/indian-express-tamil/media/media_files/2025/10/27/monta-chennai-school-leave-2025-10-27-22-52-13.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 27, 2025 22:50 IST
மோன்தா புயல்: சென்னையில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
மோன்தா புயல் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழழமை (28.10.20250) விடுமுறை அறிவித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- Oct 27, 2025 21:01 IST
மோன்தா புயலால் தமிநாட்டுக்கு பெரிய பாதிப்பு இருக்காது; மழை இருக்கும் - வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா
மோன்தா புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா கூறுகையில், “மோன்தா புயலால் தமிநாட்டுக்கு பெரிய பாதிப்பு இருக்காது; ஆனால், மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். இத்துடன் 30-40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும்” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 27, 2025 20:56 IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அவசர கதியில் நடத்தக்கூடாது - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதிர்ப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகளை தற்போது தொடங்குவது சரியானது அல்ல என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது அவசர கதியில் இப்பணிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்க வேண்டும் என்பதை மறுக்கவில்லை என்று கூறியுள்ள கூட்டணி கட்சிகள், ஆனால் அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், "ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக்கொண்டு தற்போது இதைத் தொடங்குவது சரியானது அல்ல. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்க்கிறோம்" என்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
- Oct 27, 2025 20:34 IST
சென்னைக்கு 420 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம்; 15 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்வு
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' (Mandous) புயல், தற்போது சென்னைக்குக் 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோன்தா புயலானது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தினால் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நீடிக்கிறது.
- Oct 27, 2025 20:31 IST
பீகாரில் நடந்ததை போன்று வாக்கு திருட்டு தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது - திருமாவளவன்
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “பீகாரில் நடந்ததை போன்று வாக்கு திருட்டு என்ற மக்கள் விரோத நடவடிக்கை தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது. இதை எப்படியாவது நாம் தடுத்தாக வேண்டும்” என்று கூறினார்.
- Oct 27, 2025 20:29 IST
பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், நவ. 2-ல் அனைத்துக் கட்சி கூட்டம் - தி.முக கூட்டணி முடிவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Oct 27, 2025 20:08 IST
வாக்காளர் பட்டியல் திருத்தம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் அக்.29-ல் ஆலோசனை
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக, மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் (அக்டோபர் 29) ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் செம்மைப்படுத்தும் நோக்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
- Oct 27, 2025 19:08 IST
சென்னைக்கு 440 கி.மீ. தொலைவில் மோன்தா புயல்; ஆந்திராவில் நாளை கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில், காக்கிநாடாவிலிருந்து 490 கி.மீ தென்மேற்கு திசையில் மோன்தா புயல் உருவாகி வருகிறது. நாளை (27.10.2025) தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 27, 2025 18:48 IST
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் - அ.தி.மு.க வரவேற்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அ.தி.மு.க முழு மனதுடன் வரவேற்கிறது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும் முறையாகவும் செய்ய வேண்டும். தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்மையான வாக்காளர்களுக்குதான் தரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- Oct 27, 2025 18:34 IST
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்குகிறது.
- Oct 27, 2025 18:12 IST
நெல் ஈரப்பதம் குறித்து 3-வது நாளாக மத்தியக் குழு ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். குத்தாலம் பகுதியில் உள்ள கந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் நெல்லை ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் கேட்ட போது தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நனைந்த நெல்மணிகள் காயவைக்க இடமில்லை. அதனால் நெல் கொள்முதல் செய்ய மறுக்கப்பட்டது. அதனால் மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 22% உயர்த்தி விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- Oct 27, 2025 17:55 IST
சூரசம்ஹார விழா: திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன்
விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்தார். கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தற்போது திருக்கோயில் கடற்கரையில் சூரபத்மன் கஜமுகனை முருகப்பெருமான் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். அதனை தொடர்ந்து சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
- Oct 27, 2025 17:47 IST
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி ஒத்திவைப்பு
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டியின் முதல் ஆட்டங்கள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- Oct 27, 2025 17:19 IST
எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்: உதயநிதி
சென்னை வியாசர்பாடி பகுதி அம்பேத்கர் கல்லூரியில் வியாசர்பாடி கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் அது குறித்த புகைப்பட விளக்க காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அடுத்த 10 நாட்களுக்கு மிகப்பெரிய மழை இருக்காது என்று வானிலை மையம் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தலைமையிலான, நம்முடைய அரசு தயாராக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
- Oct 27, 2025 17:15 IST
18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 27, 2025 17:13 IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டனான பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன்.
- Oct 27, 2025 17:11 IST
வேளாங்கண்ணி கடலில் மூழ்கிய இளைஞர் - தேடும் பணி தீவிரம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடலில் குளித்தபோது அலையில் 7 இளைஞர்கள் சிக்கியதில் ஒருவர் மாயமானார். 2 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஹாபா என்பவர் மாயம் ஆகினார். கடல் அலையில் சிக்கி காணாமல் போன பாஹாபா என்பவரை கடலோர காவல் குழும போலீஸ் தேடி வருகிறது.
- Oct 27, 2025 17:11 IST
ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- Oct 27, 2025 17:08 IST
ஆந்திராவில் புயல்; சந்திரபாபுவிடம் நிலைமையை கேட்டறிந்த மோடி
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், புயல் தயார்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி ஆலோசனை நடத்தினார். மோடி உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்குமாறு தனது மகன் நர லோகேஷுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
- Oct 27, 2025 17:07 IST
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் - தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (அக். 27) தெரிவித்துள்ளார். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், நவம்பர் 4ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு திருத்தப் பணிகள் முடிக்கப்பட்டு 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறி உள்ளார். பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- Oct 27, 2025 16:01 IST
சூரசம்ஹாரம் களைகட்டிய திருச்செந்தூர்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழாவிற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
Video: Sun News
#WATCH | திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் தென்படும் மனித தலைகள்
— Sun News (@sunnewstamil) October 27, 2025
முருகனை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் #SunNews | #Tiruchendur | #Surasamharam | #Muruganpic.twitter.com/K38Zgq8Jqq - Oct 27, 2025 16:00 IST
18 மாவட்டங்களில் கூடுதல் மழை பதிவு
அக்டோபர் 1 முதல் இன்று (அக்.27) வரை இயல்பைவிட 57% வடகிழக்கு பருவமழை கூடுதலாகப் பதிவாகி உள்ளது.
இயல்பாக 144 மி.மீட்டர் மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு 227 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா
- Oct 27, 2025 15:58 IST
சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல் மையம்
சென்னைக்குக் கிழக்கே 480 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
நாளை மாலை முதல், இரவுக்குள் மோன்தா தீவிர புயலாகக் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா
- Oct 27, 2025 15:55 IST
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 'மோன்தா' புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று, 110 கி.மீ. வேகத்தில் காக்கிநாடாவை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவுக்குள் கரையை கடக்கும்.
மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் சென்னையைத் தாக்கும் வகையில் ஒரு புயல் உருவாகலாம் . அக்டோபர் 31 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
- Oct 27, 2025 15:49 IST
17 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்
6 மணி நேரமாகக் 'மோன்தா' புயல் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது.
சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கு திசையில் 480 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் நிலை கொண்டுள்ளது; நாளை காலை தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா புயல், மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையம்
- Oct 27, 2025 15:22 IST
கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- Oct 27, 2025 15:17 IST
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: அன்புமணி
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது.
அன்புமணி
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது! @CMOTamilnadupic.twitter.com/9k6w3wdABd
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 27, 2025 - Oct 27, 2025 15:16 IST
எம்.எல்.ஏ நேரு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் 25 மின்சாரப் பேருந்துகள் மற்றும் 38 மின் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவையை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ நேரு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததுடன், மேடையில் வாக்குவாதம் செய்து, பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டார்.
- Oct 27, 2025 14:42 IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
- Oct 27, 2025 14:15 IST
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சோகம்
தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழ்ந்த பைக் கீழே விழுந்ததில் லாரி பின் சக்கத்தில் சிக்கி சார்லஸ் ஆகாஸ் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Oct 27, 2025 13:43 IST
மழையை சமாளிக்க அரசு தயார் - உதயநிதி ஸ்டாலின்
எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. வடசென்னையில் 8 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதால் ஆய்வு செய்தோம் என்றார்.
- Oct 27, 2025 13:17 IST
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி என்ற கட்சி உயர் நீதிமன்றத்தில் செய்த முறையீடு தள்ளுபடி ஆக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
- Oct 27, 2025 13:17 IST
2026 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: ஓ.பி.எஸ் பேட்டி
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டிஅளித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்தால் சுட்டிக்காட்டுவது நமது கடமை. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.
- Oct 27, 2025 12:31 IST
சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு.
சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையில் நாளை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.
- Oct 27, 2025 12:31 IST
எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மொத்தமாக 331 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- Oct 27, 2025 12:31 IST
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு 520 கிமீ தொலைவில் மோந்தா புயல் நிலைகொண்டுள்ளது. ஏற்கெனவே 16 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், திடீரென வேகத்தை கூட்டி 18 கிமீ நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Oct 27, 2025 12:18 IST
தெருநாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு. 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் வரும் 3ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Oct 27, 2025 12:15 IST
புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பங்களிப்புடன் மின் பேருந்து சேவை கூடாது என சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- Oct 27, 2025 12:14 IST
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் - உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- Oct 27, 2025 11:50 IST
கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - கைலாஷ் விஜய்வர்கியா கருத்தால் சர்ச்சை
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியில் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ”வெளியே செல்வதற்கு முன்பு அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது அந்த வீராங்கனைகளின் பொறுப்பாகும். இந்த சம்பவம் நமக்கும் அவர்களுக்கும் ஒரு பாடம். இனி அவர்கள் எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள்” என்று பா.ஜ.க அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- Oct 27, 2025 10:56 IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - சூர்யகாந்த்தை பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்
தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் எழுதியுள்ளார். பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 13-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அவர் சூர்யகாந்தை பரிந்துரைத்துள்ளார்.
- Oct 27, 2025 10:29 IST
புயல் நெருங்க நெருங்க சென்னையில் கனமழை - வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் மிதமான பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
- Oct 27, 2025 10:01 IST
மோந்தா புயல் எச்சரிக்கை - பூண்டி ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. மோந்தா புயலால் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
- Oct 27, 2025 09:13 IST
மணிக்கு 15.கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல் - சென்னையில் மிதமான மழை
சென்னைக்கு 560 கி.மீ தென்கிழக்கில், மோந்தா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை யைமம் அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான இந்த புயல் மணிக்கு 15.கி.மீ வேகத்தில் நகர்வதாகவும் கூறியுள்ளது. ஆந்திராவை நோக்கி மோந்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
- Oct 27, 2025 08:46 IST
வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 30 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Oct 27, 2025 08:45 IST
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- Oct 27, 2025 08:44 IST
கரூர் சம்பவம் தொடர்பான 6 வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.இதில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரிய மனுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரிய மனுக்கள், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்டவை அடங்கும்.
- Oct 27, 2025 08:08 IST
கபடி போட்டியில் தங்கம் - கண்ணகி நகர் திரும்பிய கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற மகளிர் அணியில் இடம்பெற்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா கண்ணகி நகர் வந்த நிலையில், காவல்துறை, கண்ணகி நகர் பொதுமக்கள் மற்றும் சக கபடி வீராங்கனைகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- Oct 27, 2025 08:07 IST
கவிஞர் சினேகன் தந்தை மறைவு
தஞ்சை, புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் பாடலாசிரியர் சினேகனின்
தந்தை சிவசங்கு தனது 102 வயதில் காலமானார். - Oct 27, 2025 07:25 IST
ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை கருத்து
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்திய பிரதேச பா.ஜ.க அமைச்சர், வீராங்கனைகளுக்கு இதுஒரு பாடம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களை குறை கூறுகிறார் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us