மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் ஏற்ற இருந்த கட்சியின் கொடி கம்பத்திற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் என்ற கிராம்த்தில், கடந்த 1996-ம் ஆண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. 25 அடி உயரம் கொண்ட இந்த கொடிக்கம்பத்தல் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார்.
தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சநத்தம் கிராமத்தில் உள்ள 25 அடி உயரமான கொடி கம்பத்தை, 45 அடி உயரமாக மாற்றப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்ற இருந்தார். இது தொடர்பான நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 8) வெளிச்சநத்தம் கிராமத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் மதுரையில் நாளை (டிசம்பர் 8) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கும் திருமாவளவன், இந்த கொடி கம்பத்தில் கொடி ஏற்ற இருந்த நிலையில், இந்த கொடி கம்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுத்துள்ளது. 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்திற்கு மட்டுமே அனுமதி என்றும், தற்போது 45 அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு அனுமதி இல்லை என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த பதில் வி.சி.க கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொடி கம்பம் முன்பாக 20-க்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil