புதிய ரேஷன் கார்டு வாங்க இது முக்கியம்: பெயர் நீக்க சிம்பிள் வழிமுறை

Tamilnadu Ration Card News : ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது கடினமா என்று கேட்டால் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சுலபமான வழிகள் உள்ளது

TN Ration Card Name Remove Simple Way : இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன்கார்டு இன்றியமையாதது. பெரும் பணக்காரர்கள் முதல் சாதாரண ஏழை மக்கள் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன்கார்டு ஒரு முக்கிய ஆவனமாக செயல்படுகிறது. அரசின் சலுகைகள் பெறவும், நியாயவிலை கடையில் பொருட்கள பெற்றுக்கொள்ளவும்  என பல வழிகளில் பயன்படும் இந்த ரேஷன்கார்டை ஆவணத்திற்காகவே சிலர் பயன்படுத்தி வரும் நிலையும் உள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் ரேஷன் அட்டை இன்றியமையாத ஒரு பயன்பாடாக இருக்கும் நிலையில், புதிதாக திருணம் ஆனவர்கள் புதிய ரேஷன்கார்டை பெற ஆண் மற்றும் பெண் இருவரின் வீட்டிலும் உள்ள ரேஷன் கார்டில் அவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக மட்டும் அல்ல, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒருவர் இறந்துவிட்டாலும் அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டியது கட்டாயம்.

மேலும் ஒருவரின் பெயர் புதிதாக ரேஷன் அட்டையில் பதிய வேண்டும் என்றால், ஏற்கனவே அவரது பெயர் இடம்பெற்றுள்ள பழைய ரேஷன்கார்டில் இருந்து அவரது பெயரை நீங்க வேண்டியது கட்டாயம். ஒருவரின் பெயர் ஒரு ரேஷன்கார்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், பழைய கார்டில பெயர் நீக்கம் செய்யமால் புதிய கார்டு வாங்க முயற்சி செய்யும் போது மோசடி செய்த குற்றம் உங்கள் மேல் சுமத்தப்படும்.  ஆகவே அரசின் விதிகளை பின்பற்றி ஒரு ரேஷன்கார்டில் பெயர் நீக்கியபிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது கடினமா என்று கேட்டால் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சுலபமான வழிகள் உள்ளது. அரசின் சேவைகள் தற்போது டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் முறையில் எளிமையாக உங்களது பெயரை பழைய ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்யலாம்.

ரேஷன் கார்டில் ஆன்லைன்முறையில் பெயர் நீக்கம் செய்ய வழிமுறைகள் :

முதலில் தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.

அதில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் இருக்கும்  இதில் நீங்கள் தமிழை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ என்ற ஒரு பகுதியை கிளிக் செய்து `குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.

அடுத்து தோன்றும் புதிய பக்கத்தில், பழைய ரேஷன் கார்டுடன் இணைந்துள்ள உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.  

அதன்பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி (OTP) பதிவிட்டு, ‘பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்தவுடன் உங்களர் ரேஷன் கார்டின் விவரங்கள் தெரிய வரும்.

அதில்  இடதுபுறத்தில் உள்ள ‘அட்டை பிறழ்வு’ என்பதை க்ளிக் செய்து அடுத்து புதிய கோரிக்கைகள் என்பதை க்ளிக் செய்யவும். 

அடுத்து திரையில் தோன்றும் பக்கத்தில், உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் நியாய விலைக் கடையின் குறியீட்டு எண் ஆகியவற்றை சரி பார்த்து ‘சேவையைத் தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஒரு விருப்பத்தில் உள்ள ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்யவும்.

அதன்பிறகு திரையில் தோன்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து,  நீக்கத்திற்கான காரணத்தை ‘காரணம்’ அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.  

அதன்பிறகு பெயர் நீக்குவதற்கு தகுந்த ஆவணத்தை அப்லோடு செய்ய வேண்டும். (திருமணமான பெண் அல்லது ஆணின் பெயரையோ நீக்க திருமணச் சான்றிதழை பதிவேற்றவும்.  இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை பதிவேற்றவும்.? 

அடுத்து பதிவு செய்ய’ என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் கோரிக்கை பதிவு செய்யப்படும். இதனை உறுதிப்படுத்தும் வகையில். திரையில் பச்சை நிறத்தில் `டிக்’ மார்க் தோன்றும். 

இதன் பிறகு உங்களது கோரிக்கை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ள கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஓரிரு நாட்களில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உங்களது பெயர் நீக்கம் செய்யப்படும்.

ஓரிரு நாள்கள் கழித்து இதே இணையதளத்தில், ‘அட்டை தொடர்பான சேவை நிலை அறிய’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துக் கொள்ளலாம். உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்ட உடன், ‘சான்றிதழ் பதிவிறக்கம்’ என்ற வசதியை கிளிக் செய்து  சான்றிதழை பெற்றுக்கொள்ளாலம். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது இந்த சான்றிதழ் தேவைப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu ration card name remove simple way update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com