/indian-express-tamil/media/media_files/mmQfLVx8TaLx9IKNSFmn.jpg)
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.05.2025) மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. இப்பேரணி காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறுகிறது. இப்பேரணியில் அமைச்சர்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாலை 4 முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்:
1. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
2. அண்ணா சிலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு → ஜிபி சாலை→ டவர் கிளாக்ஜிஆர்எச் பாயிண்ட் ராயப்பேட்டை ஹை ரோடு → லாயிட்ஸ் சாலை ஜம்புலிங்கம் தெரு ஆர்.கே.சாலை வி.எம். தெரு, மந்தைவெளி மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷ் சந்திப்பை அடையலாம்.
3. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி R.A.புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK 1160060, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 1200 மணி முதல் 2100 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:
1. காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கிவிடும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்த சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி வெல்லிங்டன் கல்லூரி, ஸ்கௌட் மைதானம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. பங்கேற்பாளர்களுக்காக பொதுப்பணித்துறை மைதானத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. விஜபி வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்திற்குள் நுழையலாம்.
4. பொது வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.