குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 எப்போது? அமைச்சர் சக்கரபாணி பதில்

Ration Card Update : தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

which standard your ration card, know your ration card benefits, ரேஷன் அட்டை, ரேசன் அட்டை, ரேஷன் கார்டு, ரேஷன் அட்டை, குடும்ப அட்டை, ரேஷன் கார்டு தரநிலை, தமிழ்நாடு, family card, PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC, ration card standards, which category your ration card, pds, tamil nadu ration card

Tamilnadu Ration Card Incentive Update : தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் நிதி நிலை அறிக்கையை கருத்தில் கொண்டு விரைவில் அறிவிப்பார் என்று உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தலுக்கு முன்பு பெண்களை மையப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முக்கியமாக உள்ளது. இதில் நகர பெருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்பதலைவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் அது குறித்து தற்போதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.  திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக உணவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட  உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

ரேஷன் கார்டுகளுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நிதியாக14 வகையான தரமான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன்கார்டுகளை பெற எளிய வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில், ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன்காடுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், உரிய நேரத்தில் நிதி நிலையை கருத்தில் கொண்டு அறிவிப்பார் என்று கூறியுள்ளார்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu ration card head of the family 1000 rupee incentive

Next Story
இரவு 9 மணி வரை கடைகள் இயங்க அனுமதி; தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்புTN govt announced, tea shop open from june 14th, further covid lockdown restrictios and relaxations, tamil nadu, தமிழ்நாடு, தேநீர் கடைகள் திறக்க அனுமதி, ஜூன் 14 முதல் தேநீர் கடைகள் திறக்க அனுமதி, டீ கடைகள் திறக்க அனுமதி, முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு, மேலும் சில தளர்வுகள், tea shop reopen from june 14th, restrictions continue in 11 districts, construction office functioning allowed, mk stalin, cm mk stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X