தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு செலவு செய்வது இல்லை. மத்திய அரசே செலவு செய்கிறது. ஒவ்வொரு நபருக்கும் மாதம் 5 கிலோ அரிசியும், 1 கிலோ பருப்பும் வழங்குவதற்கு மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை, இது 100 சதவீதம் மத்திய அரசின் மானியம், என்று எச். ராஜா பேசி இருந்தார்.
ஆனால் ஹெச்.ராஜா பேசியதில் தம்பிடி உண்மைக் கூட இல்லை என்று, தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தரவுகளுடன் தமிழக அரசு அளித்த விளக்கம்
/indian-express-tamil/media/media_files/4luaap6OKERV9KT1PDAX.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“