/indian-express-tamil/media/media_files/2024/11/23/agg3Ext1MDRpObC65b9t.jpg)
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 26, 2024 22:06 IST
தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Nov 26, 2024 21:45 IST
பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ 27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 20:42 IST
நாகைக்கு 520 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
-
Nov 26, 2024 20:13 IST
நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை (நவ 27) நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
-
Nov 26, 2024 19:45 IST
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (நவ 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
Nov 26, 2024 19:31 IST
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 19:07 IST
மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை எச்சரிக்கையை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பிறப்பித்தார்.
-
Nov 26, 2024 18:46 IST
மயிலாடுதுறையில் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதிக்கு நேர்முகத் தேர்வை ஒத்திவைத்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்
-
Nov 26, 2024 18:19 IST
கனமழை முன்னெச்சரிக்கை; கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
-
Nov 26, 2024 18:17 IST
கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
-
Nov 26, 2024 17:37 IST
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரித நடவடிக்கை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி: புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; மழை பாதிப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது; மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்; மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
-
Nov 26, 2024 17:33 IST
விருகம்பாக்கம் கால்வாய் ஆய்வு - உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
Nov 26, 2024 17:28 IST
மழை பாதிப்பு குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: “மழை பாதிப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது; மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்; மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
-
Nov 26, 2024 17:06 IST
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
'ஃபீஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (27-11-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 16:48 IST
மழையால் திருவாரூரில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்
திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையால் சுமார் 2,000 ஏக்கரில் பயிர்டப்பட்ட சம்பா பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர் பகுதிகளில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Nov 26, 2024 16:46 IST
புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை: வானிலை மையம் தகவல்
29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக் கூடும். புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 26, 2024 16:31 IST
நாளை புயல் உருவாகும் - பாலச்சந்திரன்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், 'நாளை வங்கக்கடலில் உருவாகும் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும்'என்று கூறினார்.
-
Nov 26, 2024 16:13 IST
வேகமாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
-
Nov 26, 2024 16:02 IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் - பாலச்சந்திரன் பேட்டி
தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை (நவமபர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், “அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
Nov 26, 2024 16:01 IST
கனமழை எச்சரிக்கை: விழுப்புரத்தில் நடக்க இருந்த ஸ்டாலினின் கள ஆய்வு கூட்டம் ரத்து
கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் 28 மற்றும் 29 தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விழுப்புரத்தில் நடக்க இருந்த கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 15:49 IST
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு - பாலச்சந்திரன்
தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்: “அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், திருவளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Nov 26, 2024 15:42 IST
கனமழை எச்சரிக்கை; மருத்துவ அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மருத்துவத் துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. மருத்துவத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
Nov 26, 2024 15:32 IST
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு என்றும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
Nov 26, 2024 15:24 IST
புயல் எச்சரிக்கை: பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
"கனமழை காரணமாக சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் என்று புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Nov 26, 2024 15:20 IST
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: தயார் நிலையில் உள்ளதாக ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “அதிக மழைப்பொழிவை பெற்றுவரும் நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக ஜே.சி.பி இயந்திரங்கள், மர அறுப்பான்கள், ஜெனரேட்டர்கள், மோட்டார் பம்புகள், படகுகள் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூருக்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
-
Nov 26, 2024 15:13 IST
கனமழையால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
-
Nov 26, 2024 14:45 IST
3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Nov 26, 2024 14:41 IST
டெல்டா பகுதியில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 26) ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20.செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 26, 2024 14:39 IST
சென்னையில் கனமழை" ஒ.எம்.ஆர்.சாலையில போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், ஓ.எம்.ஆர்.சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் சாலைகளில், இருபுறமும் 4 கி.மீ தூரத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
-
Nov 26, 2024 14:37 IST
கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்
அதிக மழை பொழிவை பெற்று வரும் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக ஜே.சி.பி. இயந்தரங்கள், மர அறுப்பான், ஜெனரேட்டர், மோட்டார் பம்புகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதாக முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Nov 26, 2024 13:55 IST
கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த மீட்பு படை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. ஒரு குழுவில் 30 பேர் என 5 குழுவில் மொத்தம் 150 பேர் 5 மாவட்டங்களுக்கும் விரைகின்றனர்
-
Nov 26, 2024 13:52 IST
கனமழை காரணமாக புதுக்கோட்டையில் மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட உத்தரவு
கனமழை காரணமாக புதுக்கோட்டையில் மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பாதுகாப்பாக வீடு செல்வதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 13:48 IST
31 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 13:45 IST
கனமழை அறிவிப்பு: சென்னையில் 8 இடங்களில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
கனமழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்றும், பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சம் 4 பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அண்ணா நகர் டவர், மாதவரம் பால் பண்னை, வணணாந்துறை, பெசன்ட் நகர் வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்க நல்லூர் பால்பண்னை, விருகம்பாக்கம், சி.பி.ராமசாமி சாலை ஆகிய 8 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 13:16 IST
புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை
புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமுடன் காணப்படுகிறது.மேலும்,வழக்கத்திற்க்கு மாறாக கடல் அலைகள் ஆர்ப்பரித்து வருவதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கவோ அல்லது குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள் மேலும் கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து கடல் அலைகள் சீற்றமுடன் காணப்படுவதாலும் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுவதால் கடற்கரை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் பழைய துறைமுக வளாகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கடல் சீற்றம் உடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,மீனவர்களின் படகுகள் தேங்காய் திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது.
-
Nov 26, 2024 13:15 IST
புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.
-
Nov 26, 2024 12:47 IST
புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது. புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.
-
Nov 26, 2024 12:39 IST
தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கிறது.
சென்னையில் காலை 10 மணியில் இருந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழை, கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், மும்பை, ஐதராபாத்தில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.
கனமழையால் மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன
மழை, சூறைக்காற்று வேகம் குறைந்த பின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Nov 26, 2024 12:18 IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலுக்கு முந்தைய நிலையில் உள்ளது. -
Nov 26, 2024 12:08 IST
சென்னை, புறநகர் பகுதிகளில் மழை
பூவிருந்தவல்லி, மதுரவாயல், போரூர், மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம் போன்ற பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சாந்தோம் பகுதியில் சில மணி நேரத்தில் கொட்டிய கனமழையால் மழைநீர் சாலையில் ஓடுகிறது. திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
Nov 26, 2024 11:24 IST
சென்னையில் தொடங்கியது கனமழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை ஈ.சி.ஆரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை. திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது.
-
Nov 26, 2024 11:16 IST
இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்
சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவித்துள்ளது.
-
Nov 26, 2024 11:02 IST
4, 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - பிரதீப் ஜான்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
-
Nov 26, 2024 11:01 IST
ஏர்டெல் நெட்வொர்க் நிறுத்தம்!
தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 6 மணி முதல் சுமார் 4 மணி நேரத்திற்கு ஏர்டெல் நெட்வொர்க் நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Nov 26, 2024 10:59 IST
கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்
மயிலாடுதுறையில் 26 கடலோர கிராமங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Nov 26, 2024 10:08 IST
16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Nov 26, 2024 09:08 IST
பாம்பனில் புயல் எச்சரிக்கை
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.
-
Nov 26, 2024 09:01 IST
வேதாரண்யம் உள்வாங்கிய கடல்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் 50 கி.மீ தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
-
Nov 26, 2024 08:59 IST
சென்னையில் இருந்து 830 கி.மீ.இல் தாழ்வு மண்டலம்
சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும் நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
-
Nov 26, 2024 08:19 IST
690 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்
நாகையில் இருந்து தென் கிழக்கு திசையில் 690 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.