/tamil-ie/media/media_files/uploads/2022/06/Ration-Card.jpg)
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கூட்டுக் குழு தலைவர் என்.டி.ஆர். ஒருங்கிணைப்பாளர். சிவ. தியாகராஜன். பீட்டர் சேகர். மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அண்ணாதுரை. நியாய விலை கடை பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர். தங்கபூமி. மாவட்ட செயலாளர். கணேசன். மாவட்ட பொருளாளர். மலையாளம். முத்து. பிரகாஷ். அந்தோணி. ஆறுமுகம். சுந்தர்ராஜன். ரவி. கண்ணன். மகளிர் அணி. சரோஜா. ஜீவிதா. புவனேஸ்வரி. தனலட்சுமி. மாலதி. மேரி. ரேணுகா. வசந்தா. மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.