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இன்று மாலை 3.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை. 

     



  • Advertisment
    Advertisements
  • Aug 24, 2025 17:11 IST

    ஜகதீப் தன்கர் என்னவானார்?- எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

    ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்? எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 24, 2025 16:41 IST

    நல்லகண்ணு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட காயத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மற்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது



  • Aug 24, 2025 16:39 IST

    தொண்டர்கள் பக்குவப்பட்டு விட்டனர்; ஆனால் விஜய்? அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

    இரண்டாவது மாநாட்டில் விஜய் பேசும்பொழுது அவரின் தொண்டர்கள் பக்குவப்பட்டு விட்டனர். ஆனால் விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்



  • Aug 24, 2025 15:42 IST

    கூட்டணி ஆட்சி குறித்து இ.பி.எஸ் சொல்வதே இறுதி – நயினார் நாகேந்திரன்

    தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் மன வருத்தத்தில் இல்லை. தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், தி.மு.க ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி தமிழகம் வருவார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்



  • Aug 24, 2025 15:40 IST

    வணிக வளாகத்தில் ஸ்டாலின் ஷாப்பிங்

    வரும் 30ம் தேதி இங்கிலாந்து செல்லும் முதல்வர் ஸ்டாலின், வணிக வளாகத்திற்கு நேரில் சென்று, தனக்கு தேவையான பொருட்களை வாங்கினார்



  • Aug 24, 2025 15:37 IST

    போலி சான்றிதழ் விவகாரம்; அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    போலி சான்றிதழ்கள் கொடுத்து கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியான நிலையில், நடப்பாண்டிற்குள் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது



  • Aug 24, 2025 14:40 IST

    ககன்யான் திட்டத்தின் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி

    இஸ்ரோ (ISRO) நிறுவனம், தனது லட்சியமிக்க ககன்யான் திட்டத்திற்கு முதல் ஒருங்கிணைந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

    இந்த சோதனையின் முக்கிய நோக்கம், விண்வெளியில் இருந்து மனிதர்களை சுமந்து வரும் விண்கலத்தை கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்டு எடுப்பதாகும்.

    இந்த மீட்பு நடவடிக்கையில், இஸ்ரோ, இந்திய கடற்படை, டி.ஆர்.டி.ஓ (DRDO), மற்றும் இந்திய விமானப்படை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து செயல்பட்டன. இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது. இது ககன்யான் திட்டத்தின் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.



  • Aug 24, 2025 14:40 IST

    பாரிவேந்தருக்கு நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து

    எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான அண்ணன் திரு. பாரிவேந்தர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடன் கல்விசேவையோடும், மக்கள் சேவையையும் ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக் கொள்கிறேன்.

    பாரிவேந்தருக்கு நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து

     



  • Aug 24, 2025 13:56 IST

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த  48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை மையம்



  • Aug 24, 2025 13:55 IST

    சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு

    புதிதாக உருவாக்கப்படும் தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் சங்கர் ஜிவால். அவர் ஆகஸ்ட் 29ஆம் தேதி பணி ஓய்வு பெறும் உத்தரவு கோப்பிற்கு ஸ்டாலின் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.



  • Aug 24, 2025 13:51 IST

    சுதர்சன் ரெட்டி சென்னை வருகை- இன்று மாலை ஸ்டாலினுடன் சந்திப்பு

    இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னைக்கு வருகை தருகிறார்.

    அவரை திமுகவின் ஆர. ராஜா, கவிஞர் வைரமுத்து, வில்சன், காந்தி, திருத்தணி, செல்வகணபதி, ஜெயகுமார் மற்றும் பிற தலைவர்கள் வரவேற்றனர். சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.



  • Aug 24, 2025 12:40 IST

    இந்தியாவில் எங்கள் முதன்மை போட்டியாளர் ஓலா அல்ல, ரேபிடோதான் -ஊபர் நிறுவனத்தின் சி.இ.ஓ

    இந்தியாவில் எங்கள் முதன்மை போட்டியாளர் ஓலா இருந்து வந்தது. ஆனால் அந்த இடத்தை தற்போது ரேபிடோ கைப்பற்றிவிட்டது என ஊபர் நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார்.



  • Aug 24, 2025 12:19 IST

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார்! - உக்ரைன் தூதர்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 24, 2025 11:47 IST

    பணக்கார முதலமைச்சர்

    இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ரூ.931 கோடி சொத்துகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு முதலிடம் பிடித்தார். வெறும் ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகளுடன் கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார்.



  • Aug 24, 2025 11:46 IST

    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

    நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முன்னிலையில் வரும் 26-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 



  • Aug 24, 2025 11:45 IST

    ஓய்வை அறிவித்தார் புஜாரா

    இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.



  • Aug 24, 2025 11:44 IST

    பெரியார் விருதுக்கு கனிமொழி எம்.பி. தேர்வு

    திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 17 ஆம் தேதி கரூரில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட்ட உள்ளது.



  • Aug 24, 2025 11:05 IST

    பாஜகவின் இன்னொரு செயல் வடிவம் விஜய் - வன்னி அரசு

    பாஜக, ஆர்.எஸ்.எஸ் இன்னொரு செயல் வடிவம்தான் விஜய்; திமுக மீது வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டில் கட்டமைப்பது ஒன்றுதான் விஜய்யின் அரசியலாக இருக்கிறது. முதலமைச்சரை அங்கிள் என்று சொல்வதன் மூலம் விஜயின் அநாகரிகத்தையும் தலைமை பண்பையும் குறைத்திருக்கிறார் என்பதைதான் பார்க்க முடிகிறது என விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.



  • Aug 24, 2025 10:13 IST

    இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது: காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கவலை

    இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அற்ப்பமாக குற்றச்சாட்டுக்ளுக்காக கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு அவரை கன்னியத்துடன் நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் எம்பி.சசிதரூர் கூறியுள்ளார்.



  • Aug 24, 2025 10:10 IST

    திருமணத்திற்கு காதலன் மறுப்பு - மாடியில் இருந்து குதித்த காதலி 

    சென்னையில், நிச்சயமான பிறகு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், காதலனின் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தபோது திடீரென 7வது மாடியில் இருந்து குதித்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலன் தர்ஷனை கைது செய்த வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 24, 2025 09:45 IST

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல்

    கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கெனவே 6 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • Aug 24, 2025 08:31 IST

    வெள்ளத்தை கடந்து  கடமையாற்றிய சுகாதார பணியாளர்

    ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில், வெள்ளம் சூழ்ந்த ஆற்றை கடந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதார பணியாளர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியளளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சாலைகள்
    மூடப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே பாறைகளில் குதித்து வெள்ளத்தை கடந்து சென்றார்



  • Aug 24, 2025 08:30 IST

    வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கர் சிலை திறப்பு

    மும்பை வான்கடே மைதானத்தில், ச‌ச்சினைத் தொடர்ந்துசுனில் கவாஸ்கருக்கும் ஆளுயர சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



  • Aug 24, 2025 08:21 IST

    தமிழகத்தில் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில்  சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 24, 2025 08:17 IST

    பைக்கில் சென்ற போது வெள்ளத்தில் சிக்கிய தம்பதி

    காட்பாடி அருகே பொன்னை பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறும் நிலையில், கால்வாய் பாலத்தில் பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள்அவர்களை பத்திரமாக மீட்டனர்



  • Aug 24, 2025 08:16 IST

    முன்னால் சென்ற கார்கள் மீது லாரி மோதி விபத்து

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோப்பசந்திரம் பகுதியில் நேற்று, முன்னால் சென்ற கார்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Aug 24, 2025 07:23 IST

    மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சத்தீஸ்கர் வாலிபர் கைது

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 78 வயது மூதாட்டியை, வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல் செய்த சத்தீஸ்கரைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • Aug 24, 2025 07:20 IST

    திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் 23.1 கிலோ கஞ்சா பறிமுதல்

    உ.பி. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் நேற்றிரவு கோவைக்கு வந்தபோது ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள 23.1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுப்பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டதில் கஞ்சா சிக்கியுள்ளது. ஆர்.பி.எப் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: