Tamilnadu Ration Card Change Update : தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தொறும் 1000 ரூபாய் வழங்கப்படும் எனறு அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு 4000 ரூபாய், என பல திட்டங்களை அறிவித்த்து.
இதில் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்கள் இலவச பயணம், கொரோனா நிவாரணம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு இன்னும் எந்த அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது. ஆனால் செய்தியாளர்கள் இந்த திட்டம் குறித்து அமைச்சர்களிடம் கேட்குமபோது நிதிநிலையை கருத்தில் கொண்டு முதல்வர் விரைவில் இத்திட்டம்குறித்து அறிவிப்பை வெளியிடவார் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில் குடும்ப அட்டையில குடும்ப தலைவியின்புகைப்படம் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற முடிவும் என்ற தகவல் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் பெயர் மட்டும் இருந்தால் போதுமா? புகைப்படமும் இருக்க வேண்டுமா? என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதில் பலர் குடும்ப அட்டையில் குடும்ப தலையின் புகைப்படத்தை மாற்றித்தரக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். மக்களின் இந்த தேவையை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் சில மோசடி நபர்கள் ரேஷன் கார்டுகளில் உடனடியாக மாற்றம் செயவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர். இதில் ரூ 1000 செலுத்தினால், ரேஷன் கார்டில அனைத்து மாற்றங்களையும் செய்யலாம் என்று கூறியதை கேட்டு பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதில் உங்கள் ரேஷன் கார்டில் தேவையான மாற்றங்களை நீங்களே ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.
இதற்கான வழிமுறைகள்.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpds.gov.in-சென்று பயனாளர் நுழைவு’ என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அடுத்த பக்கத்தில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணை பதிவிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு கிடைக்கும் ஒடிபியை உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவும். இதில் ‘குடும்ப உறுப்பினர்கள்’ என்பதை தேர்வு செய்து நீங்கள் குடும்ப தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்களைக் காணலாம்.
மேலும் புகைப்படத்தை மாற்ற, அட்டை பிறழ்வுகள் என்னும் பிரிவை கிளிக் செய்து புதிய கோரிக்கை-ஐ தேர்ந்தெடுத்து, அதில் புகைப்படம் அல்லது பெயர் இவற்றில் செய்ய வேண்டிய மாற்றத்தை செய்யலாம்.
தேவையான மாற்றங்களை செய்த பின்னர் ‘ஓகே’ கொடுத்து வெளியேவரவும். நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். ஆன்லைனில் இந்த செயல்முறையை எளிதாக செய்து முடிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil