Tamilnadu Ration Card Update : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக சார்பில் பெண்கள் வளர்ச்சிக்காக பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக மாநகர பேருந்துகளில்பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆவின் பால் விலைக்குறைப்பு செய்யப்பட்டது.
இதனையடுத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பு எழுந்த நிலையில், இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் பலரும் கூறி வந்தனர். இந்த திட்டத்தில் பயன்பெறும் முனைப்புடன் இதுவரை ரேஷன்கார்டு பெறாதவர்கள் பலரும் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், ஒரு நபர் ரேஷன் எண்ணிக்கை தற்போது பெருமளவில் அதிகரித்துள்ள்து.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடரில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டு மற்றும் போலி ரேஷன் காரடுகள் கண்டறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் ஒரு நபர் ரேஷன் கார்டுக்கு ரேஷன் ஊழியர்கள் பொருட்கள் வழங்காமல் அவர்களை திருப்பி அனுப்புவாதாகம், இது குறித்து அதிகாரிகரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை என்று மக்கள் புகார் கூறி வரும் நிலையில், ஒரு நபர் ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டுமென்றும், ரேஷன் கடைகளில் எந்தவித சிக்கல் இல்லாமல் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil