Advertisment

சென்னை உள்பட இந்த 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
rain tamil nadu

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆறு, குளம், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.26) பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை னிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களி  மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து வானிலை மையம்  வெளியிட்ட அறிவிப்பில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 27.11.2023 முதல் 01.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை நிலவரம் 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள், நாளை 27.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென  
 அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rain In Tamilnadu Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment