வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து சில இடங்களில் தடைபட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, திருச்சி கிராப்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் 120 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படை அணியினர், தற்பொழுது நிலவி வரும் காலநிலை அவசரம் கருதி வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்புக்கான ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆயுதப்படையின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயராம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி கமாண்டென்ட் ஆனந்தன், திருச்சி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் ஆயுதப்படையை சேர்ந்த அனைத்து கமாண்டென்ட்க்கள் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
மேலும், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் ஆகிய இடங்களில் ஏற்படும் பேரிடர் மீட்பு பணிக்கு இப்படை ஏந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“