இமானுவேல் சேகரன் நினைவு தினம்: ராமநாதபுரத்தில் போலீஸ் குவிப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மாவட்டம் முழுவதும் ஆறு ஆன்லைன் செக்போஸ்ட் உட்பட, 32வீடியோ கேமராவுடன் கூடிய 16செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஆறு ஆன்லைன் செக்போஸ்ட் உட்பட, 32வீடியோ கேமராவுடன் கூடிய 16செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Police nh

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும்  பாதுகாப்பு பணியில் 2ஆயிரத்து 200போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். சுற்றுலா, தனியார் வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொது அமைதியை குலைக்கும் வகையில் பிளக்ஸ் வைக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்களில் மைக்செட் பயன்படுத்தக் கூடாது. டிராக்டர், டூவீலர், சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது. வாகனங்களில் மேற்கூரைகளில் அமர்ந்து செல்லக்கூடாது.

ஒவ்வொரு வாகனத்திலும் காவல்துறை அனுமதி அட்டை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களில் பேனர்கள், கொடி மற்றும் கம்புகள் கட்டி செல்லக்கூடாது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர் மட்டும் அவர்களுடன் மூன்று வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் செக்போஸ்டிலேயே வாகனங்கள் சொந்தமானதா, வாடகை வாகனமா என ஆன்லைன் மூலம் பரிசோதனை நடக்க உள்ளது.

Advertisment
Advertisements

இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல், விழுப்புரம், திருண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி, செங்கல்பட்டு ஆகிய வெளி மாவட்ட போலீசார் மற்றும் சிவகங்கை மாவட்ட போலீசார் உள்ளிட்ட 2ஆயிரத்து 200போலீசார், 340இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் மேலும் ஒரு எஸ்பி, 6ஏடிஎஸ்பி, 20ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள், 70இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியை கண்காணிக்க உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் ஆறு ஆன்லைன் செக்போஸ்ட் உட்பட, 32வீடியோ கேமராவுடன் கூடிய 16செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 36வாகனங்களில் மொபைல் போலீசார், 40டூவீலர் மொபைல் போலீசார் கண்காணிப்பு பணியிலும், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாகனங்களில் மொபைல் கேமராக்கள் ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: