Chennai News Updates: கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ5 லட்சம் வழங்கிய மாரி செல்வராஜ்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karthika Kannagi Nagar

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவு: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபநீர் வெளியேற்றம் 2,000 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்து வருவதால் நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Oct 31, 2025 07:08 IST

    கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ5 லட்சம் வழங்கிய மாரி செல்வராஜ்

    ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ்  ரூ. 5 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு  நீலம் பண்பாட்டு மையம் சார்பாக  ரூ. 5 லட்சம்  காசோலை வழங்கப்பட்டது



  • Oct 30, 2025 21:24 IST

    கரூர் துயரத்திற்கு பிறகு த.வெ.க மாவட்ட அலுவலகம் திறப்பு 

    விஜய்யின் பரப்புரையின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கரூர் மாவட்ட அலுவலகம் 33 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், த.வெ.க கரூர் மாவட்ட அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Oct 30, 2025 20:26 IST

    முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மரியாதை

    த.வெ.க தலைவர் விஜய், முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு விஜய் கூறியிருப்பதாவது: “விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 30, 2025 20:12 IST

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா முழு ஆதரவு - இந்திய வெளியுறவு அமைச்சகம்

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஏவி விடுவதை அண்டை நாடுகள் ஏற்காது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • Oct 30, 2025 20:09 IST

    நாட்டின் 90வது கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு உதயநிதி வாழ்த்து

    நாட்டின் 90வது கிராண்ட்மாஸ்டர், தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக தேர்வான இளம்பரிதிக்கு வாழ்த்துகள்; தமிழகத்திற்கும் இந்திய சதுரங்கத்திற்கும் குறிப்பிட்ட மைல்கல் மற்றும் பெருமைமிக்க தருணம். எதிர்காலத்தில் சதுரங்கத்தில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க இளம்பரிதிக்கு வாழ்த்துகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Oct 30, 2025 19:22 IST

    பீகார் மக்களை தி.மு.க துன்புறுத்துகிறது - மோடி குற்றச்சாட்டு

    “கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்கள் குறித்து தொடர்ந்து அவதூறு செய்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க-வும் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை துன்புறுத்துகிறது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.



  • Oct 30, 2025 18:48 IST

    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த்

    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ. 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். நவம்பர் 24ஆம் தேதி சூர்யகாந்த் பதவியேற்பார் என சட்டத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நவ.24இல் பதவியேற்கும் சூர்யகாந்த் 2027 பிப். 9ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.



  • Oct 30, 2025 18:46 IST

    பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து - ராகுல் மீது புகார்

    பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குக்காக நடனம் கூட ஆடுவார் என விமர்சித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பீகார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மாநில பாஜக புகார் அளித்துள்ளது.

     



  • Oct 30, 2025 18:22 IST

    திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவ. 1 ஆம் தேதி முழு நாள் இயங்கும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் சின்னம் காரணமாக பெய்த மழைக்காக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.



  • Oct 30, 2025 18:15 IST

    தமிழ்நாட்டின் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023ம் ஆண்டு தேர்வு பட்டியல்படி கவிதா, முத்துக்குமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2025 18:08 IST

    நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும் - சசிகலா பேட்டி

    முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் செங்கோட்டையன் ஆகியோர் பேசினார். ஆனால், சசிகலா வருவதற்கு முன்னதாக டிடிவி தினகரன் அந்த இடத்தில் புறப்பட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, "நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும்" என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் துரோகிகள் என்று கூறியிருக்காரே..? இந்தத் துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு சசிகலா பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வரும், அதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.



  • Oct 30, 2025 17:46 IST

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

    தமிழகத்தை போல கேரள மாநிலத்திலும் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என என கேரள அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”அரசின் எந்தவித நலத்திட்ட நிதி உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தில்’ மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும், அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



  • Oct 30, 2025 17:26 IST

    திருச்செங்கோடு: தீப்பற்றி எரிந்த லாரி- போக்குவரத்து பாதிப்பு

    திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே பேட்டரி வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி தீப்பற்றி எரிந்ததால் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.



  • Oct 30, 2025 17:24 IST

    நவ. 2-ல் அனைத்து கட்சி கூட்டம்; 60 கட்சிகளுக்கு தி.மு.க அழைப்பு

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நவ.4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Oct 30, 2025 17:03 IST

    ”ஆளுங்கட்சியை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும்”

    ஆளுங்கட்சியை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் ஒன்றாக இணையும்போது சலசலப்பு ஏற்படுவதும், அது தலைப்புச் செய்தியாக மாறுவதும் இயல்புதான். ஆனால் அந்த சலசலப்பு ஆளுங்கட்சியை உடைக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சி கூட்டணியை உடைத்துவிடக் கூடாது. தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது என்றார்.

     

     



  • Oct 30, 2025 16:56 IST

    மருத்துவ வசதிகளை மேம்படுத்துக: நயினார் நாகேந்திரன்



  • Oct 30, 2025 16:39 IST

    இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு

    இந்தியாவுக்கு மீண்டும் அரிய பூமி தாதுக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், சில இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு.

    மின் வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு அரிய பூமி தாதுக்கள் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Oct 30, 2025 16:17 IST

    வளர்ப்பு நாய், பூனைகளுக்கு உரிமம் பெறாவிடில் அபராதம்

    சென்னையில் வளர்ப்பு நாய், பூனைகளுக்கு உரிமம் பெறாவிடில் வரும் நவ.24ஆம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 



  • Oct 30, 2025 16:17 IST

    “செங்கோட்டையன் மீது நடவடிக்கை இருக்கும்” -இபிஎஸ்

    “அதிமுகவைப் பொறுத்தவரையில் தலைமையின் கருத்தை கடைப்பிடிக்காமல், யார் துரோகம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை இருக்கும். இப்போதும்ப் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்”

    - செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்



  • Oct 30, 2025 15:30 IST

    செங்கோட்டையனை நீக்க தயக்கமில்லை: கே.பழனிசாமி

    செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை; கட்சிக்கு துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் துரோகிகளால்தான் 2021இல் அதிமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை

    - இபிஎஸ்



  • Oct 30, 2025 15:29 IST

    ஓபிஎஸ், செங்கோட்டையன் உடன் டிடிவி பேட்டி

    கரம் கோர்த்து தேர்தலில் எங்கள் பணியை ஆற்ற உள்ளோம்

    பசும்பொன்னில் மரியாதை செலுத்தியபின் ஓபிஎஸ், செங்கோட்டையன் உடன் டிடிவி தினகரன் பேட்டி



  • Oct 30, 2025 15:28 IST

    எத்தனை துரோகி வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: இபிஎஸ்

    கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை தவெகவுடன் பேச்சுவார்த்தை 
    நடத்தவில்லை; தவெகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

    எத்தனை துரோகி வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது; மூவரும் ஒன்றிணைந்து எந்த விளைவையும் ஏற்படுத எடப்பாடி பழனிசாமி பேட்டி



  • Oct 30, 2025 14:48 IST

    நெல் கொள்முதலில் பச்சை பொய் சொல்கின்றனர் - இபிஎஸ்

    நெல் கொள்முதல்விவகாரத்தில்அரசுபச்சை பொய் சொல்கிறதுஎனஎடப்பாடிகே.பழனிசாமி கூறியுள்ளார். தினம் 2000 மூட்டைகள்நெல்கொள்முதல்செய்யப்படுவதாகஅமைச்சர்தவறானதகவலைகூறினார். 15 நாட்களாகநெல்கொள்முடல்செய்யப்படவில்லைஎன்றுஎன்னிடம்விவசாயிகள்கூறினர்என்றும்.பி.எஸ்தெரிவித்துள்ளார்.

     



  • Oct 30, 2025 14:22 IST

    தேவர் திருவுருவ படத்திற்கு விஜய் மரியாதை

    சென்னைபனையூரில்உள்ளதவெகஅலுவலகத்தில்முத்துராமலிங்கதேவர்திருவுருவபடத்திற்குதவெகதலைவர்விஜய்மரியாதைசெலுத்தினார்.

     



  • Oct 30, 2025 14:20 IST

    தேவர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா மரியாதை

    பசும்பொன்முத்துராமலிங்கதேவர்சிலைக்குசசிகலாமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினார். பசும்பொன்முத்துராமலிங்கதேவர்நினைவிடத்தில்தரையில்அமர்ந்துவி.கே.சசிகலாவழிபாடுசெய்தார்.

     



  • Oct 30, 2025 13:51 IST

    முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி - பிரதமர் மோடி

    நீதி, சமத்துவம்ஆகியவற்றுக்கும்ஏழைகள், விவசாயிகள்நலனுக்கும்அசைக்கமுடியாதஅர்ப்பணிப்புமுத்துராமலிங்கதேவர்அளித்தவர். சமூக, அரசியல்வாழ்வில்ஆழமானதாக்கம்ஏற்படுத்தியமுத்துராமலிங்கதேவருக்குமனமார்ந்தஅஞ்சலிஎனபிரதமர்மோடிதெரிவித்துள்ளார்.

     



  • Oct 30, 2025 13:12 IST

    தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்

    தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. காஞ்சிபுரம், மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே 422.33 ஏக்கரில் ரூ.530 கோடியில் காஞ்சிபுரம் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது.



  • Oct 30, 2025 13:11 IST

    இந்தியாவின் சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2025 12:44 IST

    பராமரிப்புத் தொகையாக ரூ.6.5 லட்சம் கோரி மனு

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மாத பராமரிப்பு தொகையாக மாதம்பட்டி ரங்கராஜ் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டுமென ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்றும் வீட்டு வாடகை, மருத்துவச்செலவு, இதர செலவிற்காக பராமரிப்புத் தொகை தர வேண்டுமெனவும் மனுவில் கூறியுள்ளார்.



  • Oct 30, 2025 12:44 IST

    கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

    சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் கோல்ப் மைதானத்தில் பசுமை பூங்கா, நீர் நிலைகள் அமைக்கும் பணியை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Oct 30, 2025 12:42 IST

    சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவருக்கு பாய்ந்தது குண்டர் சட்டம்

    கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த உளுந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.



  • Oct 30, 2025 12:12 IST

    நகராட்சி துறையில் இமாலய அளவில் ஊழல் - ஜெயக்குமார்

    நகராட்சி துறையில் மெகா இமாலய அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் துறையிலேயே ரூ.880 கோடி அளவில் இமாலய அளவில் ஊழல் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 



  • Oct 30, 2025 11:19 IST

    6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் - வைகை செல்வன்

     

    விஜய்க்கு பொது எதிரியாக இருப்பது திமுக, அதே  கருத்து அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இருக்கிறது. ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைவது தேர்தலில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விஜய்யுடன் பா.ஜ.க கூட்டணியா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவிக்காததூ பற்றிய கேள்விக்கு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.



  • Oct 30, 2025 10:06 IST

    தமிழ்நாட்டைப் போல மகளிருக்கு மாதம் ரூ.1000 - கேரள அரசு முடிவு

    கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள மகளிர் பயனடைய உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2025 09:09 IST

    கே.என்.நேரு மீதான வேலைவாய்ப்பு மோசடி புகார் - இ.டி விளக்கம் 

    தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வேலை உறுதி பட்டியல் ஹவாலா பரிமாற்றத்திற்காக ரூ.10 நோட்டின் படங்கள் பயன்படுத்தப்பட்ட‌து தொடர்பான வழக்கில், இ.டி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பான ஆனால்  வாட்ஸ்அப் உரையாடல்கள் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 30, 2025 08:20 IST

    மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாமக்கல் மாவட்ட காவல் துறை விசாரித்து வருகிறது 



  • Oct 30, 2025 08:15 IST

    சீனா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்களா? அதிபர் ட்ரம்ப் பதில்

    6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் நடைபெற்றுள்ளது. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன் குறித்து டிரம்ப், ஜி ஜின்பிங் பேசியுள்ளனர். இந்த சந்திப்பில், சீனா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்களா? என செய்தியாளர் கேள்வி கேட்ட கேள்விக்கு, ஒப்பந்தம் மேற்கொள்ள எங்களால் முடியும் என டிரம்ப் பதில் அளித்துள்ளார். 



  • Oct 30, 2025 08:14 IST

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு 

    6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்துள்ளது இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன் குறித்து டிரம்ப், ஜி ஜின்பிங் பேசியுள்ளனர். தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சீன பொருட்களுக்கும் டிரம்ப் 100% வரி விதித்த‌ நிலையில் உலகமே உற்று நோக்கும் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.



  • Oct 30, 2025 07:23 IST

    அரையிறுதியில் இன்று - இந்தியா Vs ஆஸி., பலப்பரீட்சை 

    மகளிர் உலக‌க் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. காயத்தால் விலகிய, பிரத்திகா ராவலுக்கு பதிலாக, அதிரடி பேட்டர் சஃபாலி வர்மா இந்திய அணியில் இணைந்துள்ளார்.



  • Oct 30, 2025 07:22 IST

    பீகாரில் சீதைக்கு கோவில் - அமித்ஷா வாக்குறுதி

    பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்யும்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது போல் பீகாரில் சீதைக்கு கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.



Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: