/indian-express-tamil/media/media_files/2025/08/13/kavin-surjith-case-2025-08-13-17-04-24.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் இருப்பும் விபரம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1800 கன அடியில் இருந்து இன்று 640 கன அடியாக சரிந்தது. ஏரியில் நீர் இருப்பு 2.94 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், விநாடிக்கு 750 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 919 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
- Oct 29, 2025 21:43 IST
நெல்லை ஐ.டி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல்
நெல்லை ஐ.டி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 32 ஆவணங்கள், 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
- Oct 29, 2025 21:39 IST
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித், சரவண ஜாமின் மனு தள்ளுபடி - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நெல்லை கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் ஜாமின் கோரிய மனுவை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள்து.
- Oct 29, 2025 20:58 IST
ஏற்காடு சரபங்கா நதி நீரை சேமிக்க அணை கட்ட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
சேலம் டேனிஸ்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ஏற்காடு மலையில் இருந்து உற்பத்தியாகும் சரபங்கா நதியில் வருடத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. நம்மிடம் நீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் கர்நாடகாவிடம் கை ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சரபங்கா நதி நீரை சேமிக்க தடுப்பணை கட்டாமல், அணையை கட்டி நீரை சேமிக்க வேண்டும். சரபங்கா நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
- Oct 29, 2025 20:55 IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அ.தி.மு.க வரவேற்பு - ஜெயக்குமார்
சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அ.தி.மு.க வரவேற்கிறது; வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது என பல முறை புகார் கொடுத்துவிட்டோம்; இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் அப்படியேதான் இருக்கிறது.” என்று கூறினார்.
- Oct 29, 2025 20:51 IST
டெல்லியில் துருக்கி நாட்டு தேசிய தின விழா - இந்தியா புறக்கணிப்பு
டெல்லியில் துருக்கி நாட்டின் தேசிய தின விழா நடைபெற்றது. இந்த விழாவை முதன்முறையாக இந்தியா அரசு புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி அரசு, பாகிஸ்தானுக்கு வெளிப்படையாகத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக இந்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தக் காரணத்திற்காக, டெல்லியில் நடைபெற்ற துருக்கி நாட்டின் தேசிய தின விழாவில் இந்திய அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 29, 2025 20:49 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
மதுரை வந்துள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- Oct 29, 2025 20:04 IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 29, 2025 19:41 IST
புதுப்புது தலைவர்கள் விவசாயம் பற்றித் தெரியாமல் அறிக்கை விடுகிறார்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “புதுப்புது தலைவர்கள் விவசாயம் பற்றித் தெரியாமல் அறிக்கை விடுகிறார்கள்” என்று சாடியுள்ளார்.
- Oct 29, 2025 19:35 IST
‘தேசியத் தலைவர்’ படத்தை பார்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல - ஐகோர்ட்
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல; சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. தயாரிப்பாளரின் பதிலை கருத்தி கொள்ள வேண்டி உள்ளது. சாதிய பிரச்னைகளைத் தூண்டும் வகையிலான காட்சிகளை நீக்கவும் அதுவரை தேசிய தலைவர் படத்தை திரையிட தடை விதிக்கவும் கோரிய மனு குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தணிக்கை வாரியம் படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
- Oct 29, 2025 18:19 IST
கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை
நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் பயிலும் நிஷாந் (22) என்ற மாணவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Oct 29, 2025 18:18 IST
இறந்து மிதக்கும் மீன்கள்
சேலம் மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் மர்மமான முறையில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள். மீன்கள் இறப்பிற்கு மர்ம நபர்கள் பெரிய அளவிலான கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்களை பிடிக்க ரசாயன திரவங்களை ஊற்றியதே காரணம் என கரையோர மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். அதேநேரம், இதுகுறித்து ஆய்வு செய்ய தண்ணீர் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Oct 29, 2025 17:40 IST
சூழ்ச்சிகளாலும், சூதுகளாலும் - விஜய்
அர்த்தம் பொதித்த ஆழ்நீள் அடர் அமைதிக்குப் பிறகு உங்களுடன் பேச ஒரு கடிதம்
சூழ்ச்சிகளாலும், சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்
அடுத்தகட்ட தொடர் நிகழ்வுகள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கலாம் நவ.5ல் தவெக பொதுக் குழுவின் சிறப்பு கூட்டத்தை நடத்த முடிவு என தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- Oct 29, 2025 17:39 IST
கிட்னி திருட்டு விவகாரம்
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு வழக்கின் எஃப்.ஐ.ஆர் நகலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநல வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- Oct 29, 2025 17:38 IST
"பிகாரில் சீதைக்கு கோயில் கட்டுவோம்" - மத்திய அமைச்சர் அமித் ஷா
ராமர் கோயிலைத் தொடர்ந்து பிகாரில் சீதைக்கு கோயில் கட்டுவோம் என தர்பாங்காவில் நடந்த தேர்தல் பரப்புரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
- Oct 29, 2025 17:08 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,500 கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,500 கன அடியில் இருந்து 5,500 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கும் நிலையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக நீர் திறப்பு 5,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
- Oct 29, 2025 17:08 IST
மதுரையில் ரூ.8 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த 2 பயணிகளிடம் இருந்து 8 கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 9.15-க்கு இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- Oct 29, 2025 17:08 IST
தேர்தல் சின்னம் கேட்டு 6-ந்தேதி விண்ணப்பிக்கிறார் விஜய்?
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு அதன் தலைவர் விஜய் நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதற்காக விசில், பேட், உலக உருண்டை உள்ளிட்ட 5 சின்னங்களை தேர்வு செய்து வைக்கப்பட்டு உள்ளது.
- Oct 29, 2025 16:59 IST
நவ.5-ம் தேதி கூடுகிறது த.வெ.க.வின் சிறப்புப் பொதுக்குழு
த.வெ.க.வின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
- Oct 29, 2025 16:36 IST
அனைத்துக்கட்சி கூட்டம் : தவெகவுக்கு அழைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (S.I.R.) தொடர்பாக திமுக கூட்டணி நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
- Oct 29, 2025 16:33 IST
வேலை முறைகேடு புகார்: இபிஎஸ் வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன; இதுதொடர்பாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கை அடிப்படையில் பொறுப்பு ஐ.ஜி., லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.
– எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவு
- Oct 29, 2025 16:04 IST
கிட்னி விற்பனை வழக்கு
நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு.
- Oct 29, 2025 15:29 IST
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு - அமைச்சர் நேரு மறுப்பு
நியாயமான முறையில் தேர்வு நடத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டன; களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது
அரசியல் நோக்கத்துடனான நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் - நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் நிரப்பப்பட்ட நேரடி நியமனங்கள் குறித்த அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
- Oct 29, 2025 15:28 IST
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: மதுரை- இராமநாதபுரம் போக்குவரத்து மாற்றம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 31ம் தேதி மதுரையில் இருந்து இராமநாதபுரம் வரும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டிணம் வழியாக இயக்கப்படும்!
பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது
- மாவட்ட காவல்துறை அறிவிப்பு
- Oct 29, 2025 15:25 IST
60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிசெய்க: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
குற்ற வழக்குகளில் கைதானவர்கள் மீதான விசாரணை விரைவாகத் தொடங்கும் வகையில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதை உறுதி செய்ய நாடுமுழுவதும் வழிகாட்டுதல்களை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல ஆண்டுகளாக இதனால் பலர் ஜாமீன் பெற முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, முன்னாள் நீதிபதி நாகமுத்து தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு.
- Oct 29, 2025 14:36 IST
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
- Oct 29, 2025 14:12 IST
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவைக் கைவிடுகிறது கேரள அரசு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ஒன்றிய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 29, 2025 14:03 IST
"பா.ஜ.கவின் வாக்குத் திருட்டை முறியடிப்போம்" - ஸ்டாலின் பேச்சு
"பா.ஜ.கவின் வாக்குத் திருட்டை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்" என்று அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
- Oct 29, 2025 14:02 IST
6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 29, 2025 13:08 IST
”பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு அனுமதி- ரத்து செய்க”
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே அழிப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
- Oct 29, 2025 12:41 IST
த.வெ.க நிர்வாகக் குழு கூட்டம் தொடக்கம் - கட்சி சின்னம் குறித்து ஆலோசனை
பனையூரில் த.வெ.க நிர்வாகக் குழு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கட்சி சின்னம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 29, 2025 12:10 IST
பசும்பொன் குருபூஜை விழா - பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்
பசும்பொன் குருபூஜை விழாவுக்காக ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 1 டி.ஐ.ஜி, 20 எஸ்.பி.க்கள், 27 ஏ.டி.எஸ்.பி.க்கள் அடங்கிய 8000 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு 4300 சி.சி.டி.வி, ட்ரோன்கள் மூலம் பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - Oct 29, 2025 11:34 IST
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி ஏசி பேருந்து - எம்.டி.சி முடிவு
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 220 மினி ஏசி பேருந்துகளை இயக்க டெண்டர் கோரியது மாநகர போக்குவரத்து கழகம்.
- Oct 29, 2025 11:00 IST
ஜமைக்காவை ஆட்டுவிக்கும் புயல் - கியூபாவை நோக்கி நகர்வதாக தகவல்
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை சூறையாடிய மெலிஸ்ஸா புயல், தற்போது கியூபாவை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த மழை மற்றும் சூறைக்காற்றால் அங்குள்ள வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.
- Oct 29, 2025 10:23 IST
மின்சார பேருந்து தனியார் மயம்? - இ.பி.எஸ்-க்கு அமைச்சர் பதில்
தமிழகத்தில் மின்சார பேருந்து தனியார் மயம் என்ற இ.பி.எஸ் குற்றச்சாட்டியுள்ள நிலையில், மின்சார பேருந்தை பராமரிக்கவே தனியார் ஊழியர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி புரிதல் இல்லாமல் பேசுகிறார்என அமைச்சர் சிவங்கர் கூறியுள்ளார்.
- Oct 29, 2025 09:26 IST
தேவர் ஜெயந்தி விழா - மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி- மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Oct 29, 2025 09:06 IST
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி மாலை தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும் அன்றைய நாளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Oct 29, 2025 09:04 IST
ஆந்திராவில் மோந்தாவின் ருத்ரதாண்டவம்
ஆந்திராவில் நள்ளிரவு 100 கிமீ வேகத்தில் கரையை கடந்த மோந்தா புயலால், பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்து பல மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 76,000 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- Oct 29, 2025 09:03 IST
கத்தி முனையில் ரூ.4.5 கோடி கொள்ளை
2 மாதங்களுக்கு முன்பு சென்னை - பெங்களூரூ நெடுஞ்சாலையில் காரில் சென்றவர்களிடம் 17 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் ரூ.4.5 கோடி கொள்ளை சம்பவத்தில், கேரளாவில் பதுங்கி இருந்த 5 பேரை கைது காஞ்சிபுரம் போலீசார் செய்தனர்.
- Oct 29, 2025 08:27 IST
இந்தியா - பாக். மோதலில் அழகான 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் பேச்சு
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது, புத்தம்புதிய அழகான 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். - Oct 29, 2025 08:26 IST
நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
- Oct 29, 2025 08:23 IST
மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம் - 22,000 பேருக்கு நலத்திட்ட உதவி
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தென்காசியில் 22,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.1,020 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
- Oct 29, 2025 07:36 IST
திருப்பதியில் சால்வை கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த உத்தரவு
திருப்பதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில், இந்த சால்வையை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், 400 மதிப்புள்ள சால்வையை 1300-க்கு வாங்கி 50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த விஜிலன்ஸ் விசாரணைக்கு அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது,
- Oct 29, 2025 07:32 IST
இந்திய பயனாளர்களுக்கு "சாட்ஜிபிடி கோ" ஒரு வருடம் இலவசம்
இந்திய பயனாளர்களுக்கு "சாட்ஜிபிடி கோ" ஒரு வருடம் இலவசமாக வழங்கப்படும் என ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது, நவம்பர் 4ஆம் தேதி முதல் சைன்அப் செய்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 29, 2025 07:31 IST
இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிக்ளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில், ஆஸ்திரேலியாவின் கேன்பெராவில் உள்ள மைதானத்தில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us