தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 8.30 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 மணி நிலவரப்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 10 மணி நிலவரப்படி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil