Tamilnadu Rain Floods Update : இம்மாத தொடக்கத்தில் மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னை தற்போது மாத இறுதியிலும், வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளம் தொடர்பாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதை தொடர்ந்து பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் அரசு அலுவலங்கள், மருத்துவமனை சாலைகள் என பல இடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், மழை வரத்தும் குறைந்தது இதனால் பொதுமக்கள் இயல்புவாழ்ககைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Worst affect as usual @ Perumbakkam, Semmanchery, Pallikarani #TamilNadu #chennaifloods #ChennaiRains
Every NEM is nightmare for our people pic.twitter.com/DhbSAKrIks— Vijayagopal Muralidharan (@vijayagopal_) November 27, 2021
இந்நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் கனமழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழக கடலோர பகுதிகளிலவ் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
At #singaperumalkoil heavy water floods and roads are almost not visible #ChennaiRain #chennaifloods #ChennaiRains2021 pic.twitter.com/RxCenBiZWL
— Rajasekar Nonburaj (@rajasekarn) November 27, 2021
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கார்களின் டயர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களையும் தள்ளிக்ககொண்டு போகும் சூழ்நிலையே அதிகம் உள்ளது.
Current situation at Kolathur MLA Office! Circular road, Jawahar Nagar water pumped out to 70 feet Road flooded heavy. Power supply shut down in Peravallur. #ChennaiRains #chennaifloods @ChennaiRains @praddy06 @kalyanasundarsv pic.twitter.com/tp4hml01l8
— மோகன் தமிழன் (@mohankeech) November 27, 2021
இதில் வேளச்சேரி, நேரு தெரு ஈசிஆர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்தால், சாக்கடை நீருடுன் மழைநீர் கலந்து பல பகுதிகளை மூழ்கடித்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மரங்களில் தடுப்பால் பல இடங்களில் தேங்கி நிற்கின்றன.
Things back to square one in #Chennai. Due to incessant rains, Duraisamy and Ganeshpuram subways are closed. Many areas in the city are waterlogged. #ChennaiRains #TamilNaduRains @IndianExpress pic.twitter.com/crCvyCeiNB
— Janardhan Koushik (@koushiktweets) November 27, 2021
கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலைகள் ! இடம் : சென்னை - வண்டலூர் கேளம்பாக்கம் சாலை #Chennai #Rain #WeatherUpdate #ChennaiRains pic.twitter.com/QNx7qcrcTi
— Live Chennai (@Live_Chennai) November 27, 2021
2 நாட்களிலேயே இப்படி மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் வரும நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதில் மதுராந்தகம் அருகே செய்யூரில், அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்துவிட்டதால், அங்கிருந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர்களும் செவிலியர்களும் வெளியேறிய பின், மருத்துவமனை பூட்டப்பட்டுவிட்டது.
Water logging reported in several areas in all coastal districts of #TamilNadu & #Chennai and IMD issued a #RedAlert for the next 24 hours.
Stay Safe 👏 Strong prayer for the Ppl of chennai and Tamilnadu#chenairains #ChennaiRains2021 #TamilNaduRains #chennaifloods #Chennai pic.twitter.com/UTAFOkZlny— Ayesha (@Ayesha86627087) November 26, 2021
சென்னை கூடுவாஞ்சேரியில் வெள்ளம் சூழ....
நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநரை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரினார்
ஒப்பற்ற தலைவர் 🖤❤️ pic.twitter.com/am107MP3WY— jeyakumar (@jkmultiplus) November 27, 2021
அதேபோல் குடுவாஞ்சரியில் கனத்த மழை பெய்துவருகிறது. அனைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ள நீர் காற்றாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இது தொடர்பாக புகைப்படங்களும் வீடியோக்களும் இணையததில் வைரலாகி வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மூழ்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.