2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ2000: இன்று முதல் பெறலாம்

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில், அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று தொடங்கி, முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

stalin

TN Govt Corona Relief Rs 2000 per Each Ration Card : கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கும் திட்டத்தின் கோப்புகளில், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தனது முதல் கையெழுதிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில், அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று தொடங்கி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை உணவுத் துறை அமைச்சர் ஏ.ஆர்.சக்கரபாணி சந்தித்துப் பேசினார்.

‘தமிழகத்தில் உள்ள 2,07,66,950 அரிசி அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தினமும் 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட உள்ளது.

அமைச்சர்கள் இத்திட்டத்தை மாவட்ட வாரியாக தொடங்கி வைக்க உள்ளனர். இந்த திட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் முன்னர் வலியிறுத்தி உள்ளார். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசு கருவூலத்திலிருந்து 4,153 கோடி செலவாகும்’, என குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu ration shops corona relief fund rs 2000 today disbursal cm stalin election manifesto

Next Story
இறையன்பு முதல் அனு ஜார்ஜ் வரை… ஸ்டாலின் பர்ஃபெக்ட் ஸ்டார்ட்!cm mk stalin's 4 personal secretaries, udayachandran ias, umanath ias, ms shanmugam ias, anu george ias, chief secretary iraianbu ias - தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், முதல்வரின் தனிச் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், எம் எஸ் சண்முகம் அனு ஜார்ஜ், cm mk stalin, dmk, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com