வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு இன்று (நவ.13) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சில மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 2-வது நாளாக இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. கொள்ளிடத்தில் 13.4 செ.மீ, தரங்கம்பாடியில் 5.9 செ.மீ, செம்பனார்கோவிலில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“