Chennai News Live Updates: காவல்துறையில் ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐ.பி.எஸ் நியமனம்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mutharasi IPS 2

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மகளிர் உலககோப்பை – இறுதிப்போட்டியில் இந்தியா

மகளிர் உலக கோப்பை தொடரின், அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி நிர்ணையித்த 339 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியின் ஜெமிமா 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். நாளை மறுநாள் (நவம்பர் 2) மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது

  • Oct 31, 2025 21:28 IST

    காவல்துறையில் ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐ.பி.எஸ் நியமனம்

    காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது . ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம் செய்யபட்டுள்ளார்.



  • Oct 31, 2025 20:48 IST

    மோடி தனது பேச்சை திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல் 

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: “தமிழ்நாட்டில் பீகாரிகள் துண்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பரப்புரை தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியைச் சுமத்தியுள்ளார். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 31, 2025 20:42 IST

    கிரிவலம்: நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

    பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    tvamalai spl train



  • Oct 31, 2025 20:13 IST

    தமிழக அரசு 60 நாட்களில் 11.78 லட்சம்  மெட்ரிக் டன் நெல் கொள்முதல்  - இ.பி.எஸ்-க்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

    நெல் கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு பதில் அளித்த உனவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நடப்பாண்டு குறுவை பருவத்தில் நேற்று வரை (அக்டோபர் 30) 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்” என்று கூறினார்.



  • Oct 31, 2025 20:09 IST

    அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    ஈரோடு மாவட்டம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதையடுத்து, மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்ரமணியன் தலைமையில் அ.தி.மு.க-வினர் முள்ளாம்பரப்பு பேருந்து நிறுத்தத்தில்  பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில்  ஈடுபட்டனர்.



  • Oct 31, 2025 20:06 IST

    காயங்களால் கார் பந்தயத்திலிருந்து விலகும் எண்ணம் தோன்றியது இல்லை - அஜித் குமார்

    தனியார் ஊடகத்திற்கு நடிகர் அஜித்குமார் பேட்டி: “சினிமா துறைக்கு வந்த பின், எனக்கு இதுவரை 29 அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார் பந்தயத்தில் பலருக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது, நான் நடிகர் என்பதால் அது பொதுவெளியில் பெரிதாக பேசப்படுகிறது. காயங்களால் பந்தயத்திலிருந்து விலக வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது இல்லை, காயங்கள் போட்டியை தவறவிடும் அளவுக்கு மோசமாக இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.



  • Oct 31, 2025 19:28 IST

    அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம் நாளை விளக்கம் அளிக்கிறேன் - செங்கோட்டையன்

    செங்கோட்டையன், “ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 31, 2025 19:22 IST

    திருச்சி அருகே எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

    திருச்சி, சிறுகனூரில் எரிந்த நிலையில் 22 வயதான மீரா ஜாஸ்மின் என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



  • Oct 31, 2025 18:25 IST

    பணி நியமனத்தில் முறைகேடு என புகார் மனு

    அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி பணி நியமனம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் நடந்துள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 



  • Oct 31, 2025 17:56 IST

    செங். நீக்கம்-இபிஎஸ் விளக்கம்

    "கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் இணைந்து கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதால் செங்கோட்டையன் நீக்கி வைக்கப்படுகிறார்"

    – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • Oct 31, 2025 17:32 IST

    அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் 

    அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் 

    எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.



  • Oct 31, 2025 17:30 IST

    பிரதமரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது

    பீகாரில் பிரதமரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது; இது இந்தியாவின் ற்றுமைக்கு உகந்தது அல்ல; வடமாநிலத்தவர்கள்  தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 

    -  இந்திய கம்யூனிஸ்ட்  மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஈரோட்டில் பேட்டி  



  • Oct 31, 2025 17:24 IST

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் நிர்வாகப் பொறுப்புடைய மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



  • Oct 31, 2025 17:19 IST

    அண்ணாமலை வேதனை

    சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரிகத்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக்கூடப் பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒண்ணு சொல்லுது. வாய் ஒண்ணு சொல்லுது.

    – கோவையில் அண்ணாமலை வேதனை



  • Oct 31, 2025 16:36 IST

    ஓ.ஆர்.எஸ்.எல் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை

    தமிழ்நாட்டில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கடைகளில், உரிய அங்கீகாரம் இல்லாமல் "ORSL" (ஓ.ஆர்.எஸ்.எல்.) என்ற லேபிளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு கரைசலை (solution) விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 31, 2025 16:35 IST

    அ.தி.மு.க.வில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு உள்ளனர்: அண்ணாமலை

    பசும்பொன்னில் ஓ. பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணம் இல்லை. அ.தி.மு.க.வில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு உள்ளனர். யூ-டியூப்களுக்கு (YouTube) பதில் சொல்ல முடியாது.

     



  • Oct 31, 2025 16:32 IST

    எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: ஆட்சியை கலைத்துவிடுங்கள்- அண்ணாமலை

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரோனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போகணும். இல்லையென்றால் ஆட்சியை கலைத்துவிடுங்கள்- 

     அண்ணாமலை



  • Oct 31, 2025 16:31 IST

    திருவாரூரில் 2.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

    திருவாரூரில் 2,40,759 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளைவிட தற்போது இரு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, 31,201 விவசாயிகளின் கணக்கில் ரூ. 586 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.



  • Oct 31, 2025 16:31 IST

    திமுகவின் பம்மாத்து நாடகங்களை இந்தியர்கள் உணர்ந்துவிட்டனர்: நயினார்

    தமிழர்கள்-பீகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று ஆளுநரத்திடமே கூறினார். அப்போது அதெல்லாம் தேசிய ஒற்றுமை மறந்துவிட்டதா?

    பொழுது போகவிட்டால் வடமாநிலத்தவர்களை வசையாடி வசை வாங்குவதைக் காணலாம். பீகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களை 'சகோதரர்' எனக் கூறி இந்தியா கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.

    ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுக வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள். 

    நயினார் நாகேந்திரன்



  • Oct 31, 2025 16:29 IST

    சென்னையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறது தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை



  • Oct 31, 2025 16:27 IST

    கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள்

    சென்னை எண்ணூர், பெரிய குப்பம் கடற்கரையில் கல்லூரி மாணவி உட்பட 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

    கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் அலையில் சிக்கியதாகவும், அவரை மீட்க முயன்ற மேலும் மூவரும் அலையில் சிக்கி இறந்ததாகவும் கூறப்படுகிறது.



  • Oct 31, 2025 16:17 IST

    திமுக தலைவர்கள் பிகார் மக்களை அவமானப்படுத்தினர்: அண்ணாமலை

    கோவை:

    பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதலமைச்சர் கூறுகிறார். அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாகக் கூறிவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். திமுக தலைவர்கள் பீஹார் மக்களை அவமானப்படுத்துவதாக மோடி பிஹாரில் பேசினார். தயானிதி மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா போன்றவர்கள் பீஹார் மக்களை அவமானப்படுத்தினார்கள்.

    - அண்ணாமலை



  • Oct 31, 2025 16:15 IST

    மோடியின் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

    சென்னை: பீகார் மக்களுக்கு ஒழுங்காக நீங்கள் வேலை கொடுத்திருந்தால், அவர்கள் ஏன் இங்கு வரப்போகிறார்கள்? பீகார் மக்களை காப்பாற்றும் மண் தமிழ் மண். பீகார் மக்களிடையே தமிழர்கள் மீது விரோத மனப்பான்மையை தூண்டும் வகையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

    பல வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்கின்றனர். பீகாரில் மக்களுக்கு ஒழுங்காக வேலை கொடுக்காமல், காப்பாற்ற தவறியதற்கு எங்கள் மீது பழிபோடுவதா?

    "தமிழ்நாடு முதலமைச்சர் மீது பிரதமருக்குத் தனிப்பட்ட கோபம்; நம்மால் செய்ய முடியாததை ஒரு மாநில முதலமைச்சர் செய்து இந்தியா முழுவதும் பேசு ஆகி விடுகிறாரே" எனப் பொறாமை.

    ” மோடியின் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி 



  • Oct 31, 2025 16:14 IST

    இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்!

    இந்தியா - அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்யவும், இருநாட்டு உறவுகளின் முக்கிய தூணாகவும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்



  • Oct 31, 2025 15:38 IST

    தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    ஐபிஎல் சூதாட்டத்துடன் தொடர்புப்படுத்தி அவதூறு செய்ததாக ரூ.100 கோடி மான நஷ்டஈடு கேட்டு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கில் வழக்கை நிராகரிக்க கோரி ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Oct 31, 2025 15:28 IST

    போலி ஓ.ஆர்.எஸ் கரைசல் விற்றால் நடவடிக்கை

    தமிழகத்தில் போலி ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஓ.ஆர்.எஸ்.எல், ஓ.ஆர்.எஸ்.எல் ப்ளஸ், ஓ.ஆர்.எஸ் ஃபிட் எனும் பெயரில் அச்சிட்டு விற்பனை செய்யப்படும் கரைசலுக்கு சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



  • Oct 31, 2025 14:57 IST

    ஐகோர்ட்டில் அனல் பறந்த வாதம்

    மணல் கொள்ளை விவகாரத்தில் தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமலாக்க துறை பதில் அளித்துள்ளது. தகவல்களை அனுப்பினால் வழக்குப்பதிவு செய்ய மாநில காவல்துறை போஸ்ட் மாஸ்டர் அல்ல. தமிழகத்தை விட உபி, பீகார், குஜராத்தில் 4 மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு. ஆனால் அமலாக்கத்துறைக்கு தமிழ்நாடு மட்டுமே கண்களுக்கு தெரிகிறது என தமிழக அரசு தரப்பு வாதிட்டது.



  • Oct 31, 2025 14:14 IST

    2 வாரங்களில் பணிகள் முடிவடையும் - தமிழ்நாடு அரசு

    உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்; இன்னும் 2 வாரங்களில் பணிகள் முடிவடையும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது; குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • Oct 31, 2025 13:34 IST

    பள்ளிக்கரணை சதுப்பு நிலம் - பணிகள் மேற்கொள்ள தடை

    பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நவ.12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலத்தை சுற்றி 1கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானத்துக்கும் அனுமதிக்க கூடாது என அதிமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



  • Oct 31, 2025 13:28 IST

    கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன் டு ஒன் ஆலோசனை. பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்; 31 நாட்களில் 69 சட்டமன்றத் தொகுதி| நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். 



  • Oct 31, 2025 13:18 IST

    கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துளளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கியது எல்காட். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கியது எல்காட். மடிக்கணினி மாடல் மற்றும் தொழில்நுட்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து இறுதி செய்தார். வரும் மார்ச் மாதத்துக்குள் 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ய திட்டம்.



  • Oct 31, 2025 12:24 IST

    நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 2, 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 31, 2025 12:21 IST

    சி பி எஸ் சி பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

    சி பி எஸ் சி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. காலை 10.30 மணி முதல் 1.30 வரை தேர்வு நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் தேர்வுகள், 10ம் வகுப்புக்கு வரும் மார்ச் 10ம் தேதியும், 12ம் வகுப்புக்கு ஏப்ரல் 9ம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளன. தேர்வு அட்டவணையை http://cbse.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.



  • Oct 31, 2025 12:20 IST

    முதலமைச்சர் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டை நோக்கி நாள்தோறும் நிறுவனங்கள் முதலீடு செய்ய படையெடுத்து வருகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று வெற்றி பெற்றுள்ளோம். உலக அளவில் வர்த்தக போர் நடக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.



  • Oct 31, 2025 11:04 IST

    தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி - ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.



  • Oct 31, 2025 10:12 IST

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை - லுக்ஆயில் நிறுவனம் சொத்துக்களை விற்க முடிவு

     

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை தொடர்ந்து ரஷ்யாவின் 2-வது பெரிய எண்ணெய் நிறுவனமான லுக்ஆயில் தனது சர்வதேச வணிக சொத்துக்கள விற்க முடிவு செய்துள்ளது. இச்சொத்துக்களை குன்வார் என்ற வர்த்தக நிறுவனம் வாங்குவதாக அறிவித்துள்ளது.



  • Oct 31, 2025 09:32 IST

    ஊழலுக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி

    ஊழலுக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற நிலையில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 



  • Oct 31, 2025 09:21 IST

    தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்த‌து



  • Oct 31, 2025 09:03 IST

    தேர்தல் அரசியலுக்காக தமிழர்களின் மீது வன்மம் - பா.ஜ.க குறித்து ஸ்டாலின் விமர்சனம்

    ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



  • Oct 31, 2025 08:31 IST

    நான் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணம் - பீகாரில் சிராக் பாஸ்வான் பேச்சு

    மற்ற மாநிலங்களில் பீகாரிகள் அவமதிக்கப்படும் விதம் தான் நான் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணம். பீகாரி என்ற வார்த்தை கூட இப்போது அவமதிப்பாக மாறிவிட்டது. பிற மாநிலங்களில் பீகாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைத்தட்டுகிறார்கள் என மத்திய அமைச்சரும் லோக ஜன சக்தி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

     



  • Oct 31, 2025 08:27 IST

    ஒருங்கிணைப்புக்கான உந்து சக்தி - சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி புகழாரம்

    சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு உந்து சக்தியாக இருந்த அவர் இதன் மூலம் நமது நாட்டின் உருவாக்க ஆண்டுகளில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. ஒன்றுபட்ட, வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவதற்கான எங்கள் கூட்டுத் தீர்மானத்தையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



  • Oct 31, 2025 08:15 IST

    2-வது டி20 போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், 2வது டி20ல் ஆஸி.யை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. மெல்போர்னில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45க்கு போட்டி தொடங்கும்



  • Oct 31, 2025 07:34 IST

    கார்த்திகாவுக்கு சரத்குமார் நேரில் பாராட்டு

    ஆசிய இளைஞர் கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை கண்ணகி நடிகர் கார்த்திகாவுக்கு நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் நேரில் பாராட்டு தெரிவித்தார்.



Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: