Advertisment

தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசான மழை; சென்னை நிலவரம் என்ன?

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Advertisment

 அதேபோல் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நகரில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் அதைப் போல, நாளையும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 5-ம் தேதிவரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment